பேச்சு:உவர் நீர் முதலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்மூக்கு முதலை என்ற பெயர் எங்கிருந்து பெறப்பட்டது? தக்க சான்று இருந்தால் யாரேனும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 15:07, 28 பெப்ரவரி 2019 (UTC)

ஒரு புத்தகத்தில் பார்த்துப் பெறப்பட்டதுதான். நெடுங்காலமாகி விட்டதால் எப்புத்தகம் என்பது இப்போது மறந்து விட்டது.--பாஹிம் (பேச்சு) 15:53, 28 பெப்ரவரி 2019 (UTC)

தக்க சான்று இருந்தால் அளிக்கவும். தாங்கள் பார்த்த, கேள்விப்பட்ட அல்லது தங்கள் பகுதியில் வழக்கத்தில் உள்ள பெயர்களை எல்லாம் விக்கிப்பீடியாவில் இடுவது தவறு. தவிர செம்மூக்கு முதலை என்பது முற்றிலும் பொருளற்ற தலைப்பாகும். அவை ஒன்றும் செந்நிற மூக்குடன் இருக்காது.Varunkumar19 (பேச்சு) 07:04, 1 மார்ச் 2019 (UTC)
செம்மூக்கு என்றால் செந்நிற மூக்கு என்று நீங்கள் கற்பனை செய்து கொண்டால் அதற்கு மற்றவர்களுக்குக் குறை கூற முடியாது. செம்மையான மூக்கு என்ற பொருளில் கூறப்பட்டிருக்கலாம்.--பாஹிம் (பேச்சு) 10:15, 11 மார்ச் 2019 (UTC)
செம்மூக்கன் என்பது ஒரு எலி வகையையும் குறிக்கும். [1]

பெயர்[தொகு]

உவர்நீர் முதலை / உப்பு நீர் முதலை --A-wiki-guest-user (பேச்சு) 10:04, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

நான் ஏற்கனவே உவர்நீர் முதலை என்று தலைப்பிட்டிருந்தது தான். பின்னர் நானே தலைப்பை மாற்றினேன். செம்மூக்கு முதலை என்ற பெயர் இங்கிருந்து பெறப்பட்டது.--பாஹிம் (பேச்சு) 10:10, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

உவர்நீர் முதலை --A-wiki-guest-user (பேச்சு) 10:14, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

நீங்கள் எதற்காக விக்சனரிப் பக்கத்தைத் திரும்பத் திரும்பக் காட்டுகிறீர்கள் என்பது தெளிவில்லை. விக்சனரியிலும் நாங்கள் சேர்க்கும் பெயரே உள்ளது. அதற்காக அது தான் முடிந்த முடிவு என்று எதுவும் கிடையாது. மீண்டும் மீண்டும் அதைச் சுட்டிக் காட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.--பாஹிம் (பேச்சு) 10:19, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

முதலைகளில் நன்னீர் முதலைகள், உப்பு நீர் முதலைகள் என இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உவர்நீர் முதலை என்பது விக்சனரியா?--A-wiki-guest-user (பேச்சு) 10:22, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

@Kanags and Nan: இதனைச் சற்றுக் கவனிக்க முடியுமா? உப்பு நீர் முதலை அல்லது உவர்நீர் முதலை என்றால் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும். --A-wiki-guest-user (பேச்சு) 10:25, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

உவர்நீர் முதலை என்ற பெயர்ப் பொருத்தமாக உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 10:33, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

நீங்கள் மேலே வழங்கியுள்ள "முதலைகளில் நன்னீர் முதலைகள், உப்பு நீர் முதலைகள் என இரு பெரும் பிரிவுகள் உள்ளன" எனும் செய்தி முற்றிலும் தவறானது. Saltwater crocodile என்பது வெறுமனே ஒரு முதலைச் சாதி அல்லது இந்திய வழக்கப்படி இனம் (Crocodylus porosus) ஆகும். அது ஒரு பெரும் பிரிவல்ல. அது பொய். அத்தகைய பொய்த் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வாதிடக் கூடாது. ஏனைய எல்லா முதலையினங்களும் அதே போன்ற வெவ்வேறு சாதிகளே.--பாஹிம் (பேச்சு) 14:47, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

விலங்கியலாளர்கள் முதலைகளை நன்னீர் முதலை, உப்புநீர் முதலை என பிரிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் இவற்றை நான்கு பெரும் பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் Crocodylidae எனும் குடும்பத்தினைச் சார்ந்தவை உண்மையான முதலைகள் எனப்படுகின்றன. இவை நன்னீரிலும் (freshwater)(Crocodylus novaeguineae), உவர்ப்புத் தன்மையுடைய நீர் நிலைகளான உப்பங்கழிப் பகுதியில் கடற்கரை ஓரம் (Crocodylus porosus) வாழ்பவைகளாகவும் உள்ளன. நன்னீரில் வாழும் முதலைகள் சூழல் காரணமாக உப்பு தண்ணீரில் வாழ நேர்ந்தால் அதற்கும் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் நிலையிலுள்ளன. --சத்திரத்தான் (பேச்சு) 16:08, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

இல்லையே. இப்போதும் நீங்கள் சொல்வதை மெய்ப்பிக்கத் தக்க சான்றில்லை. மொத்தமாகப் பதினெட்டு இனங்களே முதலையினங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் பதினான்கு இனங்கள் Crocodylus சாதியைச் சேர்ந்தவை, இரண்டு இனங்கள் Osteolaemus சாதியைச் சேர்ந்தவை, இரண்டு இனங்கள் Mecistops சாதியைச் சேர்ந்தவை. இங்கே கட்டுரையில் குறிப்பிடப்படும் இனம் Crocodylus சாதியைச் சேர்ந்த பதினான்கு இனங்களில் ஓரினம் மட்டுமே. நீங்கள் சொல்வது போல நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுவதற்கோ மற்றச் செய்திகளுக்கோ ஏற்கத் தக்க விஞ்ஞானச் சான்றெதுவும் கிடையவே கிடையாது. இவ்வாறிருக்கையில், உவர்நீர் முதலை என்று ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கே கட்டுரையில் குறிப்பிடப்படும் இனத்தை அழைப்பது ஆங்கிலத்தின் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்புக்குச் சரியாகத் தோன்றினாலும், காலங்காலமாக இவ்வினம் அழைக்கப்படும் வழக்கம் வேறு விதமாக இருக்கும் நிலையில் அவ்வாறு காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் அச்சொல்லையோ சொற்களையோ பயன்படுத்துவதே சரியான மொழிபெயர்ப்பும் தமிழ் முறையும் ஆகும். எடுத்துக் காட்டாக, rainforest என்பதை மழைக்காடு என்று இக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அதன் சரியான தமிழ் வடிவம் பொழில் என்பதே. அங்ஙனமே waterfall என்பதை நீர்வீழ்ச்சி என்று இக்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அதன் சரியான தமிழ் வடிவம் அருவி என்பதே. இங்ஙனமே, உயிரினங்களின் பெயர்களும் முடிந்தவரை தமிழில் முற்காலத்திலிருந்து எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அவ்வாறே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே சரியானது. இங்கே முறைப்படி தமிழில் முற்காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் முறையை மட்டுமே கருத்திற் கொள்ள வேண்டுமே தவிர, எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்பதையல்ல. ஆங்கிலவழித் தமிழாக்கம் என்பது தமிழ் முறைக்குப் பிழையானது என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 18:26, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உவர்_நீர்_முதலை&oldid=3401886" இலிருந்து மீள்விக்கப்பட்டது