பேச்சு:எறும்புத் தொடர்வட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எறும்புத் தொடர்வட்டம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மரு.கார்த்தி, ஆலை என்ற பொருள் இந்த இடத்தில் பொருந்தவில்லை போலத் தோன்றுகிறது. இக்கட்டுரையின் தலைப்பை எறும்புச் சுழல் என்று மாற்றலாமா? இவ்விளைவின் இன்னொரு பெயர் ant death spiral ஆகும். -- சுந்தர் \பேச்சு 09:45, 22 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

நான் இதை ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்த்த போது ant mill --> எறும்பு ஆலை என்று நேரடியாக மொழிபெயர்த்து விட்டேன். செக்காலையில் மாடு மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி வருவது போலும் காற்றாலையில் காற்றாடி சுழன்று கொண்டே இருப்பது போல எறும்புகள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதால் ant mill என்ற ஆங்கிலப் பெயர் ஏற்பட்டிருக்கக் கூடுமென்று எண்ணினேன். எறும்புச் சுழல் என்ற பெயர் நன்றாகவே உள்ளது. அதற்கே மாற்றி விடலாம். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 13:42, 26 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி, கார்த்திகேயன். வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லையெனில் தலைப்பை மாற்றி விடலாம். -- சுந்தர் \பேச்சு 14:31, 26 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
எறும்பு வட்டம் என்பது இன்னும் பொருந்துமோ? சுழல் என்பது சரியான சொல் போல் தோன்றினாலும், வேறு மாற்றுச்சொல் இருந்தால் நன்றாக இருக்கும்போல் தோன்றுகின்றது (அதாவது சுழல் என்பதற்கு மாறாக சுற்று என்பது போல் பொருள் தரும் சொல்- சிறு வேறுபாடு உண்டு). கட்டுரையில் வட்டமடித்தல் என்றும் பயன்படுத்தியிருப்பதால் எறும்புவட்டம் எனலாமோ என்று நினைக்கின்றேன்.--செல்வா 14:40, 26 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நல்ல பரிந்துரை, செல்வா. இப்போது மெல்லிய வேறுபாடு புலனாகிறது. சுழல் என்பது ஒரு நீர்மமோ, கூழ்மமோ, அவை போன்ற பொருளோ தன்னூடே உள்ள ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு சுற்றுவதற்குப் பொருந்தும் போலத் தெரிகிறது. வட்டமடித்தல் இன்னும் பொருத்தமாக இருப்பதும் வழக்கில் இங்குள்ள பொருளிலேயே உள்ளதும் நினைவுக்கு வருகிறது. கழுகு கோயிலை வட்டமடித்தது, விடலைப்பையன் ஏன் நம் வீட்டைச்சுற்றி வட்டமடிக்கிறான்? என்பது போல வழக்கில் இருக்கிறதே. -- சுந்தர் \பேச்சு 14:47, 26 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வட்டமடிப்பதையும் தொடர்ந்து பல மணி நேரம் வட்டமடிப்பதையும் குறிக்கும் வகையில் எறும்புத் தொடர்வட்டம் எனலாமா? -- சுந்தர் \பேச்சு 15:55, 26 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
எறும்புத் தொடர்வட்டம் என்ற பெயரில் யாருக்கும் ஆட்சேபணை இ‌ல்லையென்றால் அப்பெயருக்கே நகர்த்தி விடலாம் --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 07:25, 27 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
வேறு யாருக்கும் மறுப்பில்லை போலிருக்கிறது, கார்த்திகேயன். -- சுந்தர் \பேச்சு 02:41, 28 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]