பேச்சு:ஒற்றி வைத்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒற்றி என்னும் சொல் ஈடாக (ஒக்க, ஒப்புடைய, ஒத்த மதிப்புடைய) என்னும் பொருளில் இருந்திருப்பது போல் தெரிகின்றது. ஒற்றிச்சீட்டு என்பது அடமான ஆவணம், ஒற்றிநறுக்கு என்றாலும் அதே பொருள். ஒற்றியாட்சி என்பது அடமானத்தை மீட்டு அனுபவிப்பதாம். மேலும் பல சொற்கள் உள்ளன தமிழ்ப்பேரகராதியில். ஒற்றி என்பது கைநாட்டு வைத்து ஒப்புதல் தெரிவித்தலோ என்றும் நினைத்தேன். பயனுடைய ஒரு சொல்!--செல்வா (பேச்சு) 02:50, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை. ஒற்றி பற்றி பல வழக்கங்கள் கடைப்பிடிக்கப் படுகின்றன. விளைநில ஒற்றிக்கு வட்டி வழங்கப்படாமல் குத்தகை இன்றி நிலத்தில் பயன் பெறும் வழக்கும் காணப்படுகின்றது. −முன்நிற்கும் கருத்து சஞ்சீவி சிவகுமார் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நிலத்தையோ வீட்டையோ ஒத்திக்கு விடுதல் எனும் வழக்கு உள்ளது. ஒற்றிக்கு எடுத்தவர்கள் நிலத்தில் பயிர் செய்து பயன் கொள்ளுவர். ஒற்றிக்கு விட்டவர்கள் அந்தப்பணத்தை எதிலேனும் முதலீடு செய்து பயன் பெறுவார்கள், அவர்கள் பணத்தை வைத்திருப்பதற்கு வட்டி எதுவும் தர வேண்டியதில்லை. இதைத்தான் மதுரை மாவட்டத்தில் குத்தகை என்பார்கள் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:36, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
திருச்சி, புதுக்கோட்டை பகுதியிலும் ஒத்திக்கு விடுதல் என்ற சொல் பயன்பாட்டில் உண்டு. --இரவி (பேச்சு) 08:29, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி, இரவி. தென்தமிழ்நாடு முழுவதிலுமே சொற்பயன்பாட்டில் ஒரு தொடர்ச்சி இருப்பது தெரிகிறது. -- சுந்தர் \பேச்சு 13:12, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஒற்றி_வைத்தல்&oldid=1443947" இலிருந்து மீள்விக்கப்பட்டது