பேச்சு:ஐதராபாத்து (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ஐதராபாத்து (இந்தியா) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

ஐதாராபாத் என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா?--ரவி 22:51, 16 மே 2008 (UTC)

ஐதராபாத்--Kanags \பேச்சு 22:57, 16 மே 2008 (UTC)

ஓ..நான் முன்பு சொன்னதில் எழுத்துப் பிழை விட்டு விட்டேன். ஐதராபாத் என்பதை முதன்மைப் பக்கமாக ஆக்கலாமா?--ரவி 22:59, 16 மே 2008 (UTC)

அதையே முதன்மையாக்கலாம் எனச் சொல்ல நினைத்தேன்:).--Kanags \பேச்சு 23:02, 16 மே 2008 (UTC)

தெலுங்கு மொழியில் హైదరాబాదు என்பது ஃகைதராபாது என்று ஒலிக்கும். இதனைத் தமிழில் ஐதராபாது என்று எழுதுவது சரி. இப்போதைக்கு ஐதராபாத்து என்று "த்" இட்டு மாற்றியிருக்கின்றேன். தேவை எனில் ஐதராபாது என்பதையே முதன்மைப்படுத்தலாம்.--செல்வா (பேச்சு) 04:15, 24 ஆகத்து 2012 (UTC)

ஆனால் இன்று வரை ஐதராபாத் அல்லது ஹைதராபாத் என்றே கேள்விப்பட்டிருக்கிறோம், பயன்படுத்தியும் உள்ளோம், ஐயா தயவுசெய்து ஒரு கொள்கை முடிவை கொண்டுவந்து பிறகு மாற்றவும். ஏற்கனவே தங்களிடம் மின்னஞ்சலில் உரையாடியது போல தெலுங்கிலோ அல்லது எசுப்பானியத்திலோ (spanish) எப்படி ஒலிக்கிறது என்பதை தமிழில் தேடுபவர்கள் அல்லது தமிழ் மட்டும் அறிந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே எனது கருத்து--சண்முகம்ப7 (பேச்சு) 05:02, 24 ஆகத்து 2012 (UTC)
சண்முகம், வழிமாற்று வைத்துத்தானே நகர்த்தியுள்ளேன்? முதல் வரியைப் பாருங்கள் - இது வணிகப்பெயர் ஏதும் இல்லையே. இது ஊரின் பெயர், இதில் முறைமைகள் உண்டு. இதை ஏன் கூடாது என்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை!!--செல்வா (பேச்சு) 05:26, 24 ஆகத்து 2012 (UTC)
"ஹைதராபாத்து" என்பதற்கு பாலகுமாரனின் எழுத்தில் ஓர் எடுத்துக்காட்டு. - அதாவது -த்து என்று முடிவது புதிது அன்று! அபப்டி முடிவதே சரியானது என்பதில் ஐயம் ஏதும் இல்லை. -த் என்று இறுதி எழுத்தாக முடியவே முடியாது (ஒலி வெளியே வராது)- இதெல்லாம் வெட்ட வெளிச்சமான உண்மை!--செல்வா (பேச்சு) 05:44, 24 ஆகத்து 2012 (UTC)
நான் கூடாது என்று சொல்லவில்லை, இத்போன்ற பொதுவாக உள்ள பெயர்களை கொள்கை முடிவு எடுங்கள் என்றுதான் கூறுகிறேன். வணிகப்பெயர்கள் மட்டுமல்ல ஊர்ப் பெயர்கள், மற்ற பெயர்கள் போன்ற அனைத்து பெயர்களுக்கும் பெரு வழக்கில் உள்ள சொல்லில் இருந்து வேறு சொல்லுக்கு மாற்றுவதற்கு கொள்கை தேவை என்றே கூறுகிறேன் (உலோகம்-->மாழை, அலோகம்-->மாலையிழி, ஜெர்மன்-->இடாய்ச்சுலாந்து, ஸ்பெயின--> எசுப்பானியம், ஜப்பான்-->யப்பான், ஜாவாஸ்கிரிப்ட்-->யாவாக்கிறிட்டு இவையனைத்திற்கும்), ஐதராபாத்து என 50 பேர் உபயோகித்தால் ஐதராபாத் என 5000 பேர் உபயோகிப்பார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் கூற வருவது என்னைப் பொருத்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோ, இலங்கையைச் சேர்ந்தவர்களோ அறியாத ஒரு பெயரை முதன்மைத் தலைப்பாக வைப்பதில் உடன்பாடில்லை. அதனை வழிமாற்றாக்கலாமே. மேலும் ஒவ்வொரு பெயரும் அதனுடைய மூல மொழியின் ஒலிப்பில் சற்றேனும் மாறுபடும், எனவே அனைத்தையும் மாற்றவும் என்றால் என்ன செய்வது, அதற்குத்தான் கொள்கை வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன், புரிதலுக்கு நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 11:23, 24 ஆகத்து 2012 (UTC)
விரைவில் இதைப் பற்றிய கொள்கை முன்வரைவை எழுதுவோம் சண்முகம். என்னைப் பொருத்தவரை முதற்கண் தமிழ் எழுத்துமுறைக்கு ஒப்ப ஒலிபெயர்க்க வேண்டும் (எழுத்துப்பெயர்ப்பு அல்ல), புறப்பெயர்கள் ஒன்றும் புதிதில்லையே? அடுத்து கூடியவரை மூலமொழி ஒலிப்புடன் நெருங்கி வர வேண்டும். பெரும்பாண்மைப் பொதுவழக்கு வேறாக இருந்தால் அதை முதல் வரியிலோ, பெயர் என்ற தனித் தலைப்பிலோ, அடிக்குறிப்பிலோ தர வேண்டும். மக்கள் தேடக்கூடிய எல்லா வழக்குச் சொற்களில் இருந்தும் மாற்றுவழி ஏற்படுத்தலாம். பல வேளைகளில் தமிழ் எழுத்துமுறையில் அமைந்த தலைப்பு புதிதாக இருந்தாலும் நாளடைவில் நிலைகொள்ளலாம். இணையம், தொலைக்காட்சி போன்ற அண்மைய சொற்களும் அறுபதுகளில் வழக்குக்கு வந்த எண்ணற்ற சொற்களும் சிறந்த முற்காட்டுகள். கொள்கை முன்வரைவு உரையாடலில் இதைப் பற்றி விரிவாக உரையாடலாம். -- சுந்தர் \பேச்சு 12:00, 24 ஆகத்து 2012 (UTC)

