பேச்சு:எல்லாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்வரும் பகுதிகள் எவ்விதச் சான்றுகளும் அற்ற கூற்றுக்கள் என்பதால் கட்டுரையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. --மயூரநாதன் 18:44, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

"நீண்ட கால ஆட்சியும் அனுராதபுரத்தில் நிலவிய அமைதியும் மன்னனைத் தன் படைகளை தளர்த்த வைத்திருந்ததே தோல்வியை தளுவ காரணமாகியது. ஆட்சி மாற்றம் தேவைப்படாது என்றே மன்னன் எண்ணியிருந்தான். ஆனால் அசேலனின் படையெடுப்பின் போது அனுராதபுரத்து சிங்கள மக்களும் பிக்குகளும் காட்டிய ஆதரவும் படைநடவடிக்கை மீதான விருப்பும் மன்னனை நிலைகுலைய வைத்தது. இவை திடீர் மாற்றமல்ல என்பதும் நீண்டகால சதி என்பதையும் மன்னன் புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. நாககுத்தன் உத்தரதேசத்தில். ஈழவூருக்கு செய்தியனுப்ப கால அவகாசமில்லை. மன்னனின் படையிலிருந்த சிங்கள வீரர்களெல்லாம் அசேலனின் பக்கம். இருபத்தியிரண்டு வருடகால ஆட்சியின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதை மன்னன் புரிந்துகொண்டான். கலவரமடைந்த வேளக்கார வீரரிடம் மன்னன் 'ஆட்சியென்பது இவ்வாறானதுதான். அதற்காக எதிரிகளுக்கு அஞ்சி இரகசியத்தை தூக்கிக் கொடுத்துவிட்டுப் பேடி போல ஓடிவிட முடியாது. வாளேந்திய கடைசி வீரன் இருக்கும் வரை எதிரியை எதிர்த்தே சாவோம்.' வேளக்கார வீரர்களின் தலைவன் மறுத்தான். 'நாங்கள் சம்மதமே, ஆனால் அரச வம்சம் அழிந்து விடக்கூடாது. இளவரசரையும், இளவரசியையும், மகாராணியையும் உடனடியாக ஈழவூருக்கு அனுப்பவேண்டும்' மன்னன் சம்மத்தித்தான். அரச வம்சம் காப்பாற்றப்பட்டது. மன்னனும் வீரர்களும் வீரகாவியம் படைத்தனர். மன்னனின் சிரசை கொய்த அசேலன் மூங்கில் கழியில் குத்தி கோட்டை வாசலில் வைக்க உத்தரவிட்டான்."


"செய்தியறிந்த நாககுத்தன் தன் சேனையுடன் அநுராதபுரம் சென்று தானும் மன்னன் வழியை தொடர்ந்தான். ஈழவூர் வந்த மாகாராணி பொன்னம்மைதேவி இளவரசர் எல்லாளன் எனப்படும் ஈழராஜாவையும் நாககுத்தனின் மகன் திக்கஜனையும் போர்க்கலைகள் கற்று வருவதற்காக சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தார். சோழதேசத்தில் பலகலைகளையும் கற்ற இவ்விளவல்கள் கி.மு 145 ஆம் ஆண்டு ஈழவூர் திரும்பினர். நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்த தன் கணவனைக்கொன்று தமிழர்களை ஈழவூருக்கு துரத்தி விட்டதால் கோபமுற்றிருந்த மகாராணி பொன்னம்மைதேவியார் உத்தரதேசத்தில் பெரும் சைனியத்தை தயார்ப்படுத்திவைத்திருந்தார். காலம் கனிந்தது. அநுராதபுர இராச்சியம் மீண்டும் தமிழர் வசமானது."


