பேச்சு:கடல் நாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேச்சு:கடல்நாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடல் நாய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Pinniped - தமிழ்ச்சொல்[தொகு]

Pinniped (= fin-feet/winged feet) - இதனை தப்பைக்காலி அல்லது துடுப்புக்காலி எனலாமா? --சிவகுமார் \பேச்சு 12:41, 23 ஜனவரி 2008 (UTC)

இரண்டும் நல்ல சொற்கள், சிவகுமார். துடுப்புக்கால் உடையன, துடுப்புக்காலிகள் எனலாம். ஏதோ முரட்டுத் துடுப்பாட்டக்காரர்கள் என்று சிலர் நினைக்கலாம் :) --செல்வா 15:10, 25 மார்ச் 2008 (UTC)
செல்வா, wikt:pinniped விக்சனரியில் சேர்த்துள்ளேன். --சிவக்குமார் \பேச்சு 10:38, 28 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் - 6 (நீர் வாழ்வன), (என். சீனிவாசன், வித்யா பப்ளிகேசன்சு, 1999) என்னும் நூலில் பின்னிபேடியா என்பதற்கு துடுப்புக்காலி என்னும் சொல்லை ஆண்டுள்ளனர்.--சிவக்குமார் \பேச்சு 20:01, 17 டிசம்பர் 2008 (UTC)

பாருங்கள், சிவா! இதுதான் அருமை. எளிய சொல். பலரும் தாங்களாகவே ஆக்கவும் இயலும். எடுத்தாள வேண்டியது நமது பொறுப்பு. விரிவாக்கவும் வேண்டும். --செல்வா 20:18, 17 டிசம்பர் 2008 (UTC)
ஆம் செல்வா, உண்மை. மேலும் சில சொற்களை இப்பக்கத்தில் கொடுத்துள்ளேன். --சிவக்குமார் \பேச்சு 16:57, 19 டிசம்பர் 2008 (UTC)

நீர் நாய் என்பதை இதற்கு வழிமாற்றியுள்ளனர். நீர் நாய் என்பது வேறினம், இது வேறினம். எமது பகுதியில் நீர் நாயை ஆற்று நாய் என்கின்றனர். எனவே, நீர் நாய் என்ற வழிமாற்றுக் கட்டுரையை நீக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 12:37, 7 மே 2012 (UTC)[பதிலளி]

நீர்நாய் இங்குளது இது தான் சரியென்றால் நீர் நாய் வழிமாற்று தற்பொது சரியாகவே உள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:51, 15 மே 2012 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

துடுப்புக்காலி என்பது pinniped என்பதற்கான பொதுப்பெயர். எனவே கட்டுரைத் தலைப்பை சீல் என்றோ அல்லது கடல் நாய் என்றோ மாற்றுவது பொருத்தமாக இருக்கும்.--சிவக்குமார் \பேச்சு 05:23, 16 மே 2012 (UTC)[பதிலளி]

எவரும் மறுப்புத் தெரிவிக்காததால் தலைப்பை மாற்றியுள்ளேன். வேறு கருத்துகள் இருப்பின் உரையாடிப் பின் மாற்றலாம். ஆங்கிலத்திலும் seal என்பதற்கும் pinniped என்பதற்கும் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன.--சிவக்குமார் \பேச்சு 17:16, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]
சீல்- கடல்நாய். காண்க.தமிழ் அகராதி. மேலும்இங்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:12, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கடல்_நாய்&oldid=2663252" இலிருந்து மீள்விக்கப்பட்டது