பேச்சு:கடல் இழுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png கடல் இழுது உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Exquisite-kfind.png கடல் இழுது எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தலைப்பு பற்றி[தொகு]

சொறிமுட்டை எனும் பெயர் வழக்கில் உள்ளது போல பெயர்க்காரணம் எழுதப்பட்டுள்ளது. இது வழக்கில் இருந்தால் சான்று எதுவும் உள்ளதா? கழகப் பேரகரமுதலியில் சொறி என அழைகப்படுவதாகத் தந்துள்ளார்கள். முட்டை எனும் ஒட்டு இது ஏதோ ஒரு வகை முட்டை என்பது போல மயக்கம் தருவதாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 13:38, 16 அக்டோபர் 2011 (UTC)

தமிழில் வழக்கத்தில் உள்ளதையே பெயராகக் கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் செல்லி மீன் என இருப்பதால் அதற்கு மாற்றாக மொழிப்பெயர்த்து தமிழிலும் அழைப்பது எங்ஙனம் பொருந்தும். காட்டாக Sea cow என்று அழைக்கப்படும் Dugong இன் தமிழ்ப்பெயர் கடற்பன்றி என்பதாகும். ஆனால் இன்று ஆங்கிலத்தில் என்ன வழங்குகின்றனரோ அதற்கு மாற்றக அப்படியே மொழிபெயர்த்து கடற்பசு என அழைப்பது பொருந்தாது என்பது என் தாழ்மையானக் கருத்து. தமிழகக் கடற்பகுதியில் காணப்படும் பெரும்பான்மையான உயிரினங்களுக்கு தமிழ்ப்பெயர் இருக்கிறது. இது இக்காலத்தில் மறைக்கப்பட்டுள்ளது அவ்வளவே. ஏன் பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கும் டால்பின் என்னும் பாலூட்டிக்கே தமிழில் பொமிகரா (Pomigra) என்னும் பெயர் 1850 முதல் மேற்கோள் உள்ளது. இந்திய மொழிகளிலேயே டால்பினின் பெயருக்கு மாற்று மொழியில் மேற்கோளிடப்பட்ட ஒரே மொழி தமிழாகும். உங்களுக்கு ஐயமிருப்பின் மேலே குறிப்பிட்ட அங்கிலப்பெயரை கூகுள் தேடலில் இட்டுப்பாருங்கள். முன்பு சொறிமுட்டை என்பதற்கு மேற்கோள் கொடுக்கப்படவில்லை. இப்போது கொடுத்திருக்கிறேன். மேலும் மேற்கோள் கொடுக்காமல் கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இன்னும் பதிவேற்றம் மீதம் உள்ளது.. அது கழிந்தவுடன் படிப்படியாக அதன் மேற்கோள்களையும் இடுகிறேன். அதற்கு சில காலம் பிடிக்கும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:51, 16 அக்டோபர் 2011 (UTC)

சிங்கமுகன், நீங்கள் தந்துள்ள இணைப்பில் The Indian jelly fish, popularly known in Tamil as Muttai Chori belongs to the phylum Coelenterata, sub-phylum Medusozoa, class Scyphozoa, order Rhizostomeae, family Rhizostomatidae and genus Rhizostoma எனத் தரப்பட்டிருக்கிறது. Muttai Chori எப்படி சொறிமுட்டை ஆனது?--Kanags \உரையாடுக 21:26, 16 அக்டோபர் 2011 (UTC)

அது விக்சனரியால் ஆனது. விக்சனரியில் துலாவிய போது சொறிமுட்டை என்றே கிட்டியது. மேலும் அவர் முட்டை என்பது ஒட்டியதுப்போல் தோன்றியது என்றார். நான் அம்முட்டை நான் உருவாக்கவில்லை அது முன்னரே பயன்பாட்டில் உள்ளது என்பதற்காகவே அவ்விணைப்பை இட்டேன். நன்றிகளுடன்.--சிங்கமுகன் 09:43, 17 அக்டோபர் 2011 (UTC)

சிங்கமுகன், விக்சனரியில் இரு பக்கங்களில் சொறிமுட்டை என்பதை நீங்களே சேர்த்துள்ளீர்கள். காண்க: [1] [2]. ஆனால் இங்கு விக்சனரியில் துழாவியபோது கிடைத்ததாகச் சொல்கிறீர்கள். நீங்கள் அங்கு இந்தச் சொல்லை வேறு எந்தப் பக்கத்திலாவது பார்த்திருந்தீர்களா? (நீங்கள் சேர்த்திருக்கும் மேற்கோளை நான் இன்னும் பார்க்கவில்லை, அது தொடர்பில் சிறீதரன் கனகுவின் கேள்விக்கும் விடையளிக்க வேண்டுகிறேன். ஏற்கனவே வழக்குப்பெற்ற நல்ல தமிழ்ச் சொற்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் இங்குள்ள எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், புத்தாக்கங்களாக இருக்குமிடத்தில் பொருட்குற்றத்துடன் பதிந்துவிடக்கூடாது. -- சுந்தர் \பேச்சு 04:02, 19 அக்டோபர் 2011 (UTC)