எல்லாளனின் அமைச்சர்களோ 'உங்களின் தனிப்பட்ட வீரம், வெற்றி என்பவற்றுடன், தமிழ்க்குடி மக்களின் வீரம், வெற்றி, நல்வாழ்வு என்பனவற்றைத் தொடர்புபடுத்துவதால், இத்தனிச்சமர் தமிழ்க்குடி மக்களின் தோல்வியாக மாறிவிடும், மன்னா. வரலாறு உங்களை சிலவேளை மன்னிக்காது'. என்றனர். மன்னன் முகத்தில் வியப்பும் கவலையும் படர்ந்து பரவின. 'மக்களின் எதிர்காலத்தை நினைத்து தனிச்சமரை மறுப்பதா? அல்லது தமிழர் வீரத்திற்கேற்ப எதிரியின் அழைப்பை ஏற்று தனிச்சமர் புரிவதா?' மறு கணமே தெளிந்தான். மறுப்பதற்கு நாம் ஒன்றும் பேடிகளல்லர். கோட்டை வாயில் திறக்கப்பட்டது. இரு சேனைகளும் சூழ கிழப்புலியும் இனவாத சிங்கமும் போரிட்டன. போர் நீண்டது. எல்லாளனின் போர் வலிமை விகாரைமகாதேவியை திகைப்படைய வைத்தது. நிலைமையை புரிந்த விகாரைமகாதேவி கூட்டத்திலிருந்து வெளியே வந்து 'மகாராஜா... எலாரா...' எனக் கூக்குரலிட்டாள். குரல் வந்த பக்கம் எல்லாளன் திரும்பினான். 'என் மகன்... மகாராஜா' கூப்பிய கரங்கள் கூறின. திகைத்து நின்ற துட்டகாமினி மறுகணமே தன் தாயின் 'யுத்த தந்திரத்தை' புரிந்து கொண்டான். எல்லாளனின் மார்பை வேல் துளைத்து நிலை கொண்டது. கி.மு. 101 ஆம் ஆண்டு, 44 ஆண்டுகால ஆட்சியின் அஸ்தமனத்துடன், எந்த மதத்தை போற்றிப்பாதுகாத்தானோ அம்மதத்தினாலேயே வெட்டி சாய்க்கப்பட்டான்.
எல்லாளனின் நீதி வழுவாமையைக் கூறமுயலும் இக்கதைகள் நம்பகமானவையல்ல. அவனது செங்கோலாட்சியைப்புலப்படுத்த மகாவம்சம் எடுத்துக் கொண்ட ஐதீகக்கதைகள் எனலாம். ஏனெனில் எல்லாளனின் மகன் இறுதிப்போரிலேயே வீரகாவியமானான் என்பதை மகாவம்சமே கூறுகின்றது. அவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா என்பதில் மகாவம்சமே முரண்பட்டு நிற்கின்றது. எனினும் மகாவம்சத்தின் இக்கதைகள் மகாவம்சம் எவ்வாறெல்லாம் திரித்து சாதகமாக்கி எழுதப்பட்டது என்பதற்கும் இவை சான்றாகின்றன.

இனவெறியூட்டும் கருத்துக்கள்[தொகு]

இக்கட்டுரையில் ஏராளமான கருத்துக்கள் இனவெறியூட்டுவனவாகவே காணப்படுகின்றன. சோழர்கள் இலங்கையை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள். அவர்கள் எந்த இனத்தவராயினும் ஆக்கிரமிப்பாளர்கள் எங்கேயும் வரவேற்கப்படுவதில்லை. சோழர்கள் தமிழர்களென்பதற்காக அவர்கள் மதுரையை ஆக்கிரமித்தபோது பாண்டிய நாட்டவர்கள் அவர்களை வரவேற்று உபசரித்தார்களா என்ன? வட இலங்கையை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக ஒரு போர் நடந்திருப்பின், அதனை வெறுமனே தமிழருக்கெதிரான போராகச் சித்தரிப்பது தவறு. அது இனவெறியூட்டும் செயல்.--பாஹிம் (பேச்சு) 07:39, 1 சனவரி 2013 (UTC)

மகாவம்சம் மாத்திரமே ஆதாரம்[தொகு]

எல்லாளன் ஆக்கிரமிப்பாளன் என மகாவம்சம் மாத்திரமே கூறுகின்றது. இக்கட்டுரை தனியே மகாவம்சமும் அதனை ஆதாரமாகக் கொண்ட பல வரலாற்று நூல்களை மையப்படுத்தி மாத்திரமே எழுதப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரை நம்பகத்தன்மை அற்றது. சில நூல்கள் எல்லாளன் இலங்கையின் வட பிரதேச மன்னனென குறிப்பிடுகின்றது. எப்படிப்பார்த்தாலும் எல்லாளன் ஒரு ஆக்கிரமிப்பாளனே. எனவே இக்கட்டுரையை நடுநிலமையற்றதாக்கவும். எனினும் இக்கட்டுரையிலுள்ள இனவெறியூட்டும் கருத்துக்களை மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட குமுதினி டையஸ் ஹபுதானிதி எழுதிய தரம் 10 வரலாறு என்ற புத்தகமே கூறுகின்றது.

கிருத்திகன் (பேச்சு) 19:00, 18 சனவரி 2013 (UTC)

மேலதிக விளக்கத்திற்காக[தொகு]

இக்கட்டுரையினை சீர்படுத்த விரும்புகிறேன். எனவே, இங்கு வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கான தெளிவான பதிலை பெற விரும்புகிறேன்.

 • //இக்கட்டுரையில் ஏராளமான கருத்துக்கள் இனவெறியூட்டுவனவாகவே காணப்படுகின்றன.// {{cn}} வார்ப்புரு இடப்பட்டவையா?
 • //தமிழருக்கெதிரான போராகச் சித்தரிப்பது தவறு// எப்பகுதிகள்?

மேலும், எல்லாளன் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்றால், பல நபர்களை அப்பட்டியலில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படலாம். எ.கா.

 • விசயன் - பூர்வீகம் இந்தியா, ஆக்கிரமித்தது இலங்கையை
 • சே குவேரா பூர்வீகம் அர்ஜென்டீனா, போரிட்டது கியூபா, கொங்கோ மற்றும் சில
 • உமறு இப்னு அல்-கத்தாப் - பூர்வீகம் அரேபியா ஆக்கிரமித்தது ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா, அர்மீனியா.

