பேச்சு:ஏர் அரேபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

”அரேபியா விமானம்” என்று ஏதேனும் அதிகாரப்பூர்வத் தமிழ்பெயர் உள்ளதா?. இல்லையெனில் இது பிழையான மொழிபெயர்ப்பு. அரேபியா விமான சேவை அல்லது அரேபியா வான்சேவை என்பதே பொறுத்தமாக இருக்கும். பொதுவாக வணிகப்பெயர்களை மொழிபெயர்ப்பதில்லை என்பதால், “ஏர் அரேபியா” என்றே இதனைக் குறிப்பிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:03, 9 மே 2011 (UTC)


அன்புள்ள‌ ஐயா

வான்வ‌ழி நிறும‌ங்க‌ள் இர‌ண்டு வ‌கைக‌ளில் ஆங்கில‌ மொழியில் பெய‌ரிட‌ப்ப‌டுகிற‌து.

xyz Airlines அல்லது Airways xyz வான்வ‌ழி த‌மிழ்ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. Singapore Airlines நிறும‌த்திற்கு த‌மிழில் சிங்க‌ப்பூர் வான்வ‌ழி ப‌ரிந்துரைக்க‌ப்ப‌ட்டு ஏற்க‌ப்ப‌ட்ட‌து.

இது ச‌ம்ம‌ந்த‌மாக‌ கிடைத்த‌ மின்ன‌ஞ்ச‌ல் கீழ்வ‌ருமாறு:

"Thank you for your online feedback regarding our inflight announcements.

We note your suggestion to use the word 'Vaanvazhi' instead of 'Airline' during Tamil announcements. Please be assured that your comments have been conveyed to the cabin crew management."


சீன‌ மொழியில் Singiappo Hangkong Gongsi (Singapore Air Public Company) என‌ அழைக்க‌ப்ப‌டுகிற‌து. Silk, Tiger ஆகிய‌ பொதுச்சொல் பெய‌ர்க‌ளையும் அவ்வாறே மொழிபெய‌ர்க்கின்ற‌ன‌ர்.

குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் xyz Air அல்ல‌து Air xyz ஆகியப் பெய‌ர்க‌ளை அர‌பு மொழியில் The Plane of xyz அல்ல‌து The Plane for xyz என‌ மொழிபெய‌ர்க்கின்ற‌ன‌ர்.

த‌மிழ‌க‌ அர‌சும் நிறுவ‌ன‌ப் பெய‌ர்க‌ளை தொழில்ரீதியாக‌ த‌மிழில் அழைக்க‌ வேண்டும் என‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌ ப‌ரிந்துரைத்து வ‌ருகிற‌து.

ஏனைய வ‌ள‌ர்ந்த‌ மொழிக‌ளில் ஒலிபெய‌ர்க்க‌ப்ப‌டாம‌ல் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌டும் போது செம்மொழி என‌ அழைக்க‌ப்ப‌டும் ந‌ம‌து த‌மிழ் மொழியில் மொழிக்க‌ப்ப‌டுவ‌தே சிற‌ந்த‌து.

இங்ங‌ன‌ம்

-ராஜ்

விளக்கத்துக்கு நன்றி ராஜ், கட்டுரைத் தலைப்பை மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:52, 9 மே 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏர்_அரேபியா&oldid=1738752" இருந்து மீள்விக்கப்பட்டது