ஐதராபாக்கம் என்றும் கூறலாம். மறைமலை அடிகள் கல்வியே அழியாச் செல்வம் என்ற கட்டுரையில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். --மதனாகரன் (பேச்சு) 12:30, 24 ஆகத்து 2012 (UTC)

சண்முகம், கட்டாயம் கொள்கை முடிவு எடுப்போம் அப்பொழுது இதைப் பற்றி உரையாடலாம், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்காக இப்படியான எளிய திருத்தம் செய்யக் கூடாது என்பது எனக்கும் உடன்பாடு இல்லை. நீங்கள் கூறிய செருமன்-இடாய்ச்சு, மாழை-உலோகம் என்பன வேறு வகையானவை.மும்பை ஐதராபாத்தை விட பெரிய நகரம்; ஐதராபாத்தில் இருந்து இன்னும் 100 கிலோமீட்டர் போக வேண்டும்; ஐதராபாத்தோடு ஒப்பிட்டால் சென்னையில் உருது பேசுவோர் எண்ணிக்கைக் குறைவு என்றெல்லாம் கூறும்பொழுது ஐதராபாத்து என்று பெயர் இருந்தால்தானே சரியாக வரும்? இதென்ன அத்தனை பெரிய மாற்றமா? New York என்பதை ஆங்கிலேயர்கள் அனைவரும் ஒரே சீராகவே எழுதுகின்றார்கள், ஆனால் ஐதராபாத்து போன்ற பெரிய நகரங்களைக்கூட 'பெரிய' எழுத்தாளர்களாகக் கருதபப்டும் பலரும்கூட ஒரே சீராக ஒரே விதமாக எழுதுவதில்லை. நாம் இப்படி எங்குமே சீர்மை பேணாது இருப்பதால் பெரும் இடர்கள் வருகின்றன. சீராகவும் சரியாகவும் இருப்பது மிகவும் தேவை. ஐதராபாத்து என்று -த்து என்பதோடு முடியவேண்டும் என்பது சரியென்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இடாய்ச்சுலாந்து-செருமனி-ஜெர்மனி என்பதைப் பற்றியோ மாழை-உலோகம் என்பது போன்றவை பற்றியோ எதிரெதிர் கருத்தாட பல உள்ளன. இங்கும் ஹைதராபாத்து-ஐதராபாத்து என்பது பற்றி கருத்தாட வகையுண்டு, ஆனால் -த்து என்று முடிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருந்தால் அது கவலைக்கிடமானதே. பலர் தவறுதலாக -த் என்று எழுதுகின்றார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் சரியாகவும் -த்து என்று எழுகின்றவர்களும் இருக்கின்றார்கள். நான் மேலே குறிப்பிட்ட சொற்றொடர்களைப் பார்த்து எது சரியான வடிவம் என்று சொல்லுங்கள்! --செல்வா (பேச்சு) 13:24, 24 ஆகத்து 2012 (UTC)