எனவே, பொதுப்படையான கருத்துக்கள் இன்றி, ஆதாரத்துடன் விளக்கமளிக்கவும். நன்றி. --Anton (பேச்சு) 04:43, 14 பெப்ரவரி 2013 (UTC)

ஆமாம், நடுநிலை மிகவும் முக்கியம், வக்கிப்பீடியாவின் அதிகாரபூர்வ WP:NPOV ஐ பார்க்கவும். 175.157.244.74 06:07, 22 சூலை 2015 (UTC)

எனக்குத் தெரிந்தவை[தொகு]

//உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி அயிஸ்வரியாவை மணந்திருந்தான்.//

உரோகன இளவரசியின் பெயர் சவெர என்று நான் படித்திருக்கிறேன். ஐசுவர்யா மற்றொரு பெயரா ஆதாரம் தரவும்.

//வட இலங்கையை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக ஒரு போர் நடந்திருப்பின், அதனை வெறுமனே தமிழருக்கெதிரான போராகச் சித்தரிப்பது தவறு. அது இனவெறியூட்டும் செயல்.//

துட்டகாமுனி தவிர்த்து பல முறை ஈழத்தமிழருக்கும் சிங்கள்ருக்கும் மன்னராட்சி காலத்தில் பலமுறை போர் நடந்துள்ளன. அதை யாரும் தமிழருக்கு எதிரான போர் எனக்கூறவில்லை. துட்டகாமுனியை மட்டும் அப்படிக்கூறுவதன் காரணம் அவன் சிறு வய்தில் இருந்தே தமிழருக்கு எதிரான கருத்துக்களால் வளர்க்கப்பட்டான் என்பதே.

//சோழர்கள் தமிழர்களென்பதற்காக அவர்கள் மதுரையை ஆக்கிரமித்தபோது பாண்டிய நாட்டவர்கள் அவர்களை வரவேற்று உபசரித்தார்களா என்ன? //

அப்படி பொதுவாக கூறிவிட இயலாது. ஈராக் மீது அமேரிக்கா படை எடுத்த போது சில ஈராக்கியர்கள் அமேரிக்காவின் படையை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்கள். சில பேர் அப்படி அல்ல. மேலும் அக்ரமிப்பு என்பது போர் தொடுக்காமல் திருட்டு தனமாக நாட்டில் நுழைந்து விட்டு பிற்பாடு நாடே என்னது என்று கூறினால் தான். உதாரணத்துக்கு விசயன் இயக்கர் குலத்தவர்களின் திருமண விழாவின் போது மாறுவேடம் பூண்டு திடீரன ஆயுதமற்றவர்களை எல்லாம் கொன்றொழித்து நாட்டை பிடித்தது ஆக்ரமிப்பு ஆகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:01, 26 பெப்ரவரி 2013 (UTC)

ஆம், விசயன் ஆக்கிரமிப்பாளன் ஆனால் எல்லாளன் ஆக்கிரமிப்பாளன் அல்ல.--ஆதவன் (பேச்சு) 13:48, 25 மே 2013 (UTC)

மகாவம்சத்தில் தமிழர் வரலாறு மறைக்கப்படுகிறதா அல்லது தவிர்க்கப்படுகிறதா?[தொகு]

தமிழர் வரலாற்றை மகாவம்சம் மறைக்கிறது என்ற கூற்றை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. மறைத்தது எனில் எல்லாளன் வரலாற்றை கூறாமலே விட்டிருக்கலாமே? பௌதத்த்தை அதிகம் பேசும் மகாவம்சம் பௌத்தத்தை மட்டும் ஆதரித்தவர்களின் தகவல்களை அதிகமாக கூறுகிறதே தவிர தமிழரசர் யாரும் இலங்கையை ஆண்டதில்லை என்று கூறவில்லையே? தமிழரசர் அனைத்து மதங்களையும் ஆதரித்ததால் அவர்களை பற்றி சிறிதே பேசுகிறது எனலாம். எந்த கருத்தையும் மாற்றிக் கூறுவதாக நான் படித்ததில்லை.

மேலும் விகார மாதேவி உடலழகை காட்டி எல்லாளனின் தளபதிகளை தன் பக்கம் ஈர்த்தாள் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் அதை நியாயப்படுத்துகிறதா? மற்றவர்களும் அதே போல் செய்யலாம் என்று தூண்டுகிறதா? அப்படி எனில் அதற்கான வரி என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:36, 28 பெப்ரவரி 2013 (UTC)

