பேச்சு:ஐக்கூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹைகூ கவிதைகள்.

ஹைகூ, ஹைக்கூ,ஹைகூ,ஹைய்கு, எனப் பலவாறு சுட்டப்படும் இக்கவிதை வடிவம் கீழ்த்திசைப் பண்பாட்டில் இறுதியாக மலர்ந்த மலர். சிந்தர், துளிப்பா, மின்பா, நறுக்கவிதைகள், மின்மினிக் கவிதைகள், வாமனக் கவிதைகள் என்ற வேறுபெயர்களும் இதற்குண்டு.இது ஒரு வகையான வாழ்க்கை நியதி. கவிஞன் எண்ணத்தை நேரடியாக வெளியிட வேண்டும் வீண்சேர்க்கையாக சொற்கள் இருக்கக்ககூடாது.எதுகை, சந்தம் கருதி, கவிதையின் பொருளம்சத்திற்குப் புறம்பானச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிமுகமாகிய ஹைக்கூ கவிதை ஜப்பானில் தோன்றி இன்று உலகம் முழுதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஹைகூ என்பதற்கு 5,7,5 அசைகள் கொண்ட ஜப்பானிய கவிதை என சேம்பர்ஸ் அகராதி பொருள் சொல்கிறது. கீழ்த்திசை பௌத்த சிந்தனையில் மகிழ்த்து சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகுப் பார்வையில் மலர்ந்து கவிதை மணம் வீசுகின்றது ஹைகூ என்பர்.

மனிதநேய வெளிப்பாடே ஹைகூவின் உயிர்நாடி, ஹைகூ உணர்த்தும் பொருள். சொல் கடந்த சூட்சுமப் பொருள். ஹைகூ ஜெப்பானியக் கவிதையின் ஆண்மைத் தன்மையைக் காட்டும்.ஹைகூ கவிதை எல்லாப் பொருள்களையும் ஒருங்கினைத்து ஒத்துணர்வுடன் நோக்கும் ஜனநாயகத் தன்மை கொண்டது. இதன் உயிர்நிலை முரண்கள்தாம். ஹைகூவின் நோக்கம் முதன்மை நிகழ்வு அல்லது இயற்சூழலமைவினைச் சொல்லில் வடித்துக் காட்டுவதாகும். ஹைகூ என்பது கவிதையன்று, இலக்கியமுமன்று, நுண்மையை, பருமையை, தனியினை, பொதுவினை என்று இருநிலை அமைவுகளை ஒரு நிலைப்டுத்தும் கலவை ஆக்கவேலை ஹைகூ என பல விளக்கங்களை அளிப்பார்.

தலைப்பு[தொகு]

ஒலிப்பு நெருக்கம் கருதி ஐக்கூ என்ற தலைப்பை முகனையாக்கலாமா? -- சுந்தர் \பேச்சு 15:46, 8 அக்டோபர் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐக்கூ&oldid=917190" இருந்து மீள்விக்கப்பட்டது