பேச்சு:எண்ணுறுமையும் எண்ணுறாமையும்
கணிதத்தில் ஈர்ப்பு உள்ளவர்களுக்கும், விக்கிபீடியாவின் வல்லுனர்களுக்கும்:
இது நான் விக்கிபீடியாவில் கணிதத்துறையில் எழுதும் முதல் கட்டுரை. 1947 முதல் கணிதமே உயிராக இருக்கும் எனக்கு நம் தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் கணிதத்துறையைப்பற்றி எழுத்தறிவுள்ளவர்களாக (literate) வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக உண்டு. அதற்காக கணித ஆய்வாளர்களெல்லாம் expository முறையில் செயல்படுவதற்கு சோம்பக்கூடாது என்று நான் மேடைகளிலும், மகாநாடுகளிலும் கரடியாகக் கத்தியிருக்கிறேன். என்னால் முடிந்த சிறு அளவில் நானும் பலவிதங்களில் செயல்படவும் செய்திருக்கிறேன். இப்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் அதற்காகவே எழுத முற்பட்டிருக்கிறேன்.
நேயர்கள் எனக்கு உதவி புரிய வேண்டும்.
இப்பொழுது இந்தக்கட்டுரையில் கீழ்க்கண்ட உதவி தேவை.
1. விகிதமுறு எண்களை வரிசைப்படுத்த கேண்டரின் முறைக்காக நான் போட்டிருக்கும் படிமம் எனக்கே திருப்தி இல்லை. அதை பலப்படுத்துவது எப்படி?
2. When should I give English equivalents?
3. Is there a plan for including scientific (mathematical) articles in a certain ordered routine? Who is taking care of this?
4. I want to write a large number of articles over the entire spectrum of Mathematics - in Tamil. Can friends write to me, in my talk page, what they would like to see first?
நன்றி.
--Profvk 00:16, 13 ஏப்ரல் 2007 (UTC)
(1)மிக நல்ல முயற்சி. முழுவதும் படித்த பின் கருத்துக்கள் தெரிவிக்கின்றேன். முன்னர் சுந்தர் என்னும் பயனர் கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை என்று ஒரு கட்டுரை வரைந்து இருந்தார். அதனையும் நீங்கள் பார்க்க வேண்டும். (2) நீங்கள் எப்பொழுதெல்லாம் ஆங்கிலத்தில் ஈடான சொற்கள் தரவேண்டும் என எண்ணுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் தரலாம். (3) கணிதக் கருத்துக்களை எந்த முறையில் வளர்க்க வேண்டும் என்று விதிமுறை ஏதும் இல்லை, ஆனால் அடிப்படைகளை முதலில் எழுதி பின்னர் வளர்ந்த கருத்துக்களை எழுதலாம். என்றாலும் சில நேரங்களில் சற்று ஆழமான கருத்துக்களை எழுதிப் பின்னர் அதற்குத்தேவையான துணைக் கருத்துக்களையும் எழுதலாம். (4) அருள்கூர்ந்து எழுதுங்கள், உங்கள் கட்டுரைகளை ஆர்வமுடன் எதிர்பார்த்து தமிழ் மக்கள் எல்லோரும் வரவேற்பர். கடந்த சில நாட்களாக என்னால் பங்கு கொள்ள இயலவில்லை. பொதுவாக கணிதத்தில் இங்கு பலரும் ஆர்வம் உடையவர்கள். பயனர்கள் மயூரநாதன் கணிதத்தில் நிறைய நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார், பயனர் சுந்தர் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார்., நானும் சில கருத்துக்கள் பற்றி எழுதியுள்ளேன். அண்மையில் தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண் என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதுபற்றி ஆங்கில விக்கியில் கூட ஒரு கட்டுரை இல்லை. பயனர் நற்கீரன், பயனர் கனக்ஸ், பயனர் ரவி, பயனர் சிவகுமார், பயனர் மயூரன், பயனர் கோபி, பயனர் உமாபதி, பயனர் கலாநிதி என்று ஏறத்தாழ எல்லாப் பயனர்களுமே கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்கள். --செல்வா 02:52, 13 ஏப்ரல் 2007 (UTC)
- நீங்கள் தமிழ் விக்கியில் கணிதத்துறையில் கட்டுரைகள் எழுத முன்வந்தது குறித்து மகிழ்ச்சி. இந்தத் துறையில் இங்கே நிறையச் செய்வதற்கு உள்ளன. கட்டுரைகளை உள்ளிடுவதற்கு ஒழுங்கு முறைகள் எதுவும் இல்லை. நீங்கள் எந்த ஒழுங்கிலும் எழுதுங்கள். பின்னர் அவற்றைத் தேவைக்கேற்றபடி ஒழுங்கு படுத்திக்கொள்ளலாம். உங்கள் முயற்சி, இங்கு கணிதத்துறைக் கட்டுரைகளில் நல்ல ஆழத்தை உருவாக்க வழிவகுக்கும் என நம்புகிறேன். நன்றி. Mayooranathan 04:06, 13 ஏப்ரல் 2007 (UTC)
Start a discussion about எண்ணுறுமையும் எண்ணுறாமையும்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve எண்ணுறுமையும் எண்ணுறாமையும்.