ஆம் ஆக இருக்கலாம் இல்லை ஆக இருக்கலாம்.ஆனால் அவள் எல்லாளனின் தளபதிகளை ஈர்க்கவில்லை.எல்லாளனின் முக்கிய பாதுகாப்பிடத்தில் (கோட்டை) ஒன்றை பாதுகாத்த தளபதியையே மயக்கினாள்.அனால் மற்றவர்களை தூண்டுவதற்காக இல்லை.எல்லாளனின் ஆட்சி மக்களால் விரும்பப்பட்டது.ஆகையால் அவனுடன் சண்டையிட துட்டகைமுனு போராட வேண்டியிருந்தது. அனைத்து படைகளையும் தோற்கடித்த அவனால் இவ்விடத்தை தகர்க்க முடியவில்லை என்று கூறலாம்.ஆகையால் இவ் யுக்தியை கையாண்டான்.எனினும் எல்லாளன் மக்களின் எவ்வித எதிர்ப்புமின்றி அரசனானான்.நாற்பத்துநான்கு ஆண்டு ஆண்டான்.இவனை கிளர்ச்சியாளன் என கூறமுடியாதென நினைக்கின்றேன்.ஏனென்றால்

இவனைப்போல் பலர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.இது அரச பலம் குறைந்த நிலையில் ஏற்பட்டுள்ளது.--ஆதவன் (பேச்சு) 13:42, 25 மே 2013 (UTC)

விகாரமகாதேவி இரண்டு நபரை ஈர்த்ததாக நான் படித்தேன். செவ்வாய் கிழமை அன்று விகாரமாதேவி கட்டுரையை ஆதாரத்துடன் உருவாக்குவேன். அப்போது வந்து பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:23, 25 மே 2013 (UTC)

இக்கட்டுரையை எழுதிய ஆசிரியர் ஒருவரின் கூற்றுப்படி தன் தாயை மணம் செய்வதாக காட்டி எல்லாளனின் தளபதியை ஏமாற்றியதை போர் தந்திரம் என்றே மகாவம்சம் கூறுவது தற்போது தெரிந்தது மேற்கோள்கள் இணைக்கப்பட்டன.

ஆனால் அதை சரி என்று கூறுவதாகவோ நியாயப்படுத்துவதாகவோ தகவல் இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:42, 27 மே 2013 (UTC)

கட்டுரை இனவெறி[தொகு]

இக்கட்டுரையில் இனவெறி சம்பந்தமான விடயங்கள் உள்ளது தான் அதை நீக்கி விடலாமே?

விகார மாதேவி கட்டுரை உருவாக்கப்பட்டுளது. மேலும் இக்கட்டுரையில் உள்ள இன வெறி ஊட்டும் கருத்துகள் எவை எனச் சுட்டவும்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:25, 27 மே 2013 (UTC)

ஆதாரம்[தொகு]

ஆதாரம் தேவைப்பட்ட இடங்களில் ஆதாரங்கள் சேர்க்கப்பட்டு, {{POV}}, {{cn}}, {{who}} வார்ப்புருக்கள் நீக்கப்பட்டுவிட்டன. இவற்றைச் சேர்ப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் உரையாடல் பக்கத்தில் தருவது வீண் உழைப்பைத் தடுக்கும். நன்றி. --Anton (பேச்சு) 13:38, 6 ஆகத்து 2013 (UTC)

இந்தக் கட்டுரையில் தேவையற்ற பல விடயங்கள் இருப்பதும். நடுநிலையற்ற தன்மை இருப்பதும் உண்மைதான். குறிப்பிட்ட சில இடங்கள் மட்டுமன்றிக் கட்டுரையின் ஒட்டுமொத்தமான தொனியே (குறிப்பாகப் பின்பகுதி) பிரச்சினைக்கு உரியதாகத்தான் உள்ளது. எல்லாளனைப் பற்றிய கட்டுரையில், எல்லாளனுக்கு முக்கியத்துவம் தராமல், மகாவம்சத்தையும், எல்லாளனுக்கு எதிரானவர்களையும் விமர்சிப்பதாகவே கட்டுரையின் தொனி அமைந்துள்ளது. எல்லாளன் ஆக்கிரமிப்பாளனா இல்லையா என்பது இங்கே முக்கியம் அல்ல. இதையெல்லாம் சான்றுகளின் அடிப்படையில் நிறுவுவது சாத்தியம் இல்லை. மகாவம்சம் இலங்கை வரலாற்றை நடுநிலை நின்று தருகின்ற நூல் அல்ல. பௌத்தத்தின் வரலாற்றைக் கூறுவதே அதன் முக்கியமான நோக்கம். அதனால் பௌத்தம் சார்ந்த சிங்களவர்களை அது பெருமைப்படுத்தும் என்பது வெளிப்படை. இந்த நோக்கத்துக்காகப் பல கட்டுக்கதைகளும் கூட அதிலே சேர்க்கப்பட்டிருக்கலாம். எனவே, இதிலிருந்து ஒரு விடயத்துக்குச் சார்பாகவோ எதிராகவோ சான்று காட்டும்போது கவனமாக இருக்கவேண்டும். முறையானதும் நடுநிலையானதுமான ஆய்வுச் சான்றுகளைப் பயன்படுத்தி இக்கட்டுரை முழுமையாகத் திருத்தி எழுதப்படவேண்டும் என்பதே எனது கருத்து. ---மயூரநாதன் (பேச்சு) 15:13, 6 ஆகத்து 2013 (UTC)
👍 விருப்பம்-- நி ♣ ஆதவன் ♦ Heliopsis July 2011-2.jpg (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:17, 6 ஆகத்து 2013 (UTC)
சேனன் குத்திகன் பற்றிய விளக்கம் தேவையில்லை போலுள்ளது. எல்லாளனுக்கு இவர்களுடன் என்ன சம்பந்தம். தனிக்கட்டுரையாக்கலாம்.

