பேச்சு:எம்விசிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்றாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு கட்டுரை. புறமொழிச்சொற்களை மெய்யெழுத்தில் தொடங்கி எழுதாமலும், எழுத்துப்பெயர்ப்பில், ஒலிப்பை ஒட்டிச் செய்தலும் இருந்தால் நன்றாக இருக்கும். protease என்பதை புரோட்டியேசு என்று ட் சேர்த்து எழுதுவது முக்கியம்.. ப்ரோடீஸ் என்று எழுதுதலைத் தவிர்க்க வேண்டும். டீ என்னும் எழுத்துக்கு முன் ட் இல்லை என்றால் அது D என்பதுபோல தமிழில் ஒலிக்கும். ஆங்கிலத்தில் open என்னும் சொல்லும் happen என்னும் சொல்லும் பிற்பகுதியில் ஒரே மாதிரிதான் ஒலிக்கும். இரண்டு p வந்துள்ளதே, ஒரு p வந்துள்ளதே என எண்ணுவது ஆங்கிலத்தின் ஒலிப்பொழுக்கம் குன்றிய தன்மையை உணராததால் ஏற்படுவது. ஊடங்கங்கள் மிகவும் பிழையாக ஓபன் என்று எழுதுகின்றனர் (இதன் ஒலிப்பு Oban). புறப்பெயர் உள்வாங்கல் மரபுப்படி (exonym), பெறும்மொழி தன் இயல்பின் படி சொற்களை ஏற்றுக்கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையை மொழிபெயர்த்தவருக்கு பாராட்டுகள்.--செல்வா 13:33, 12 ஜூலை 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எம்விசிமா&oldid=556365" இருந்து மீள்விக்கப்பட்டது