பேச்சு:கங்கை, இந்து மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்கா தேவி என பெயர்மாற்ற பரிந்துரை[தொகு]

இந்து மதத்தில் கங்கை நதியாக மட்டுமல்ல,. பெண்ணாகவும் முன்னிருத்தப் பெறுகிறார். அதனால் கங்கா தேவி என்ற பெயரில் கட்டுரையை நகர்த்தினால் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரையின் தலைப்போடு ஒப்பிட்டே இந்தக் கட்டுரை பெயரிடப்பெற்றுள்ளது என்றாலும்,. இந்த கோரிக்கை சரியானதாக இருக்கமென நம்புகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:59, 12 சூன் 2013 (UTC)

இக்கட்டுரையில் கங்கை இந்து மதத்தில் எவ்வாறு சிறப்புப் பெறுகிறது என்பதை விளக்கும் பொதுவான கட்டுரையாகவே வளர்க்கப்பட்டுள்ளது. கங்காதேவியைப் பற்றியும் கட்டுரையில் குறிப்பிடலாம். உங்கள் தலைப்பு மாற்றம் பொருந்தாது என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:39, 12 சூன் 2013 (UTC)
ஏற்கிறேன் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:39, 17 சூன் 2013 (UTC)

மிகவும் நன்றாக, விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. படித்து மகிழ்ந்தேன். - Uksharma3 (பேச்சு) 16:07, 22 பெப்ரவரி 2014 (UTC)

ஆன்டன் சிறப்பான பணி, இப்படியே சைவ சமயத்தில் உள்ள தேவையற்ற கட்டுரைகளையும் நீக்கி சிறப்பான கட்டுரையுடன் இணைக்க வேண்டுகிறேன். வேறு சில பணிகளின் காரணமாக விக்கிப்பீடியாவில் பங்கெடுக்க இயலவில்லை. பொதுவாக கங்கையைப் பற்றி கூறும் போது, சைவ சமயக் கட்டுரையிலிருந்து எடுத்து இங்கு இடப்பட்டிருக்கும் செய்திகளால் குழப்பம் நேரிடும். அதனால் தாங்கள் கங்கை சைவ சமயம் என்ற கட்டுரையை அழிப்பதுடன் நிறுத்தியிருக்கலாம். இப்போது இக்கட்டுரையில் சைவ சமயத்தின் தாக்கமே மேலோங்கி இருப்பதாக எனக்குப் படுகிறது. நீங்கள் இது குறித்து என்ன நினைக்கின்றீர்கள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:44, 21 நவம்பர் 2016 (UTC)
கங்கை என்ற பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கத்தை இணைத்துள்ளேன். அதன் மூலம் கங்கை ஆறு தனியாக உள்ளது. இது முழுக்க சைவ சமயக் கருத்துக்களைக் கொண்டிருப்பது ஏற்றது என நினைக்கிறேன். கங்கா தேவி என்ற பெயரை முதன்மைப்படுத்தினாலும் ஏற்புடையதாகவே எனக்குப்படுகிறது. --AntanO 01:51, 22 நவம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:53, 22 நவம்பர் 2016 (UTC)