பேச்சு:ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருள்கூர்ந்து வேளான்மை என்னும் சொல்லையே பயன்படுத்துங்கள் (தலைப்பிலும், கட்டுரையிலும்). தமிழ்ச்சொல்லை விலக்கி வேற்றுமொழிச் சொற்களை ஆளவேண்டாம் என வேண்டுகிறேன். --C.R.Selvakumar 05:44, 15 ஜூலை 2006 (UTC)செல்வா

போஷாக்கு என்பதற்குப் பதிலாக ஊட்டச்சத்து என்று பயன்படுத்தலாமா?--C.R.Selvakumar 05:46, 15 ஜூலை 2006 (UTC)செல்வா

செல்வா, இலங்கையில் ரொட்டி எனபது வேறு ஓர் வகை உணவுப்பொருள் போன்றே தமிழ் நாட்டில் வேளாண்மை என்ற சொல்லை .இலங்கையில் விவசாயம் என்ற சொல்லைத்தான் பயன் படுத்துகின்றார்கள். இவர்களின் நடவடிகை எங்கே கூடுதலாக இருக்கின்றதோ அங்கேயுள்ள வட்டார மொழிவழக்கை ஏற்றுக் கொள்ளலாம் என்பதே என்னுடைய கருத்து. நான் கூகிள் ஏர்த் தொடர்பான சில சோதனைகளில் ஈடுபட்டும் வருகின்றேன் அங்கே தமிழ் தலைப்புகளை இணைக்க முடிகிறது எனினும் பின்னர் அந்த இணைபைத் தொடர்கின்றபோது தமிழ் விக்கிபீடியாவின் முதற்பக்கமே வருகினறது அதனால்தான் ஆங்கிலத் தலைப்புகளையும் உருவாக்கி மீள் வழிநடத்தி வருகின்றேன் மற்றப்படி தமிழ் மொழியில்தான் கூடுதல் ஆர்வம் உண்டு. --Umapathy 06:59, 15 ஜூலை 2006 (UTC)
செல்வா மேலே நீங்கள் கூறிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளேன். கால தாமத்திற்கு மன்னிக்கவும். நல்ல தமிழில் கட்டுரை வருவதான் நன்றென நினைக்கின்றேன். இப்போது இருக்கின்ற வழக்கில் உள்ளவற்றிற்கு வழிமாற்றப்பக்கங்களை அமைத்துக் கொள்ளலாம். --Umapathy (உமாபதி) 15:36, 19 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]