பேச்சு:எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவருடைய கடைசிப் பெயர் 'ரதர்ஃபோர்டு' தான் ரூதர்ஃபோர்டு அன்று! அருள்கூர்ந்து மீண்டும் ரதர்ஃபோர்டு என்பதற்கே மாற்றுங்கள். ரூதர்ஃபோர்டு என்னும் பெயருக்கு ஒரு மாற்று தரலாம். தமிழில் இவருடைய் பெயரை எர்ணசுட்டு இரதர்ஃபோர்டு என்று எழுதலே சிறந்தது. எப்படி 'எர்ணஸ்ட்' என்பது சரியான ஒலிப்பு இல்லையோ அதே போலவே பிறவும். முறைசார்ந்து அறிவார்ந்த ஒழுக்கத்துடன் எழுதுதல் வேண்டும். --செல்வா (பேச்சு) 18:23, 4 சூன் 2013 (UTC)[பதிலளி]

  • மேலே சொன்னதற்கான சான்று: (1) ruth·er·ford noun \ˈrəth-ə(r)-fərd, ˈrəth-\ மெரியம் வெபுசிட்டர் ஆங்கில அகரமுதலி.
  • (2)பிரித்தானிய ஒலிப்பு (ஆக்ஃசுபோர்டு அகராதி): பார்க்கவும்: /ˈrʌðəfəd/ (இங்கே ʌ என்பது run என்பதில் வருவது போன்ற குறுகிய அகரம் என்று அவர்கள் குறித்திருக்கின்றார்கள். இங்கே பார்க்கலாம். பிரித்தானியர் ஆர் (r) ஒலி இல்லாமல் ஒலிக்கின்றார்கள். அதாவது ரகரம் ஒலிக்காதவரகள். இதனை non-rhotic என்பார்கள். ரகரத்தை ஒலிப்பதை rhotic ஒலிப்பு என்பார்கள.
  • எனவே "ரூதர்போர்டு" அன்று. ஒலிப்புத்துல்லியத்துக்காகச் சொல்லவில்லை. நாம் இந்திய ஒலிப்பில் ரூதர்போர்டு என்றும் சொல்லலாம் ஆனால் அது இந்திய ஒலிப்பா தமிழ்நாட்டு ஒலிப்பா தெரியாது. தமிழ்முறைப்படி இரதர்போர்டு என்றோ இரதர்ஃபோர்டு என்றோ எழுதுவதில் பிழை இல்லை. இதுவே சரியான முறை. "ரூ"தான் வேண்டும் என்றால் உரூதர்போர்டு அல்லது உரூதர்ஃபோர்டு என்று எழுதலாம். ஆங்கிலத்தில், மொழியியலில் இதனை "prosthetic vowel" (துணை உயிரொலி) என்கிறார்கள். இதில் அறிவார்ந்த நுண்ணுர்வு உள்ளது; தமிழில் மட்டும் இப்படியும் இல்லை. பிறமொழிகளிலும் உண்டு. இங்கே பார்க்கவும்.
  • --செல்வா (பேச்சு) 22:38, 4 சூன் 2013 (UTC)[பதிலளி]

McGill என்பதன் ஒலிப்பு \mə-ˈgil\ . இப்படியான சொற்களை மெக்கில் மெக்டொனால்டு(McDonald), மெக்மாசிட்டர் (McMaster) என்று மெக் எனத் தொடங்கி எழுத வேண்டுமா அல்லது மக் என்று தொடங்கி எழுத வேண்டுமா என்பதிலும் சீர்மை கடைபிடிப்பது நல்லது. அதன் ஒலிப்பு அகரத்துக்கும் எகரத்துக்கும் இடைபப்ட்ட ஓர் ஒலிப்பு. ஆனால் சற்று குன்றிய உயிரொலிப்புதான். எப்படி எழுதினாலும் திரிபு சிறிது வரத்தான் செய்யும், அதனைப் பொருட்படுத்த வேண்டியதில்லை (எந்த மொழியும் பொருபடுத்தவே இயலாது- அனைத்துலக ஒலியன் குறியில் எழுதினாலும்!!). எனவே தமிழில் வழங்குபொழுது ஒரு சீர்மை பேணி வழங்குதல் நல்லது. இவற்றைப் பொதுவான ஒரு பக்கத்தில் பேச வேண்டும் என்றாலும், இப்படியான சூழல் வரும் இடத்தில் முதலில் பேசி பிறகு அங்கு நகர்த்திக்கொள்ளலாம். --செல்வா (பேச்சு) 13:36, 5 சூன் 2013 (UTC)[பதிலளி]