பேச்சு:கடல் தேவதை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு[தொகு]

தமிழில் கடற்தேவதை மீன்கள் என்று பெயரிடப்படலாமெனின் எதற்காக இந்த விநோதமான தலைப்பு? ஆயினும் கடல் தேவதை மீன்கள் என்றெழுதுவதே சாலச் சிறந்தது. இத்தகைய தலைப்புக்களில் புணர்த்தாமல் பிரித்தெழுதுவதே நல்லது. அது எளிதாகத் தேட வழி வகுக்கும். புணர்த்துவதாயின் கடற்றேவதை மீன்கள் என்று குறிப்பிட்டாக வேண்டும். --பாஹிம் (பேச்சு) 03:34, 28 பெப்ரவரி 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று, கடல் தேவதை மீன் என்று தலைப்பை மாற்றியுள்ளேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 14:59, 4 மார்ச் 2019 (UTC)

தலைப்பு - திமிலை மீன்[தொகு]

தமிழ்நாடு அரசின் பதினொன்றாம் வகுப்புப் பாடநூலில் இம்மீனின் பெயர் திமிலை மீன் என்று குறிக்கப்பட்டுள்ளது.[1] இப்பெயர் எளிதாகவும் பள்ளி மாணவர்களால் இணையத்தில் தேடி அடையவும் முடியும் என்பதால், இதன் தலைப்பை திமிலை மீன் என மாற்றப்பரிந்துரைக்கிறேன்.

மேற்கோள்கள்[தொகு]

  1. உயிரியல் (விலங்கியல்) (முதல் பதிப்பு ). சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2005. பக். 215. https://drive.google.com/open?id=1uib8xXxG7mXhubA7hAxGjndhL2NVZTkS. பார்த்த நாள்: 8 April 2020.