பேச்சு:எண்ணக்கரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எண்ணக்கரு அல்லது கரு என்பது மனித சிந்தனையில் ஒன்றைப் பற்றி எழும் கூற்று அல்லது படிமம் எனலாம். கரு என்றால் என்ன என்று உறுதியாக வரையறை செய்வது கடினம். வெவ்வேறு மெய்யியலாளர்கள் வேறுபட்ட வரையறைகளைத் தந்துள்ளார்கள். −முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கரு[தொகு]

கரு என்பது தமிழில், நடுவானது, பெரியது, ஒன்றின் இயக்கத்துக்கு, ஒன்று உருவாவதற்கு அடிப்படையானது என்னும் பொருள் கொண்டது. பின்னர் மேலும் இது பற்றி எழுதுகிறேன். தமிழில் கருத்து என்பதை comment என்னும் சொல்லுக்கு இணையாக பல இடங்களில் பயன்படுத்தினாலும், தமிழில் அது குறிக்கும் பொருள் "substantial, critical thought/comment" ஏதோ ஒன்றைச் சொல்வது அல்ல. மறுமொழி என்பது reply என்பது, எனவே, அது பொதுவானது. எண்ணம் என்பது மிக ஆழமான சொல். thought என்பது ஒரு நிலையில்தான் பொருந்தும். எண்ணம் என்பதன் பொருள், வடித்தெடுத்த எளிமை மிளிரும் கருத்து என்பது. எண் என்றால் எளிமை. எள் (சிறியது, எளிமையானது) --> எண். எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்னும் வள்ளுவரின் சொல்லாட்சியை உற்றறிந்தால் அவர் சொல்வது தெளிவாகும். எண்ணியதை எண்ணியவாறே (எண்ணிய சீர்மை, சிறப்பு, வீச்சு அனைத்துடன்) அடைவர் என்பது பொருள் எனினும், எளிமையாக எண்ணத்தளவிலே செய்வோம், அடைவோம் என்று எண்ணியதை அடைவர் என்பது நுட்பப்பொருள். ஏனெனில், அடுத்த வரியில், எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின் என்கிறார். அங்குதான் நுட்பம் இருக்கின்றது. எளிமையாக அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் ஆவேன் என்று எண்ணியவர், உறுதியாக, உள்ளுறுதியுடன் உருப்பெற்று எழுந்தால், எண்ணியவாறே எய்த இயலும் என்கிறார். இது ஒரு இருவரிக் கவிதை, செய்யுள், எழுசீர்ச் செய்யுள். ஏழு சீர்களுடன் (சீர்மை எழுகின்ற, எழுச்சி தரும் சீர்மை) உள்ள செய்யுள், குறள் வெண்பா.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.      -  திருவள்ளுவர்

தமிழில் எண்ணர் என்னும் சொல்லின் பொருள் mathematician என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எண்ணினேன் என்றால் தெளிவாக சிந்தித்தேன் என்று பொருள். "சும்மா" நினைத்தேன் என்று பொருள் அல்ல. --செல்வா 17:22, 12 டிசம்பர் 2008 (UTC)

செல்வா, எனது வரையறை ஒரு தொடக்க புள்ளிதான். நிச்சியம் நீங்கள் சரிசெய்து, உங்கள் கருத்துக்களை சேருங்கள். நன்றி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எண்ணக்கரு&oldid=317496" இருந்து மீள்விக்கப்பட்டது