கட்டுரையின் தொனியில் சிக்கல் இருப்பது உண்மைதான். {{POV}}, {{cn}}, {{who}} கேட்பவர்கள் முறையாக கேள்வி எழுப்பினால் அதைக் கருத்திற் கொண்டு, கட்டுரையினை மேம்படுத்தலாம். எ.கா: அம்பதித்தகக் கோட்டையின் தளபதியான தித்தம்பனையும் தன் அழகையும் மணம் செய்வதற்காக ஆசையும் காட்டி சூழ்ச்சியால் கைப்பற்றிக் கொள்கிறாள். இதை மகாவம்சம் போர்த்தந்திரோபாயம் என வர்ணிக்கிறது. இது தேவையற்றது என விளக்கினால், அதில் கருத்துள்ளது. மாறாக, {{cn}} வார்ப்புரு இடுவதுதான் குழப்பமானது. அதனால்தான், இவற்றைச் சேர்ப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் உரையாடல் பக்கத்தில் தருவது வீண் உழைப்பைத் தடுக்கும் எனக் கருதுகிறேன். --Anton (பேச்சு) 13:48, 27 ஆகத்து 2013 (UTC)


இணைக்கலாமா?[தொகு]

மனுநீதிச் சோழனும் எல்லாளனும் ஒருவரா? இணைத்துவிடலாமா? --AntonTalk 12:46, 17 மே 2014 (UTC)

அப்படி ஒன்றுமில்லை. முதற் தடவையாகக் கேள்விப் படுகிறேன். எல்லாளனுக்கு என்று தனிச் சரித்திரம் உள்ளது.--Kanags \உரையாடுக 13:48, 17 மே 2014 (UTC)
மற்றவர்களின் கருத்தும் தேவை. அதுவரை வார்ப்புருவை நீக்க வேண்டாம். --AntonTalk 14:27, 17 மே 2014 (UTC)
en:Elara (monarch) (en:Manu Needhi Cholan) இங்கு இருவரும் ஒருவரே என்ற தொனியில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி இங்கு முக்கிய உரையாடல் அவசியம். அதனை ஆ.வி.யிலும் பயன்படுத்தலாம். --AntonTalk 14:33, 17 மே 2014 (UTC)
சரி, இணைத்து விடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 14:36, 17 மே 2014 (UTC)

இருவரும் ஒருவராகத் தான் இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற இணைப்புக்கு அதிகளவில் ஏற்கப்பட்ட ஆய்வாளர்கள் கருத்துகள் வேண்டும். ஆங்கிலக் கட்டுரையில் மனுநீதிச் சோழன் உட்தலைப்பில் பெரிய புராணம், சிலம்பையும், மகாவம்சத்தையும் மேற்கோள் மட்டுமே கூறியதாகத் தெரிகிறது. இவற்றை ஆராய்ந்து இருவரும் ஒருவரே என ஒரு ஆய்வாளரும் அதை மற்றொரு ஆய்வாளர் ஏற்றும் இருக்க வேண்டும். அதன் பிறகே இவற்றை இணைக்க முடியும்.

//எல்லாளனுக்கு என்று தனிச் சரித்திரம் உள்ளது.//

எல்லாலனுக்கு மட்டுமே தனி நெடும் வரலாறு உண்டு. மனுநீதிச் சோழனுக்கு பெரிய புராணம், சிலம்பு இரண்டில் வரும் வரிகளே வரலாறு. மற்றவை அதிலிருந்து புணைந்துறைத்தவை. என் கருத்தில் இருவரும் ஒருவரே. ஆய்வாளர்கள் யாரும் இதைக் கூறாத பட்சத்தில் ஒப்பு நோக்குக என்னும் உப தலைப்பில் இருவரின் கதைகளும் ஒரே மாதிரி இருப்பதாகத் தரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:34, 17 மே 2014 (UTC)

ஏற்கனவே இது போன்று விடயங்கள் விக்கிப்பீடியாவில் சில உள்ளன. எடுத்துக்காட்டுக்கு [1] இந்த இணைப்பைப் பார்க்கவும். பசும்பூண் பாண்டியன், தலையாலங்கனாத்துச் செருவென்ற செழியன் இருவரும் ஒருவர் என சில ஆய்வாளர்கள் சொல்லி இருக்கின்றனர். மாற்றுக் கருத்தும் உண்டு. அதனால் இந்த கட்டுரைகளிலும் ஒப்பு நோக்குக எனக் கூறி எல்லாள மனுநீதிச் சோழன் பாத்திரங்களின் ஒற்றுமைகளைத் தரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:09, 18 மே 2014 (UTC)

எனக்கும் இவ்வாறு ஒரு ஐயம் வரலாற்றில் எல்லாளன் பற்றி படிக்கும் பொழுது ஏற்பட்டிருந்தது. பாடசாலை வரலாற்று ஆசிரியரிடம் கேட்ட பொழுது இருவரும் தனி தனி மனிதர்கள் என்றே ஆசிரியர் கூறினார்.-- நி.மாதவன்  ( பேச்சு  ) 04:46, 18 மே 2014 (UTC)

User:maathavan அந்த ஆசிரியர் தற்போதும் உங்கள் தொடர்பில் இருந்தால் அவரை விடாதீர்கள்.

