பேச்சு:கஃபா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காபா என்பது பிழை. க-ஃ-பா என்று வாசிக்க வேண்டும். ஆயினும் kafa என்று வாசித்து விடக் கூடாது என்பதற்காக கஉபா என மாற்றப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 10:46, 1 மே 2016 (UTC)[பதிலளி]

காபா என்பது ஏன் க-ஃ-பா என்று வாசிக்க வேண்டி வரும்? கஉபா என எழுதுவது இலக்கணத்துக்கு முரணில்லையா?--Kanags \உரையாடுக 10:59, 1 மே 2016 (UTC)[பதிலளி]

காபா என்றெதுவும் கிடையாது. அறபு மொழியில் கஃபா என்றிருக்கிறது. அஃது என்று வாசிப்பதைப் போன்று ஃ இல் நிறுத்தி வாசிக்க வேண்டும். தற்காலத்தில் சிலர் கஃபா என்றெழுதிவிட்டு kafa என்று மிகவும் பிழையாக வாசிக்கும் சாத்தியமுள்ளது. அத்துடன், மொழியிறுதியில் உயிரெழுத்துக்கள் வருவதற்கான உதாரணங்கள் இலக்கியங்களில் உள்ளன. மொழி முதலில் மட்டும் வர வேண்டுமென்று விதியில்லை.--பாஹிம் (பேச்சு) 11:10, 1 மே 2016 (UTC)[பதிலளி]

கஉபா என்ற தலைப்பும் பிழையாகத்தான் வாசிக்க நேரிடும்.--சுபைர் அக்மல் (பேச்சு) 11:18, 1 மே 2016 (UTC)[பதிலளி]
பாகிம், :இங்கு கஃபா என்று எழுதவில்லையே? காபா என்று தானே எழுதப்பட்டுள்ளது. அது எப்படி கஃபா எனப் படிப்பார்கள் எனத் தெரியவில்லை. மேலும், கஉபா என்பதில் மொழியிறுதியில் உயிரெழுத்து வருகிறதா? எங்கே, எப்போது? காட்டமுடியுமா? கஉபா என்பதை கவுபா என்று தான் தமிழில் எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 11:19, 1 மே 2016 (UTC)[பதிலளி]

காபா என்றெழுதியது முற்றிலும் பிழை. மொழியிறுதியில் வரக்கூடியன யாவும் மொழியிடையிலும் வரலாம். வர முடியாது என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 11:35, 1 மே 2016 (UTC)[பதிலளி]

சரி, கஃபா என்பதே சரி என்று சொல்லியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. அப்படியிருக்க கஉபா என மாற்றியிருக்கத் தேவையில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 11:46, 1 மே 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கஃபா&oldid=2058892" இலிருந்து மீள்விக்கப்பட்டது