பேச்சு:ஊழியர் வருங்கால வைப்பு நிதி, இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதாந்த இலங்கை வழக்கா? மாதாந்திர என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 08:47, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]

இலங்கையில் பொதுவாக மாதாந்த, வாராந்த, நாளாந்த முதலியன பயன்படுத்தப்படுகின்றன. மாதம்+ அந்தம் என விரியும். மாதாந்திர எனவும் பயன்படுத்துவர்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:58, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]

பொதுவாக இலங்கையில் மாதாந்த, வாராந்த என்றுதான் பயன்படுத்துவார்கள். நான் வாசிக்கும் போது மாதாந்திர என்று இருந்தது. அது நான்தான் தவறாக மாதாந்திர என எழுதிவிட்டேன் என்று நினைத்து, மாற்றினேன். மன்னிக்கவும். மாதாந்திர என்பது சரியாக இருந்தால் தயவுசெய்து மாற்றி விடுங்கள்.--dj fa (பேச்சு) 09:12, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி சஞ்சீவி சிவகுமார்.. மாதாந்த என்பது இலங்கை வழக்கு என தெரியாது Fasly, அதனாலேயே மாற்றினேன். இலங்கை வழக்கில் உள்ள சொல் எனில் மாற்றத் தேவையில்லை :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:21, 15 சூன் 2012 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள 12%, 8% போன்ற தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது? இது இலங்கைத் தரவுகள் என்றால் கட்டுரைத் தலைப்பை ஊழியர் சேமலாப நிதி (இலங்கை) என மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 12:17, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஊழியர் சேமலாப நிதி (இலங்கை) என்பதே சரி. ஏனென்றால் மலேசியாவிலும் ஊழியர் சேமலாப நிதி எனும் பதம் பாவனையிலுள்ளது. en:Employees Provident Fund (Malaysia)--Anton (பேச்சு) 09:06, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

தகவலுக்காக[தொகு]

ஊழியர் சேமலாப நிதி --Anton (பேச்சு) 09:01, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

இணைப்பு[தொகு]

இக்கட்டுரையுடன் ஆங்கில விக்கிக்குen:Employees' Provident Fund Organisation of India என்ற கட்டுரை இணைக்கப்பட வேண்டும் ஆனால் இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 என்ற கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி இக்கட்டுரைக்கு இணைப்பு தரப்பட வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:45, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

அக்கட்டுரைக்கு இணைப்பு கொடுத்தது சரி என்று எண்ணுகிறேன். இக்கட்டுரையில் உள்ள தகுந்த தகவல்களை அக்கட்டுரையில் இணைக்க வேண்டும்.--குறும்பன் (பேச்சு) 18:31, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

ஊழியர் சேமலாப நிதி (இந்தியா) என மாற்றலாமா? ஏனென்றால், ஊழியர் சேமலாப நிதி இலங்கையிலும் மலேசியாவிலும் காணப்படுகின்றது. --Anton (பேச்சு) 16:41, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

தமிழகத்தில் ஊழியர் சேமலாப நிதி என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை அதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்றே அழைக்கின்றனர். --குறும்பன் (பேச்சு) 17:03, 10 சூலை 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறென்றால் இந்தக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் மாற்றப்பட வேண்டும். காரணம் இது இந்தியா சார்பானதாகவே இருக்கின்றது.--Fasly (பேச்சு) 04:04, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]