பேச்சு:ஒளியூடுருவு தோற்படலம்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
Stratum luciderm என்னும் சொல்லைப்பற்றி முகநூலில் சிறு உரையாடல் நிகழ்ந்தது. அதில் முனைவர் செயபாண்டியன் அவர்கள் தன்னுடைய நூலில் இட்டிருந்த சொலலிப்பார்த்தீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அவருடைய நூலில் stratum lucidum தெளியடுக்கம் எனத் தந்துள்ளார்.
- தெளிந்தமேற்படை; தெளிபடலம் என்கின்றது தமிழ் விக்சனரி. செயபாண்டியன் அவர்கள், இருக்கலாம். எனக்கும் தெளிவில்லை. Stratum என்பதற்கு என்ன பயன்படுத்தலாம் என்று வெகுவாக சிந்தித்து அடுக்கம் என்று எழுதினேன். அது முற்றிலும் நிறைவுதருவதாக இல்லை. படலம் - layer. அடுக்கம் என்பது ஒரு தொகுதி. அந்த தொகுதியின் ஒரு உறுப்பே stratum. Phyllotaxy - இலையடுக்கம், aestivation - இதழடுக்கம் என்றும் எழுதினேன். என்கின்றார்.
- செ. இரா. செல்வக்குமார்: அ.கி. மூர்த்தி அவர்களின் அறிவியல் அகராதியில், stratum corneum என்பதைக் கடிய அடுக்கு என்கின்றார். stratum luciderm என்னும் சொல் இல்லை. ஆனால் மின்மினிப்பூச்சிகளின் உளியுமிழ் பகுதிக்குக் காரணமான நொதியாகிய luuciferase என்பதை உயிர் வளி ஏற்றி நொதி என்கிறார். சொல்லாய்வாளர் ப. அருளி அவர்கள் தன்னுடைய அருங்கலைச்சொல் அகரமுதலி-யில் stratum lucidum என்பதற்கு தெளிவு அடுக்கு, (மறுவ.) தெள்ளடுக்கு என்கின்றார். நான் ஏதும் சீரியதாக சிந்திக்கவில்லை, அலசவும் இல்லை. புரிந்தவுடன் எழுதிவிட்டேன். தேர்வு செய்து சீர்மை எய்த முற்படலாம். இவ்வுரையாடல்களையேகூட தமிழ் விக்கிப்பீடியாவிலேயே எழுதினால், பலருக்கும் பயனுடையதாகவிருக்கும். எனவே படியெடுத்து அங்கு இட்டுவிடுகின்றேன். தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம். என் குறிக்கோள் இதுபற்றி ஒரு சிறுகுறிப்பாவது தமிழில் இருக்கவேண்டும் என்பதே.
- செ. இரா. செல்வக்குமார்: அருங்கலைச்சொல் அகரமுதலியில் stratum corneium என்பதை கொம்படுக்கு என்கின்றார். stratum granulosum என்பதைச் சிறுமணியடுக்கு, நுண்மணியடுக்கு என்கின்றார். நான் எதையும் பார்க்காமல் குருனை அணுப்படலம் என எழுதியுள்ளேன். இச்சொற்களை துறையறிஞர்கள் அல்லது ஆர்வமுடைய அறிவியல், மருத்துவம், போன்ற துறை அறிவுடையவர்கள் கலந்துரையாடி சீர்நிறுத்தினால் சிறப்பாக இருக்கும். இவற்றை வெறும் சொற்களாகப் பாராமல், தக்க கருத்துச் சூழலோடு எழுதி பொருத்தம் பார்த்து தேர்வு செய்வது நல்லது.
--செல்வா (பேச்சு) 20:11, 27 சூலை 2016 (UTC)
- முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் நூலில் தொடுப்பு: https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc/edit
- இக்கட்டுரைக்குத் தொடர்புள்ள சில கலைச்சொற்கள் (முனைவர் கோட்டாளம்):
- stratum அடுக்கம்
- stratum basale அடித்தள அடுக்கம்
- stratum corneum கரட்டு அடுக்கம்
- stratum granulosum மணித்துகள் அடுக்கம்
- stratum lucidum தெளியடுக்கம்
- stratum spinosum உறுத்தடுக்கம்
--செல்வா (பேச்சு) 20:20, 27 சூலை 2016 (UTC)
- @செல்வா: ஊடுருவு என்றுதானே வரவேண்டும்? --மதனாகரன் (பேச்சு) 14:10, 28 சூலை 2016 (UTC)
- ஊடுருவு, ஊடுறுவு இரண்டும் பயன்படுத்துகின்றார்கள். ஊடுருவு என்பதுதான் சரி என நினைக்கின்றேன். மாற்றிவிடுகின்றேன். நன்றி. மேலும் முனைவர் கோட்டாளம் சொன்னவாறும் பிறவிடங்களில் உள்ளவாறும் தெளி என்பதை முன்னிறுத்தி ஆளலாமா? தெளிதோற்படலம், தெளியடுக்கு?--செல்வா (பேச்சு) 18:34, 28 சூலை 2016 (UTC)