பேச்சு:ஏமி சாக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த கட்டுரையில் உள்ள மாடல் (Model) என்பதை தமிழில் எவ்வாரு மொழிபெயர்பது? --அராபத்* عرفات 18:08, 25 ஜூலை 2010 (UTC)

நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் கேட்டிருந்தீர்கள். மாடல் என்பது குறிப்பிட்ட நோக்கில் எடுத்துக்காட்டாக உள்ள ஒருவர் என்று பொருள். ஒய்யாரம், ஒயில் கலைகளில் புதிய ஆடைகளையோ அணிகளையோ அணிந்து காட்டி (அணிகலன்களின்) அழகைக் காட்டுபவர். இந்த நோக்கில் அவர்களை ஒயிலி, ஒயிலன் அல்லது ஒயிலர் எனலாம். ரோல் மாடல் என்றால், பின்பற்றக்கூடிய உயர்செயல் (அரிசெயல்) நாட்டிய ஒருவரைக் குறிக்கும். ஒன்றிற்கு எடுத்துக்காட்டாக உள்ளவர். இவரை முன்னாளர் (முன் எடுத்துக்காட்டாக உள்ளவர்) எனலாம். அல்லது ஒப்பர், மேலொப்பர் என்றும் கூறலாம். மாடல், பேச^ன் என்பது பற்றி முன்பொருமுறை உரையாடினோம். அதன் தொடுப்பு இதோ. இவை எதுவும் பொருந்தவில்லை என்று நினைத்தால் சொல்லுங்கள் மீண்டும் சிந்தித்துப் பார்க்கின்றேன்.--செல்வா 20:12, 25 ஜூலை 2010 (UTC)


செல்வா, Style என்பதற்கு ஓயில் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றதே! எனவே ஓயிலர் என்பது styilish people என்பதற்குத்தானே பொருந்தும்.

\\அந்த teamல எல்லாருமே styleலானவங்க\\- அந்த குழுவில் எல்லோருமே ஓயிலானவர்கள்.

எனவே மாடல் (model) என்பதற்கு வேறு சொல் இருந்தால் நன்றாக இருக்கும்.--அராபத்* عرفات 04:48, 27 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏமி_சாக்சன்&oldid=564737" இருந்து மீள்விக்கப்பட்டது