பேச்சு:எபிரேயத் தமிழியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பா, அம்மா போன்ற சில சொற்கள் உலகின் பல மொழிகளுக்கு ஒரே மாதிரி அமைவதுண்டு. பல இலட்சங்கள் சொற்கள் உள்ள மொழிகளுக்கு இடையே தற்செயலாக இரு சொற்கள் ஒரே மாதிரி அமைய வாய்ப்புக்கள் உண்டு. அதனைக் கொண்டு இரு மொழிகளுக்கும் உறவு உண்டு என்பது போல நிறுவுவது பொருத்தம் இல்லை. குறிப்பாக எபிரேய மொழிக்கும் தமிழுக்கு எந்தத் தொடர்பு இருப்பதாகவும் தரமான ஆய்வாதரங்கள் இல்லை என்றே கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 13:12, 23 சூன் 2015 (UTC)[பதிலளி]

//அப்பா, அம்மா போன்ற சில சொற்கள் உலகின் பல மொழிகளுக்கு ஒரே மாதிரி அமைவதுண்டு.// ஆதாரத்துடன் தெரிவிக்கவும். இங்கு எதையும் நிறுவ முற்படவில்லை. இங்கு தரப்பட்டடுள்ள ஆதாரங்கள் போதாதா அலல்து ஏற்றுக்கொள்ளப்படாதவையா? தேவநேயப் பாவாணர் எழுதிய தமிழ் வரலாறு மேலும் பல தகவல்களுடன் காணப்படுகிறது. பர்மியத் தமிழியல், சீனத் தமிழியல் போன்று இங்கு காணப்படும் நுண் கட்டுரைகளைவிட இக்கட்டுரை விபரித்தும் தக்க ஆதாரங்களுடனும் எழுதப்பட்டிருக்கிறது. --AntanO 17:13, 23 சூன் 2015 (UTC)[பதிலளி]
கட்டுரையின் நீளத்தைப் பற்றி இங்கு கருத்துக் கூறவில்லை. அம்மா, அப்பா என்ற சொற்கள் ஒரே மாதிரி இருக்கின்றன, பல இலட்சம் சொற்களில் சில பத்துச் சொற்கள் ஒரே உச்சரிப்பு போன்று இருக்கலாம் போன்றவை எல்லாம் மொழிகளுக்கான தொடர்பை நிறுவ போதிய ஆதரம் இல்லை. பார்க்க: en:Mama and papa. மேலும் தேவநேயப் பாவாணரை ஒரு அறிவியல் நோக்கிலான, அல்லது புறவய மொழியிலாளராகக் கருத முடியாது.--Natkeeran (பேச்சு) 17:21, 23 சூன் 2015 (UTC)[பதிலளி]