 1. எதனால் இருவரும் தனித்தனி நபர் என்கிறீர்கள்?
 2. இருவருக்கும் உள்ள கன்றைக் கொன்ற இளவரசனைக் கொன்ற கதை ஒரே மாதிரி இருப்பது எப்படி?
 3. இருவருமே சோழர்களாய் இருந்தது எப்படி?
 4. இரண்டுமே மதச்சார்பு நூல்களில் வந்தது எப்படி?
 5. இருவரும் ஒருவர் எனச் சொல்லிய ஆய்வாளர்கள் யார்? நூல்கள் என்ன? அவர்கள் தரும் இலக்கிய மேற்கோள் வரிகள் என்ன?
 6. இருவரும் வேறு எனச் சொல்லிய ஆய்வாளர்கள் யார்? நூல்கள் என்ன? அவர்கள் தரும் இலக்கிய மேற்கோள் வரிகள் என்ன?

போன்ற கேள்விகளை கேளுங்கள். ஆய்வாளர் நூல்களை அவர் சொன்னால் அதை இங்கு மேற்கோளாக காட்டுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:05, 18 மே 2014 (UTC)

கேட்காமல் விடுவேனா? கேட்டேன். பாடசாலை அடுத்த பாட மணி ஒலிக்க அந்த ஆசிரியர் அடுத்த வகுப்பில் சொல்லுகிறேன் என்று சென்றுவிட்டார். நானும் மறந்து விட்டேன். திரும்பவும் ஒரு தடவை ஆசிரியரிடம் கேட்டு பார்க்கின்றேன். இன்று டியூசனில் வரலாற்று பரீட்சை உள்ளது. ஆதலால் இன்று டியூசன் ஆசிரியரர் வருவார். அவரிடம் கேட்டுப்பார்க்கின்றேன். -- நி.மாதவன்  ( பேச்சு  ) 05:18, 18 மே 2014 (UTC)

மன்னிக்கவும் நான் இன்று கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், வரலாறு போன்ற பரீட்சைகள் இருப்பதனால் படித்தவற்றை மீண்டும் திரும்பப் பார்க்க வேண்டும். சென்று வருகின்றேன். -- நி.மாதவன்  ( பேச்சு  ) 05:21, 18 மே 2014 (UTC)

தயை கூர்ந்து இங்கு காணவும்,மனுநீதியின் இயற்பெயர் - மல்லாளன், மனுநீதிச் சோழன் எல்லாளனின் சகோதரனாக சித்தரிக்கப்பட்டுள்ளது, ஆண்டு கி.மு 256, சரவணன் பெ 05:50, 18 மே 2014 (UTC)

சரவணன், இக்கதையை நாம் மேற்கோளாகக் கொடுக்க முடியாது. இதில் பல முரண்பாடான பெயர்கள் உள்ளன. ஆதாரங்களும் இல்லை.--Kanags \உரையாடுக 05:59, 18 மே 2014 (UTC)
எல்லாளனும் மனுநீதிச்சோழனும் ஒருவர் தான் என்றே நீங்கள் கூறும் இடத்தில் உள்ளது சரவணன் அவர்களே-- மாதவன்  ( பேச்சு  ) 15:43, 19 சூன் 2014 (UTC)

பயனர்:Kuzhali.india புராணத்தில் வருவது எல்லாம் வரலாறு ஆகாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:00, 13 செப்டம்பர் 2014 (UTC)

மனுநீதிச்சோழன் உண்மையாக வாழ்ந்த ஒரு மன்னர் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. பார்க்க: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=3594

--Kuzhali.india (பேச்சு) 06:04, 14 செப்டம்பர் 2014 (UTC)

விகடன் வரலாற்று ஆய்விதழ் அல்ல. அது ஒரு வார இதழ் மட்டுமே. புராணப் பாத்திரங்கள் கல்வெட்டுகளில் வருவதை எல்லாம் ஆதாரமாகக் கொள்ள மாட்டார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:49, 14 செப்டம்பர் 2014 (UTC)

கல்வெட்டுகள், பட்டயங்கள் போன்றவை வரலாற்று ஆவணங்களாகக் கருதப்படுவதை நினைவூட்ட விரும்புகிறேன். பார்க்க:http://www.britannica.com/EBchecked/topic/189962/epigraphy--Kuzhali.india (பேச்சு) 11:45, 18 செப்டம்பர் 2014 (UTC)

கல்வெட்டுப் பட்டயங்களில் புராணப் பாத்திரங்கள் வரும். அவை நமபகத் தன்மை அற்றவை. பட்டயங்களில் வரும் பாண்டியர்கள் எல்லாம் பகுப்பு:தொன்மவியல் பாண்டியர்கள் என்றே விக்கியில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். கல்வெட்டுகள் குறிப்பிடும் சமகால அரசர்கள் பற்றிய சான்றுகள் உண்மையாக இருக்கலாம். ஆனால் கல்வெட்டுகள் குறிப்பிடும் பழங்கால அரசர்கள் உண்மையாக இருக்க வாய்ப்பு மிகக்குறைவு. நான் சொன்னதை மீண்டும் நன்றாகப் படியுங்கள்.

