பேச்சு:ஒகாடன் வேலமரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதிய கண்டுபிடிப்பு[தொகு]

எத்தியோப்பியா, சோமாலியா எல்லைப் பகுதியில் ஒகாடன் என்னும் பகுதியில் 8000 சதுர கிலோமீட்டர் பகுதியில் மில்லியன் கணக்கில் பரவலாக காணப்படும் ஒரு மரம் அறிவியலில் அறியப்படாது இருந்தது வியப்பூட்டுவது. இந்த சோமாலியா பகுதியில் கடந்த சில ஆண்டுகளிலேயே 400 புதிய பூக்கும் மரங்களைக் "கண்டுபிடித்திருக்கிறார்கள்"[1](அங்குள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் அறியப்படாமல் இருந்தது). ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 10,000 புதிய உயிரினங்கள் கண்டுபிடித்து அறிவியற் பெயராக இலத்தீன் சூட்டப்படுகின்றன, அவற்றுள் 2350 பூக்கும் நிலைத்திணை (தாவரங்கள்) என்கிறார்கள்![2] இம் மரம் பற்றி இன்னும் ஆங்கில விக்கியில் கட்டுரை எழுதப்படவில்லை. இப்புதிய கண்டுபிடிப்பை தமிழ் விக்கியில் முந்தி எழுதியுள்ளோம்.

இவ்வியப்பான செய்தியைத் தந்ததற்கு நன்றி, செல்வா. இது நம் கருவேல மரத்துடன் தொடர்புடையதா? -- சுந்தர் \பேச்சு 03:10, 2 ஜூன் 2009 (UTC)
இங்கு குறிப்பிட்ட மரம் அக்கேசியா (Acacia) இனத்தைச் சேர்ந்தது (இது வ'பேசியே அல்லது லெகுமினோசீ குடும்பத்தைச் (Fabaceae or Leguminosae) சேர்ந்த இனம். அக்க்கேசியா பிளானிவி'ரோன்சு (Acacia planifrons) எனப்படும் மரத்தை குடைவேல்மரம் என்கிறது தமிழ் லெக்ஃசிகன். இதனை Umbrella-thorn babul என்று கூறுகிறார்கள். நான் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் முள் உள்ள குடை போன்ற மரங்களைப் பார்த்தேன். அதுவும் அக்கேசியா இனம் என்றுதான் கேள்விப்பட்டேன் (உறுதி செய்ய வேண்டும்). கருவேலமரத்தை தமிழ் லெக்ஃசிகன் "Black babul, s. tr., Acacia arabica; வேலமரவகை" என்கிறது. தமிழ் லெக்ஃசிகன் மேலும் ஒரு அக்கேசிய மரத்தை, "Pea-podded black babul, s. tr., Acacia eburnca; வேலமரவகை" என்கிறது. எனவே நான் வேலமரவகை எனக்குறித்தது இதன் அடிப்படையில்தானே அன்றி நிலைத்திணையியல் அறிவால் அல்ல. அக்கேசியா இனம்,கருவேலமரம்,குடைவேல மரம், கூந்தல் வேலமரம் (Acacia tomentosa), சீமைவேல் (Acacia melanoxylon) போன்றவற்றைக் கொண்டிருப்பதால் பொருந்தலாம். அக்கேசியா இனத்தைச் சேர்ந்த வேலமரம் எனக் குறிப்பிடா வகைகளும் உண்டு. எ.கா Acacia concinna; சீயக் காய் மரம், செங்கருங்காலி மரம் Acacia catechu-sundra முதலியன. --செல்வா 19:57, 3 ஜூன் 2009 (UTC)
இது நம் கருவேல மரத்துடன் தொடர்புடைது. Acacia பேரினம் உலகில் ஆசுதேரிலியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் மிக அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகும், மேற்கூறிய இரண்டு கண்டங்களில் இருந்து பல்வேறு நிலப்பரப்பில் பரவி, சில இடங்களில் களையாகவும் உள்ளது. நம்ம ஊரில் உள்ள சீமைவேலி முள் இதற்கு ஒரு உதாரணம். முன்னர் Acacia என்ற ஒரே பேரினத்தில் இருந்த 1000த்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களும் தற்போது மூலக்கூறு உயிரியலின் தரவுகளின் படி சுமார் 5 (?) சிற்றினங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அனைத்தும் National Center for Biological Science, Bangalore களை தாவரங்களில் ஆராய்ச்சி செய்யும் என் நண்பர் கூறியது.--கார்த்திக் 20:31, 3 ஜூன் 2009 (UTC)
கார்த்திக் கருத்துக்கு நன்றி. வேலிக்காத்தான் என்று சென்னைப் பகுதியில் கூறும் முள் உள்ள செடியும் (மரமாகவும் வளரும்),அக்கேசியா பேரினத்தைச் சேர்ந்த மரஞ்செடியா?--செல்வா 21:50, 3 ஜூன் 2009 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

  1. M. Thulin (Ed), Flora of Somalia (Royal Botanic Gardens, Kew, UK 2006), Vol.3.
  2. David J. Mabberley, "Exploring Terra Incognita", Science, vol.324, 24 April 2009, p.472