பேச்சு:கச்சத்தீவு உரிமைச் சிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முரண்[தொகு]

இக்கட்டுரை முற்று முழுதாக இந்திய சார்பாக எழுதப்பட்டுள்ளது. இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததாகக் கூறும் கதைகளெல்லாம் வெறுமனே இந்தியக் கருத்துக்கள் சில மட்டுமே. அத்துடன், இலங்கை எந்த அடிப்படையில் தனது உரிமையை நிலைநாட்டியது என்பது குறிப்பிடப்படவில்லை. கச்சதீவு தொடர்பான ஆவணங்கள் இந்தியா இலங்கையின் உரிமையை அங்கீகரித்தது என்றுதான் கூறுகின்றனவே தவிர, இந்தியா இலங்கைக்குக் கொடுத்ததாகக் கூறவில்லை.பாஹிம் (பேச்சு) 13:37, 8 பெப்ரவரி 2014 (UTC)

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"[தொகு]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)