பேச்சு:எளிய இசை இயக்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிம்ப்பிள் ஃகார்மோனிக்கு மோசன் என்பதை எளிய இசைவுறு இயக்கம்/நகர்ச்சி எனக் கூறலாம் என்று நினைக்கின்றேன். இசை இயக்கம் என்பது சற்று நெருடலாக உள்ளது (பொருள் பொருந்தும்தான். இசை என்பது music மட்டும் அல்ல. இசைதல் என்றால் இணங்குதல், ஒத்திணங்குதல் என்றெல்லாமும் இனிதே பொருள்தரும்). இசையிய எனலாம், ஆனல் இது கடினமாக உணரக்கூடும். --செல்வா (பேச்சு) 19:03, 6 மார்ச் 2012 (UTC)

இசை என்பதை விட இசைவுறு என்பதே இணங்குதல் என்பதன் பொருளை மிகவும் பிரதிபலிக்கிறது .உம்: இசைவு +உறு= இசைவுறு இது இசைவு படு என்பதன் பொருளை தரும்.--Sank (பேச்சு) 06:05, 7 மார்ச் 2012 (UTC)

'harmonic motion' என்கிற சொல்லுக்கு 'சீரிசை இயக்கம்' என்பதே தற்போதுள்ள பெயரைக் காட்டிலும் பொருத்தமானது. 'simple harmonic motion' என்பதனை 'தனிச் சீரிசை இயக்கம்' எனப் புத்தகங்களில் பார்த்தேன். --Praveenskpillai (பேச்சு) 23, ஜூன் 2013 (UTC)

பெயர் கருத்தை தெளிவாக உணர்த்தவில்லை. இயக்கம் என்பதும் சற்று நெருடலாக உள்ளது. பெயரை சற்றே அறிவியலுடன் தொடர்புபடுத்தி எழுதுக. பொதுவாக உளது, -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:52, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]
எளிமை இசை இயக்கம் என்றே நாம் படித்தோம். தமிழகத்தில் பள்ளி நூல்களில் எவ்வாறு எழுதப்படுகிறது?--Kanags \உரையாடுக 12:21, 23 சூன் 2013 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 13:29, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழகப் பள்ளிகளின் பாட நூல்களில் 'தனிச் சீரிசை இயக்கம்' என்கிற சொல்லே தரப்பட்டுள்ளது. --Praveenskpillai (பேச்சு) 24, ஜூன் 2013 (UTC)

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ pop music culture போன்ற பண்பாட்டு இயக்கமோ என்ற எண்ணமே தோன்றியது.--இரவி (பேச்சு) 07:12, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

ம்ம்..;-) எனக்கும் இப்படி எண்ணம் தோன்றியது ஆனால் பள்ளிக்கூடத்தில் இப்படிப் படித்ததால் அவ்வளவு உறுத்தலாக இருக்கவில்லை, தனிச் சீரிசை இயக்கம் என்றாலும் சிலர் தனித்தமிழ் இயக்கம் போன்றதோ என்று எண்ணக்கூடும், ஏதேனும் பெயர் பொருத்தமாக இருந்தால் கூறுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:24, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எளிய_இசை_இயக்கம்&oldid=1446859" இலிருந்து மீள்விக்கப்பட்டது