பேச்சு:ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருத்தமான தலைப்பிற்கு, பரிந்துரைகளை எதிர்பார்க்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:06, 12 செப்டம்பர் 2015 (UTC)

தேவைப்படும் உதவிகள்:

  1. தமிழ் இலக்கணப்படி தலைப்பு சரியா?
  2. migrant என்பதற்கு புலம் பெயர்வோர் என்றும் Diaspora என்பதற்கு புலம்பெயர்ந்தோர் என்றும் தமிழ் விக்சனரி சொல்கிறது. இதனை உறுதி செய்யவேண்டும்.
  3. புலம் பெயர்வோர் அல்லது புலம்பெயர்வோர் எது மிகச் சரியானது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:48, 12 செப்டம்பர் 2015 (UTC)
European என வருவதால் ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி என்பது பொருத்தமானது. பொருள் மயக்கத்தைத் தவிர்ப்பதற்காக, புலம்பெயர்வோர் என்று சேர்த்தெழுதுவது சிறப்பானது. --மதனாகரன் (பேச்சு) 16:57, 12 செப்டம்பர் 2015 (UTC)
european என்பதால் 'ஐரோப்பியப் புலம்பெயர்வோர்' என்று எழுதினால் செயற்கையாக இருக்கும். ’புலம்பெயர்வோர் நெருக்கடி’ என்பதும் செயற்கையாகவே இருக்கும். அகதிகளா என்பதையும் தெளிவுபடுத்திவிடுங்கள். ஐரோப்பாவில் புலம்பெயர்வோருக்கான நெருக்கடி என்பது போல் தலைப்பை மாற்றலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:00, 12 செப்டம்பர் 2015 (UTC)

@ மதனாகரன்... புலம்பெயர்வோர் என்று சேர்த்தெழுதி, இப்போதைக்கு தலைப்பினை நகர்த்துகிறேன். ஐரோப்பா, ஐரோப்பிய என்பது குறித்து எனக்கு இன்னமும் தெளிவு ஏற்படவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:40, 13 செப்டம்பர் 2015 (UTC)

@தமிழ்க்குரிசில்... migrantஆ அல்லது refugeesஆ என்பது குறித்து அரசியல்ரீதியான குழப்பங்கள் இருக்கின்றன. இதுகுறித்தான தகவல்களை கட்டுரையில் சேர்க்கவுள்ளேன். புலம்பெயர்வோருக்கான நெருக்கடி என்பது பொருத்தமற்றது. ஏனெனில் இங்கு நெருக்கடி என்பது பல்வேறு நாடுகள், பலதரப்பட்ட அமைப்புகள், தனிப்பட்ட மனிதர்கள் எதிர்கொள்ளும் பலவகையான நெருக்கடிகளைக் குறிக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:59, 13 செப்டம்பர் 2015 (UTC)

ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி என்பது சரியாகவிருக்கும். இது ஐரோப்பாவில் புலம்பெயர்வோருக்கான நெருக்கடி மட்டுமல்ல, ஐரோப்பாவுக்கும் நெருக்கடியே. அதனால் நெருக்கடி என்பது சரியானது. --AntanO 06:10, 13 செப்டம்பர் 2015 (UTC)
ஐரோப்பாவில் புலம்பெயர்வோர் நெருக்கடி என்பது எனது பரிந்துரை.--Kanags \உரையாடுக 06:29, 13 செப்டம்பர் 2015 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்புகளில் ஒன்று...[தொகு]

உலகின் மிக முக்கிய நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகள் தமிழ் விக்கியில் உருவாக்கப்படுகின்றன; இவை, குறுங்கட்டுரை அளவிலாவது இருக்கும்! உதாரணமாக... இந்தக் கட்டுரை, வேறு எந்த இந்திய மொழியிலும் இதுவரை உருவாக்கப்படவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:58, 17 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]