பேச்சு:ஒத்தியங்கு முடுக்கி
AntanO உங்கள் பிரச்னை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. நான் விக்சனரில் உள்ள பெயரைத் தான் பயன்படுத்தியுள்ளேன். கட்டுரைகள் வடிக்க எனக்குத் தகுதியில்லை எனக் கூறினால் நிறுத்திக் கொள்ள தயாராக உள்ளேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி...--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 05:20, 20 மே 2018 (UTC)
சுந்தர்.வசு.மணிவண்ணன் இதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை. சின்குரோத்திரன் என்று விக்சனரியில் தரப்பட்டிருந்தாலும் அது synchrotron என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி ஒலிப்பாக உள்ளது. அதனால் அதனைத் தலைப்பாகத் தராது, விக்சனரியில் தரப்பட்டிருக்கும் "ஒத்தியங்கு முடுக்கி" என்ற தலைப்பிற்கு கட்டுரையை வழிமாற்றி விடுகிறேன்.
இனிவரும் கட்டுரைகளில் இயன்றளவு ஆங்கிலச் சொல்லின் நேரடித் தமிழ் ஒலிப்பாக உள்ள தலைப்புகளைத் தவிர்த்து விடுங்கள். --Booradleyp1 (பேச்சு) 08:15, 20 மே 2018 (UTC)
- @TNSE MANI VNR: எனக்கு எப்பிரச்சனையும் இல்லை. பெயர் மாற்றம் கோரினேன். நீங்கள் நிறுத்திக் கொள்வதோ தொடர்வதோ உங்களைப் பொருத்தது. தொடர்பற்ற உரையாடல்களை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் மேற்கொள்ள வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 08:27, 20 மே 2018 (UTC)