பேச்சு:ஏ-7 நெடுஞ்சாலை (இலங்கை)
தலைப்பைச் சேர்டெரன்ஸ், இலங்கையின் சமயுரக் கோடுகள் (Contours) ஐப் பார்த்து கட்டுரையில் சிறு மாற்றங்கள் செய்துள்ளேன். இலங்கையின் சமயுரக் கோடுகள் வடக்குக் கிழக்கில் பெரும்பாலும் அடியிலும் ஏனைய பாகங்களில் மீட்டர் அளவு முறையிலும் உள்ளதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அவ்வவ் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரிபார்த்தால் நலம். கட்டுரையில் அவிசாவளையின் கடல்மட்டத்தில் இருந்த உயரத்தை 300 அடியென மாற்றியுள்ளேன். அவிசாவளைச் சந்திக்கு அருகில் புகையிரத நிலையம் ஒன்றுள்ளது இதில் அநேகமாகக் கடல்மட்டத்தில் இருந்தான உயரம் குறித்திருப்பார்கள். யாராவது பார்த்தால் கட்டுரையில் சரியான அளவை எடுக்கலாம். --Umapathy 07:52, 27 டிசம்பர் 2006 (UTC)
தெரு எதிர் சாலை
[தொகு]இங்கு பெருந்தெரு என்று குறிக்கப்படுவது highwayஆ? இந்தியாவில் இதை நெடுஞ்சாலை என்கிறோம். இரு புறமும் கடைகள் அல்லது வீடுகள் உள்ள சாலைகளைத் தானே தெருக்கள் என்கிறோம்?--ரவி 16:41, 29 டிசம்பர் 2007 (UTC)
- இலங்கையில் சாலை என்ற சொல் வழக்கில் இல்லை. பொதுவாகச் சாலை என்பதற்குப் பதிலாக வீதி என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. கண்டிவீதி, திருகோணமலை வீதி, காலி வீதி என்றுதான் குறிப்பிடப் படுகின்றது. ஆனால், highway என்பதற்குப் பெருந்தெரு என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. மயூரநாதன் 18:50, 29 டிசம்பர் 2007 (UTC)