// புராணப் பாத்திரங்கள் கல்வெட்டுகளில் வருவதை எல்லாம் ஆதாரமாகக் கொள்ள மாட்டார்கள்.//--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:38, 18 செப்டம்பர் 2014 (UTC)

கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா தரும் மனுசரிதக் கல்லெழுத்தும் தகவல்களும் உள்ள புத்தக முகவரி:

--Kuzhali.india (பேச்சு) 15:17, 24 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி. கல்வெட்டு கூறுவதும் புராணப் பாத்திரமன்றோ? பாண்டியர் செப்பேடுகளில் வரும் சமகாலப் பாண்டியர்கள் வரலாற்று மாந்தர். ஆனால் பாண்டியர் தான் பிரம்மனையே படைத்தார்கள் போன்ற தொன்மங்களை யாரும் வரலாறாகப் பேசவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:18, 24 செப்டம்பர் 2014 (UTC)

கல்வெட்டு சுட்டுவது மனுநீதிச்சோழனின் அமைச்சனின் வம்சாவளியினர் குறித்த தகவல்.

தாங்கள் சுட்டும் கருத்துக்கான வரலாற்றறிஞர் தகவல்களையும் பகிர்ந்தால் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே மனுநீதிச்சோழன் வரலாறு என்றும் புராணக்கதை என்றும் முரண்பாடான கருத்துகள் உள்ளன எனக்கூறி இணைத்துவிடலாம்.

 • கல்வெட்டறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் திருவாரூர் கல்வெட்டையும் திருவாரூர் சிற்பத்தையும் ஆதாரமாகக் கொள்கிறார்.(இதழ் விகடன் எனினும் சொல்பவர் யார் என்பதைக் கவனிக்கவேண்டியுள்ளது)
 • புலவர் வே.மகாதேவன், "சேக்கிழார் சொல்லாத செய்திகள்" என்ற தலைப்பில் திருவாரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மனுவின் அமைச்சர் பற்றிய செய்திகளையும், அவற்றை சேக்கிழார் சொல்லாது விட்டதற்கான காரணங்களையும் ஆராய்கிறார். (அமுதசுரபி, தீபாவளிமலர் 2011, அமுதசுரபியை விகடன் போல் சுலபமாக நிராகரிக்க இயலாது எனக்கொள்ளலாம்).
 • கல்வெட்டறிஞர் வேங்கடராமையா இலங்கையின் அசேலன் எனும் மன்னரை வென்ற சோழ அரசனையும், இக்கல்வெட்டில் கூறப்படும் மனுவையும்,சிற்பத்தையும் இணைத்துத் தகவல் தருகின்றார். வரலாறு என்ற பதமே இவரால் பயன்படுத்தப்படுகின்றது.

--Kuzhali.india (பேச்சு) 08:20, 25 செப்டம்பர் 2014 (UTC)

 1. முதல் புல்லட்டுக்கு பதில் - அது அது கல்வெட்டில் கூறப்படும் சமகால அரசன்/மக்கள் பற்றி அல்ல.
 2. இரண்டாம் புல்லட்டுக்கு பதில் - //அமுதசுரபி// என்பது வரலாற்று/தொல்லியல்/மொழியியல் இதழா? ஆன்மிக இதழா? அது வரலாற்று/தொல்லியல்/மொழியியல் வல்லுநரால் பியர் ரிவியூ செய்யப்படுகிறதா?
 3. மூன்றாம் புல்லட்டுக்கு பதில் - அவர் வரலாறு என்ற பதத்தை பயன்படுத்தலாம். அவர் இக்கதையை வரலாறு எனச் சொல்கிறார் எனத் தரலாம்.

//கல்வெட்டு சுட்டுவது மனுநீதிச்சோழனின் அமைச்சனின் வம்சாவளியினர் குறித்த தகவல். //

அமைச்சரின் வம்சாவளியினருக்கும் தான் புராண அந்தஸ்து கொடுக்கப்பட்டு வந்துள்ளதே. அதனால் அவர்களையும் புராணப்பாத்திரமாகத்தான் பார்க்க வேண்டும். பாண்டியனுக்கு சந்திரன் தான் முன்னோன் என எப்படி வரலாறு படைக்க இயாலாதோ அதே போல் தான் இதுவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:43, 25 செப்டம்பர் 2014 (UTC)

