பேச்சு:என்டர் த டிராகன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் என்டர் த டிராகன் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

enter கேட்க. ஆர் முழுமையாக அமுக்கப்படாமல் மென்மையாகப் படிக்கப்படுகிறது. அத்துடன் IPA உச்சரிப்பையும் பாருங்கள். r காணப்படுகிறது. தமிழில் என்டர் என எழுதுவதே ஓரளவுக்கு சிறந்தது.--Kanags \உரையாடுக 08:00, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நீங்கள் சுட்டியது அமெரிக்க ஆங்கிலப் பலுக்கல். Carbonஐக் கார்பன் என்பது அமெரிக்க ஆங்கிலப் பலுக்கல், காபன் என்பது பிரித்தானிய ஆங்கிலப் பலுக்கல். இலங்கையில் பெரும்பாலும் பிரித்தானிய ஆங்கிலப் பலுக்கலே பயன்படுத்தப்படுகின்றது. Enter தொடர்பிலும் மேற்கூறிய நிலையே. இரு பலுக்கல்களையும் ஒட்சுபோடு அகரமுதலியில் காணலாம். ஆயினும் ஒரு சொல் rஇல் முடியும்போது மட்டும் ரகர மெய்யைக் குறிப்பிடுவது வழக்கம், இலங்கையில் பிரித்தானிய ஆங்கில முறைப்படி Carbon-காபன், Dark-டாக் என எழுதினாலும் meterஐ மீற்ற என எழுதுவதில்லை. meter மீற்றர் என்றே எழுதப்படுகின்றது. இங்கு என்டர் (இலக்கண முறைப்படி எண்டர்) என எழுதுவது சரியாகத் தோன்றுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 09:09, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நீங்கள் வேறு கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். அதுவும் சரிதான். எப்படி இலக்கண முறைப்படி எண்டர் என வருகிறது?--Kanags \உரையாடுக 09:30, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் என்னும் பதினோரு (ஞ், ண், த், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளும் குற்றியல் உகரமும் சொல்லின் கடைசியில் வரும் எழுத்துகள். சொல்லின் இறுதியில் வரா என நினைக்கிறேன். --AntanO 09:50, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
@AntanO: இல்லை, எல்லா உயிரெழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரலாம். ஆகவே, ட இறுதியில் வருவதில் தவறில்லை. ஆனால், இறுதியில் வரும் r ஒலிக்கப்படாவிடினும் இலங்கைத் தமிழிலும் சரி, தமிழகத் தமிழிலும் சரி, ர் எழுத்தால் காட்டுவது வழமை. @Kanags: மெய்ம்மயக்கத்தைக் கருத்திற் கொண்டு கூறினேன். வலியுறுத்தவில்லை. ஒக்சிசன்-ஒட்சிசன், பெட்ரோல்-பெற்றோல், நைட்ரசன்-நைதரசன் தொடர்பில் ஏற்கெனவே கூறியுள்ளேன். பார்க்க: மெய்ம் மயக்கம் --மதனாகரன் (பேச்சு) 10:27, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இலங்கையில் ntஇற்கு ஈடாக, ந்த் என்று (Venturi-வெந்தூரி) பயன்படுத்துவதுமுண்டு. --மதனாகரன் (பேச்சு) 10:33, 15 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:என்டர்_த_டிராகன்&oldid=1897075" இலிருந்து மீள்விக்கப்பட்டது