பேச்சு:ஓம் முத்துமாரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பு கனக்ஸ் "பாவலர்" ஓம் முத்துமாரி அவர்களை நன்கு அறிந்தவர்களில் நானும் ஒருவன் என்பதாலும் தமுஎகச-வின் கலை இலக்கிய இரவு என்கிற கலை நிகழ்ச்சி மேடைகளில் பல நிகழ்வுகள் இணைந்து பணியாற்றியவன் என்கிற நிலையிலேயே "பாவலர்" ஓம் முத்துமாரி என நகர்த்தினேன். தலைப்பு மீண்டும் ஓம் முத்துமாரி என மாற்றப்பட்டுள்ளதே? மீண்டும் "பாவலர்" ஓம் முத்துமாரி என மாற்றலாமா? அருள் கூர்ந்து கருத்திடுக. அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 15:27, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சிவம் ஐயா! விக்கிப்பீடியாவில் யாரையும் புகழ்ந்து எழுதக் கூடாது என்பது விதி. எனவே, பட்டப்பெயர்களான பாவலர், முனைவர், திருவாளர், அருள்மிகு போன்ற சொற்களை பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். கட்டுரையில் அவர்க்குரிய சிறப்புப் பெயர்களை குறீப்பிடலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:32, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தலைப்பை மாற்றியமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது: தலைப்பை நீங்கள் "பாவலர்"ஓம் முத்துமாரி எனப் பிழையாக எழுதியிருந்தீர்கள். சரியாக பாவலர் ஓம் முத்துமாரி எனத் தலைப்பிட்டிருந்தீர்கள் என்றால் கவனியாமலே இருந்திருப்பேன். (தலைப்பில் அடைப்புக்குறிகள் இடுவதில்லை, இரு சொற்களுக்கிடையில் ஓர் இடைவெளி விட வேண்டும்). மற்றது தமிழ்க்குரிசில் கூறிய இரண்டாவது காரணம். மேலும், தலைப்பு ஒன்றிருக்க, கட்டுரையில் அதைப்பற்றி எதுவும் முதல் வரிகளில் நீங்கள் தரவில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 20:10, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டளவில் மக்கள் மத்தியில், மக்கள் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு பாடல்களை எழுதி, மக்களை ஈர்க்கும் இசையை அமைத்து பாடுபவர்களை "பாவலர்" என்றே அழைப்பார்கள். இசை ஞானி இளையராசாவின் மூத்த சகோதரர் வரதராசன் அவர்களை "பாவலர்" வரதராசன் என்று அழைப்பதில்லை "பாவலர்" என்று மட்டுமே அழைத்தார்கள். அவர் எழுதும் பாடல்களுக்கு அவரே மெட்டு அமைத்துப்பாடுவார் உடன் இளையராசா (பிச்சை முத்து) கங்கை அமரன் ஆகியோரும் பாடுவர். அதனாலேயே "பாவலர்" ஓம் முத்துமாரி எனத் தலைப்பிட்டு நகர்த்தினேன். --யோகிசிவம் (பேச்சு) 22:29, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

யோகிசிவம், நீங்கள் நகர்த்தியது இந்தத் தலைப்புக்கு: "பாவலர்"ஓம் முத்துமாரி.--Kanags \உரையாடுக 06:53, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆம் கனக்ஸ் தவறுதலாகவே தலைப்பிட்டுள்ளேன். வருந்துகிறேன், பாவலர் ஓம் முத்துமாரி என்ற தலைப்பிற்கு நகர்த்தலாமென்றால் நகர்த்திட வேண்டுகிறேன். வேண்டாமென்றால் ஓம் முத்துமாரி என்றே இருக்கட்டும் தப்பிதமில்லை--யோகிசிவம் (பேச்சு) 15:56, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இல்லை, ஓம் முத்துமாரி என்ற இப்போதுள்ள தலைப்பே விக்கிப்பீடியா நடைமுறைக்கு உகந்தது.--Kanags \உரையாடுக 20:41, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி--யோகிசிவம் (பேச்சு) 15:54, 21 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஓம்_முத்துமாரி&oldid=1554019" இலிருந்து மீள்விக்கப்பட்டது