பேச்சு:எம்.டி.வி
Jump to navigation
Jump to search
எம் தொலைக்காட்சி அல்லது இங்கு உள்ளது போல ஒன் தொலைக்காட்சி என மாற்றவும்.ஸ்ரீ (✉) 15:06, 16 ஏப்ரல் 2020 (UTC)
- வன் என்பதும் ஆங்கிலச் சொல் தானே? வணிகப் பெயர்கள் தமிழ் மொழியில் இல்லாதபோது அதன் தாய் மொழியில் / ஆங்கில மொழியில் பயன்படுத்துவது வழமை. --AntanO (பேச்சு) 01:57, 18 ஏப்ரல் 2020 (UTC)
- நிறுவனப் பெயர்களை தலைப்பாக வைப்பதில் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. இங்கு உள்ள கட்டுரைகளில் அலைவரிசை அல்லது தொலைக்காட்சி என்று தான் உள்ளது. எனது சந்தேகம் நிறுவனப் பெயர்களை முழுவதும் மாற்றுவதா அல்லது பகுதி மாற்றுவதா? உதாரணத்திற்கு சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் என்பதனை சாம்சங் மின்னணுவியல் அல்லது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் எனப் பெயரிடலாமா?. ஸ்ரீ (✉) 02:22, 18 ஏப்ரல் 2020 (UTC)
- பல உதாரணங்கள் அவ்வாறு உள்ளன. எ.கா: Indian Railways என்பது இந்திய இரயில்வே (தமிழ் + ஆங்கிலம்) என்றுள்ளது. வணிகப் பெயரை முன்னிலைப்படுத்துவதாயின் இன்டியன் இரயில்வே என்றிருக்க வேண்டும். தமிழ்ப்படுத்துவதாயின் இந்திய தொடருந்து சேவை / இந்திய தொடரூந்து சேவை / இந்திய புகையிரத சேவை எனலாம். Sri Lanka Railways என்பது அலுவலக ரீதியாக இலங்கை புகையிரத சேவை என்றழைக்கப்படுகிறது. ஆனால் "புகையிரத சேவை" என்பதா அல்லது "தொடருந்து போக்குவரத்து" / தொடர்வண்டிப் போக்குவரத்து / இருப்புப்பாதைப் போக்குவரத்து என்றழைப்பதா என்பதில் கருத்தியல் சிக்கல் உள்ளது. ஆகவே த.வி. இது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் அல்லது தலைப்புக்களில் "தலைப்பை மாற்று" வார்ப்புருவை சேர்த்துக் கொண்டு இருக்க வேண்டும். --AntanO (பேச்சு) 03:07, 18 ஏப்ரல் 2020 (UTC)