  • மணி வண்ணனின் வலைப்பதிவையும், இரவியின் பதிவையும் படித்து வைத்திருப்பது இது பற்றி நாம் மேலும் பேச உதவியாக இருக்கும்.
  • 34-தொகுதிகளாக வெளியிட்டப்பட்ட வாழ்வியியல்-அறிவியல் கலைக்களஞ்சியத்தில் (தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்), தொகுதி-6 இல் ஐதராபாது என்று தலைப்பிட்டு இந்நகரத்தைப் பற்றி பக்கங்கள் 93-100 வரை ஒரு கட்டுரை எழுதியுள்ளார்கள். அடுத்தத் தலைப்பாக "ஐதராபாதுப் பல்கலைகழகம்" என்றும் ஒரு குறும் பதிவு (பக்கம் 100, தொகுதி-6 இல்) உள்ளது. இதனால் இதனை ஏற்க வேண்டும் என்று சொல்லவில்லை. சான்று உள்ளது என்று குறிப்பிடவே கூறுகின்றேன். இந்த 34 தொகுதி கலைக்களஞ்சியத்தில் போதுமான அளவு சீர்மை பேணப்படவில்லை (பல சொற்கள் பல விதமாக எழுதப்பட்டுள்ளன,).
  • அலகாபாத்து[1], அகமதாபாத்து, போன்று பல ஊர்ப்பெயர்கள் -பாத்து (அல்லது -பாது, -பாத்) என்று முடியும் ஆகையால் கூடியமட்டிலும் சீராக எழுதி வருவது நல்லது. ஒரு குறிப்புக்காக மட்டுமே கூறுகின்றேன் - இந்த 34-தொகுதி கலைக்களஞ்சியத்தில் அகமதாபாத்து ("த்" உடன்) (தொகுதி-1, பக்கங்கள் 60-63), அலகாபாத்து எனத் தொடங்கும் இரண்டு கட்டுரைகள் (அலகாபாத்து, அலகாபாத்துக் கற்றூண் சாசனம்) தொகுதி-1 இல் பக்கங்கள் 819-822 வரை உள்ளன.

--செல்வா (பேச்சு) 14:56, 24 ஆகத்து 2012 (UTC)

50000[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#தொழில்நுட்பம்+கிரந்தமும் இல்லை;தமிழும் இல்லை நடந்த உரையாடல்களின் படி, 50000கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்றுவோம். பிறகு இதுவரை நடந்தவைகளை ஒன்றிணைப்போம். அப்புறம் புதிய கருத்துக்களை நிலைநாட்டுவோம்.அதுவே, நம் சமூக வளர்ச்சிக்கு வித்திடும். தலைப்புகளில் கவனம் செலுத்துவதனை விட, ஒவ்வொரு கட்டுரையையும் சிறிது மேம்படுத்தியிருந்தால் பலர் பயனடைந்து இருப்பர். இக்கட்டுரையைப் பொறுத்தவரை, தலைஒப்பனையாக உள்ளது.உடல் சீர்குலைந்து உள்ளது.வாருங்கள் தூர் வார! மற்றதை தூர.. -- உழவன் +உரை.. 17:46, 24 ஆகத்து 2012 (UTC)