//தாங்கள் சுட்டும் கருத்துக்கான வரலாற்றறிஞர் தகவல்களையும் பகிர்ந்தால்//

புராணப்பாத்திரத்தை புராணப்பாத்திரம் எனச் சொல்ல எதுக்கு வரலாற்றறிஞர் கருத்து தேவை? புராணப்பாத்திரத்தை வரலாறு எனச் சொல்வதற்குத்தான் வரலாற்றறிஞர் கருத்து தேவை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:51, 25 செப்டம்பர் 2014 (UTC)

கண்ணகி கட்டுரையைப் பார்க்கவும். இதில் கண்ணகியையே வரலாற்றுப் பாத்திரமாகத் தரவில்லை. அவளே காப்பியத்தின் தலைவி எனத்தான் கூறப்படுகிறாள். இதில் அவள் கூறும் மனுநீதிச் சோழனை வரலாற்றுப் பாத்திரம் எனக் கூறினால் அது கலைக்களஞ்சிய நடை ஆகாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 25 செப்டம்பர் 2014 (UTC)

புராணங்கள் மற்றும் மனு குறித்த தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர் கருத்து:

'...வரலாற்று நினைவுகள்தான், வழக்காறுகளாகிப் பின்னர் சில புனைவுகளுடன் புராணங்களாகின்றன. தொடர்ச்சியான வரலாறு கொண்ட எந்த சமூகத்திலும், புராணங்கள் தோன்றுவதற்கான அடிப்படை இல்லை. வரலாற்று தொடர்ச்சி கொண்ட சமூகங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வழக்காறாக கூறப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட சமூகம் வேறு சமூகத்திடம் அரசியல் மேலாண்மையை இழந்து கீழ்நிலைக்குச் சென்றபொழுது வரலாற்றுத் தொடர்ச்சியை இழந்து விடுகின்றது. இக்கட்டத்தில் முதல் சமூகத்தில் வழங்கப்பட்ட வழக்காறுகள் புராணங்களாக மாறுகின்றன. ..

..சோழருக்கும் நீண்ட, நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி இருந்ததாலேயே மனுநீதிச் சோழனும், சிபிச் சக்கரவர்த்தியும் கடவுள்களாக மாறாமல் வரலாற்று நாயகர்களாக காட்சியளிக்கின்றனர். .. http://www.sishri.org/tt6.html --Kuzhali.india (பேச்சு) 13:47, 25 செப்டம்பர் 2014 (UTC)

இனி நான் இங்கு உரையாடுவது சரிவராது. இது கலைக்களஞ்சிய நடை அல்ல என விக்கியில் இருந்தே பல எடுத்துக்காட்டுகள் விளக்கங்கள் கொடுத்தும் இதற்கு மேல் இவ்வுரையாடலை இங்கு தொடர விரும்பவில்லை. பசு வந்து மணி அடித்தது என்ற கதையை வரலாறு என்றால் சிரிப்பார்கள். வேறு யாரின் பெயரையாவது இங்கு சேர்த்து விளக்கம் கேட்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:37, 25 செப்டம்பர் 2014 (UTC)

தீர்வு: இரு நபர்களும் வேறானவர்கள் அல்ல என்பதை நம்பகமான மூலங்களில் இருந்து தெளிவுபடுத்தாததால் இரு கட்டுரைகளும் இணைக்கப்பட்டு தனிக் கட்டுரையில் தென்காசி குறிப்பிட்டதுபோல் ஒப்புநோக்கல் பற்றி குறிப்பிடலாம். --AntonTalk 06:27, 12 திசம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:56, 12 திசம்பர் 2014 (UTC)

User:AntanO நான் இவற்றை இணைக்கனும்னு சொல்லவே இல்லையே. இரண்டு பாத்திரங்கள் ஒன்றென சரியாக தெரியாமல் இருந்தால் அதை இணைக்காமல் தனித்தனியாக கொடுப்பதே சரியாக வரும்.

பசும்பூண் பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்#ஒப்பு நோக்குக பார்க்கவும். மனுநீதிச் சோழன் கட்டுரையை மீளமைப்பதே சரியாக இருக்கும். இதே போல உக்கிர குமார பாண்டியன் முருகன் ஒப்பீடும் உண்டு. ஆனால் இரணடும் தனித்தனியாகவே இருக்கின்றன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:36, 13 பெப்ரவரி 2015 (UTC)

[2] ஆங்கில விக்கியில் பேசிப் புரிய வைக்க கடினம் என்பதை நாமிருவரும் ஏற்கனவே உணர்ந்திருக்கிறோம். ஆனால் சீன பௌத்த கந்தனை ஆங்கில விக்கியர் அதிகம் அறிவர் என்பதால் இரண்டும் தனித்தனியான கட்டுரையாக இருக்கின்றன. எல்லாளன் மனுநீதி சோழன் பாத்திரங்களுக்கு ஆங்கில விக்கியில் அதிக புகழில்லை என்பதால் தெரியாமல் இணைத்துள்ளனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:24, 13 பெப்ரவரி 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எல்லாளன்&oldid=1883686" இருந்து மீள்விக்கப்பட்டது