பேச்சு:ஒளி உமிழ் இருமுனையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனை ஒளியுமிழ் இருமுனையம் என்றும் ஓளியீரி என்றும் அழைக்கலாம். இருமுனையம் என்பதை ஈரி (இரண்டு முனை உடையது என்னும் பொருளிலும், மாறுமின்னோட்டத்தை ஒருவழிப்போக்காகிய மின்னோட்டமாக பிரிப்பது, ஈர்வது என்னும் பொருளிலும்) என்று அழைக்கலாம் என்பது என் கருத்து. ஒளியை உமிழும் இருமுன்னையம் என்பதால் ஒளியுமிழ் இருமுனையம் என்றாலும், ஒளியை ஈனும் ஈரி (இருமுனையம்) என்று சுருக்கமாக ஒளியீரி எனச் சுருக்கமாகக் கூறலாம். இக்கட்டுரையைச் சிறிதளவாவது நான் விரித்து எழுத விரும்புகிறேன். இப்பெயர் மாற்றத்தை (ஒளியீரி) என்பதைச் செய்யலாமா? ஒளியுமிழ் இருமுனையம் என்பதற்கும், ஒளிகாலும் இருமுனையம் என்பதற்கும் வழிமாற்றுகள் இருக்கும். பயனர்கள் தலைப்பு மாற்றம் பற்றிக் கருத்தளிக்க வேண்டுகிறேன். --செல்வா 15:34, 6 செப்டெம்பர் 2010 (UTC)

கட்டுரையின் தலைப்பை ஒளி உமிழ் இருமுனையம் (சான்று : தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நூல்களில் அச்சாகியுள்ளது) என்று மாற்றலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அது Light Emitting Diode என்ற ஆங்கிலப் பதத்தின் நேரிய ஆக்கமாக உள்ளது. மேலும் மேற்கூறிய அனைத்துக்கும் வழிமாற்றுகளையும் தந்துவிடலாம். இது பற்றி மேலும் விவாதிக்கவும். --சூர்ய பிரகாசு.ச.அ. 16:12, 11 சனவரி 2011 (UTC)[பதில் அளி]

செல்வாவின் கலைச்சொல்லாக்கம் எளியதாகவும் சுருக்கமாகவும் உள்ளது. தமிழில் அறிவியல் பரவ நீண்ட நேரடி ஆங்கிலத்தமிழாக்கச் சொற்கள் தடையாக உள்ளன என்றே நான் கருதுகிறேன். ஆங்கிலத்தில் நீண்ட கலைச்சொற்களுக்கு முதலெழுத்துக்களைச் சுருக்கி acronym வைத்து விடுகிறார்கள். ஒரே அசையில் இருக்குமாறு கலைச்சொற்கள் அமைந்தால் படிக்கவும் பேசவும் எளிதாக இருக்கும்.எனவே ஒளியீரிக்கு எனது வாக்குகள் !--மணியன் 16:25, 11 சனவரி 2011 (UTC)[பதில் அளி]