ஐயையோ நானும் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். மேலும் நீங்கள் முதலில் கொடுத்த தகவலை சொடுக்கிப் பாருங்கள். இதில் 30 சூலை 2010; இல் டமில்பாட் என்பவர் இதைத் திருத்தி இருப்பார். அதிலேயே சொறிமுட்டை என்பதுக் காணப்படுகிறது. அதில் விளக்கங்கள் மட்டும் தான் நான் எழுதி இருப்பேன். இரண்டாவது கொடுத்தத் தகவலில் தான் நான் பின்வரும் மூன்றுப் பெயர்களை முன்கொடுத்த இணைப்பில் இருப்பதுப் போலவே செர்த்திருப்பேன். நான் மாற்றிமாற்றிச் சொல்லலைங்க. நம்புங்க. நன்றிகளுடன்.--சிங்கமுகன் 05:53, 19 அக்டோபர் 2011 (UTC)

தவறுக்கு வருந்துகிறேன், சிங்கமுகன். மன்னியுங்கள். (நீங்கள் வேண்டுமென்றே மாற்றிச் சொல்வதாக நினைக்கவில்லை, முதல் பதிப்பு எங்கிருந்து வந்தது என அறிந்து கொள்ளவே கேட்டேன்.) முதலாவது பக்கத்தை உருவாக்கி அந்தச் சொல்லை இட்டதே நான் இயக்கிய தானியங்கிதான் என இப்போது அறிந்து கொண்டேன்! அதனால், இது தமிழ் இணையக்கழக அகரமுதலியில் இருந்து வந்துள்ள தகவல். இதுவே தொடரட்டும். அதுவே வழக்கிலும் இருக்கிறது என உறுதியாகத் தெரிந்தால் கூடுதல் மகிழ்ச்சி. -- சுந்தர் \பேச்சு 06:02, 19 அக்டோபர் 2011 (UTC)

நன்றிகள். நானும் அவ்வாறு நினைக்கவில்லை. எல்லாம் ஒரு நகைச்சேர்க்கவே. அன்புடன்.--சிங்கமுகன் 06:17, 19 அக்டோபர் 2011 (UTC)

வணக்கம்[தொகு]

நான் ஜெல்லிமீன் பற்றிய ஒரு கட்டுரையை எழுதுவதற்காக தேடும்போது இக்கட்டுரை கிடைக்க வில்லை. கடல் வாழிகள். மெல்லுடலிகள் என்ற பல பெயர்களில் தேடி, பின்பு ஆங்கில விக்கியில் ஜெல்லிமீனின் படம் சொறி முட்டை கட்டுரையில் பயன் படுத்தப்பட்டிருப்பதைக் கொண்டு சொறி முட்டை என்பது ஜெல்லி மீன் என அறிந்து கொண்டேன். என் போல மாணவர்கள் இத்தலைப்பில் தேடும் போது கிடைக்கவில்லை எனில் இல்லை என்ற எண்னம் ஏற்படும் அல்லவா? அதற்காக இதன் பொதுவாகப் பயன்படுத்தும் பெயரை அடைப்புக்குள் அல்லது கட்டுரையில் ஏதேனும் ஓர் இடத்தில் தரலாம் என்பது என் கருத்து.--Parvathisri 15:12, 17 நவம்பர் 2011 (UTC)

அடைப்புகளிலும் சேர்க்கலாம், வழிமாற்றும் உருவாக்கலாம். --சோடாபாட்டில்உரையாடுக 15:35, 17 நவம்பர் 2011 (UTC)

ஆம், அறிவியல் கட்டுரைகள் உருவாக்குபவர்கள் கட்டாயம் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டுரை ஆரம்பத்திலேயே தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் அதன் பொதுப் பெயர், அறிவியல் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:36, 17 நவம்பர் 2011 (UTC)

இழுது மீன்கள் ஏற்படுத்தும் விளைவின் காரணமாக அவற்றை சொறி மீன்கள் என்று அழைக்கின்றனர். எனினும் இழுது மீன் என்பதே பொதுவான பெயரும் நல்ல தமிழ் மொழிப்பெயர்ப்பும் ஆகும்.(Jelly=இழுது) எனவே இழுது மீன் என்ற தலைப்பிற்கு இப்பக்கத்தை மாற்றலாம்.Varunkumar19 (பேச்சு) 02:26, 1 பெப்ரவரி 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடல்_இழுது&oldid=2647833" இருந்து மீள்விக்கப்பட்டது