பேச்சு:ஔவையார் வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையில் இந்த வழிபாடு நடப்பதுண்டா? இந்த விவரம் கிடைத்தால், கட்டுரையில் சேர்க்கலாம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:34, 15 சூலை 2012 (UTC)

ஔவையார் கொழுக்கட்டை எனும் உப்பில்லாக் கொழுக்கட்டையை எங்கள் சிறுவயதில், நானும் என் சகோதரர்களும் சேர்ந்து, ஒரு நாள் என் சகோதரியை மிரட்டி வாங்கிச் சாப்பிட்டு விட்டோம். இது என் அம்மாவிற்குத் தெரிந்து,திட்டினார்கள். அதன் பிறகு, என் அம்மா, எங்கள் வீட்டில் இந்தக் கொழுக்கட்டையைத் தயாரித்துக் கொடுத்தார்கள். அன்றிலிருந்து எங்கள் வீட்டு உணவுப் பட்டியலில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டு விட்டது. இந்தக் கொழுக்கட்டையுடன், தேங்காய்த் துண்டுகளைக் சேர்த்துச் சாப்பிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:43, 15 சூலை 2012 (UTC)
நேற்று தினமலரின் ஆன்மீக மலரில் இந்த சிறு துணுக்கைப் பார்த்ததும், மலரும் நினைவுகளாய்... சிறுவயது நினைவுகள் என்னை ஆக்கிரமித்தன. எனது அக்காவும் தங்கையும், மிகப் பெருமிதத்துடன் மறைத்து உண்பர். இது வழிபாடு முடிந்த பிறகு அதிகாலையில் நடக்கும். என்னை சமாதானப்படுத்த என் அம்மா, அன்று காலையில் 'விநாயகர் கொழுக்கட்டை' ( பூரணக் கொழுக்கட்டை) செய்து தருவார்கள்! விக்கிபீடியாவில் கட்டுரை எழுத எண்ணி, என் மனைவியிடம் மேலதிக விவரம் கேட்டபோது... சொல்லக்கூடாது என்ற மறுப்பே வந்தது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:53, 15 சூலை 2012 (UTC)
சிவகுருநாதன், உங்கள் மனைவி சொல்லவில்லை என்றால் என்ன ? அவ்வையார் குறித்து முனைவர் தாயம்மாள் அறவாணன் எழுதியுள்ள நூலில் இதைப்பற்றி என் பதின்வயதுகளில் படித்ததாக நினைவிருக்கிறது. வழிபாட்டின் போது பெண்களின் கோலம் குறித்தும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமையில் வாடிய இளம்பெண்ணுக்கு அவ்வை இந்த வழிபாட்டை உணர்த்தியதாகவும் கூறப்பட்டிருந்தது. புத்தகத்தின் பெயர் நினைவில் இல்லை. அந்நூலில் இருந்து எடுத்து வைத்திருந்த குறிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ளன. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 11:41, 15 சூலை 2012 (UTC)
அவ்வையார் வழிபாடு பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். இலங்கையில் இவ்வழிபாடு இருக்கலாம், ஆனால் நான் நான் கேள்விப்படவில்லை.--Kanags \உரையாடுக 11:44, 15 சூலை 2012 (UTC)


ஔவையார் எனும் வார்த்தையில் உள்ள 'ஔ' எனும் எழுத்து, தமிழ் எழுத்துதானே! அவ்வையார் என்றும் பல நேரங்களில் ஏன் எழுதுகிறோம்? தமிழை நன்கு புரிந்துகொள்ளவே, இந்த வினாவினை இங்கு தொடுக்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:53, 22 சூலை 2012 (UTC)