பேச்சு:கடுங்கரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராஃபைட் - தமிழாக்கம்[தொகு]

(இரவியின் பேச்சுப் பக்கத்திலிருந்து)

கிராஃபைட் என்ற சொல்லுக்கு அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காரீயம் என மொழிபெயர்ப்புத் தரப்பட்டுள்ளது. பொதுவாக tin வெள்ளீயம் என்றும் lead ஈயம்/காரீயம் எனவும் அழைக்கப்படுகிறது. நமது தமிழ் விக்கிப்பீடியாவிலும் தேடினால் இந்த பொருள்படவே பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்சனரியில் கிராஃபைட் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு கடுங்கரி, பென்சிற்கரி எனத் தரப்பட்டுள்ளன. ஆனால் காரீயம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு கிராஃபைட் என ஆங்கில இணைச்சொல் தரப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு பாடபுத்தக ஆதாரமும் (dead link) தரப்பட்டுள்ளது. எனக்கு கரியம் என்பதே தவறாக அச்சிடப்பட்டிருக்கலாமோ என்ற குழப்பம் உள்ளது. புதிய கட்டுரை துவங்கும் முன் அறிந்தவர்கள் இதனைத் தெளிவுபடுத்துவது நல்லது. --மணியன் (பேச்சு) 16:18, 2 ஏப்ரல் 2012 (UTC)
எனக்கும் இதே குழப்பம் இருந்தது. விக்சனரியை அடிப்படையாக வைத்தே ஆங்கில விக்கி இணைப்பு தந்தேன். தற்போதைக்கு அண்மைய மாற்றத் தூண்டலில் இருந்து விலக்கி வைக்கலாம்--இரவி (பேச்சு) 18:24, 2 ஏப்ரல் 2012 (UTC)

இலங்கை வழக்கின்படி Lead என்பது ஈயம் என்றே அழைக்கப்படுகின்றது. நான் இப்போது தான் Lead என்பது காரீயம் என்பதைக் குறிப்பதாகக் கேள்விப்படுகின்றேன். அவ்வாறு எங்கேயும் பயன்படுத்தப்படுவதாக அறியவில்லை. Graphite என்பது காரீயம் என்றே இலங்கைப் பாடநூல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. --மதனாஹரன் (பேச்சு) 09:54, 3 ஏப்ரல் 2012 (UTC)

விக்சனரிப்படி கடுங்கரி எனத் தலைப்பிட்டு காரீயத்திற்கு வழிமாற்று கொடுத்துள்ளேன். --மணியன் (பேச்சு) 03:53, 4 ஏப்ரல் 2012 (UTC)

மதனாகரன் சொல்வது சரி. Graphite என்பதுதான் காரீயம். Lead என்பது வெறுமனே ஈயம்.--பாஹிம் (பேச்சு) 04:26, 4 ஏப்ரல் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடுங்கரி&oldid=1537381" இலிருந்து மீள்விக்கப்பட்டது