பேச்சு:ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமாபதி, அபிவிருத்தி என்பதை வளர்ச்சி என்றும், பிற வடமொழிச் சொற்களைத் தமிழாக்கியிருக்கிறேன். உங்களுக்கு மறுப்பு ஏதும் இருக்காது என நினைக்கிறேன். ஸ்தாபகம் என்பதற்கு தோறுவித்தல், தொடங்குதல், துவக்குதல், நிறுவுதல் என பல நல்ல சொற்கள் இருப்பதால் ஏதேனும் ஒன்றை ஆளுதல் நல்லது. நம் தமிழ்ச் சொற்களை நாமே எடுத்தாளாவிட்டால் யார் ஆளுவார்கள்?! அதே போல பிரசுரம் என்பதற்கு வெளியீடு என்ற சொல்லை ஆளலாம். இந்த தலைப்பை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் என மாற்றலாமா? ஐக்கிய நாடுகள் என்பதை நாடுகள் ஒன்றியம் என்பதே நல்ல சொல்லாட்சி.--C.R.Selvakumar 05:41, 15 ஜூலை 2006 (UTC)செல்வா

தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

இந்தக் கட்டுரையின் தலைப்பை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் என மாற்றலாமா? இங்கேயுள்ள உரையாடலையும் பாருங்கள்.--கலை (பேச்சு) 10:06, 1 ஏப்ரல் 2017 (UTC)