பேச்சு:உள்நோக்கம்
கட்டுரையின் பல பகுதிகளில் உதாரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை சொந்த ஆய்வுக் கருத்துக்கள் போல், ஆதாரங்கள் இன்றி உள்ளன. முன்னுரையில் இருந்த பகுதியை கீழே காணலாம். மேலும். சொல்லுக்குச் சொல் ஆங்கிலச் சொற்கள் தேவையில்லை. தமிழ்-ஆங்கில அகராதி போன்று எழுத வேண்டாம்.--AntonTalk 03:54, 17 மார்ச் 2015 (UTC)
முன்னுரை
[தொகு]''நான் ஒரு மிதி வண்டி வாங்கலாம் என எண்ணியுள்ளேன் என்று ஒருவர் கூறும் பொழுது அவருக்கு மிதி வண்டி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றி இருக்கின்றது என்று சொல்லலாம். அதாவது, மிதி வண்டி வாங்க வேண்டும் என்ற நோக்கம் மனதுக்குள் இருக்குமெனச் சொல்லலாம். (அந்த நோக்கம் மனதுக்குள் வலிமையாக இருப்பதால் (strongly present ) இந்தக் கட்டுரையில் அது உள்நோக்கம் என்று அழைக்கப் படுகின்றது.) எனவே, நான் ஒரு மிதி வண்டி வாங்கலாம் என எண்ணியுள்ளேன் என்று ஒருவர் சொல்லும் போது, அவருக்கு மிதி வண்டி வாங்கலாம் என்ற உள்நோக்கம் அவர் மனத்தில் இப்போதைக்கு வலிமையாக ஊன்றி உள்ளது என்று சொல்லலாம்.
I intend to buy a bicycle என்று ஒருவர் காலை 6:00 மணிக்குச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சொன்ன உடனேயே, அவருக்கு மிதிவண்டி வாங்க வேண்டும் என்ற உள்நோக்கம் காலை 6:00 மணிக்கு அவர் மனத்தில் பதிந்து இருக்கும் என நம்மால் ஊகிக்க (infer) முடியும். உள்நோக்கம் மனத்தில் வந்த உடனேயே அவர் மிதி வாங்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடு படுவார் என எதிர் பார்க்கலாம். அதாவது, பணம் புரட்டுவது, கடைக்குச் சொல்வது, மிதி வண்டியின் விலையைப் பற்றி உசாவித்(enquire) தெரிந்து கொள்வது, என பலவாறான செயல்களில் அவர் ஈடு படுவார். (மிதிவண்டி வாங்கும் வரை, வாங்க வேண்டும் என்ற அந்த உள்நோக்கத்தைக் கைவிட மாட்டார்.) இறுதியாக, மாலை 6 மணிக்கு, மிதிவண்டி ஒன்று வாங்கவும் செய்யலாம். மிதிவண்டி வாங்கிய பிறகு, வாங்க வேண்டும் என்ற எண்ணம் (உள்நோக்கம்) அவர் மனதில் இருந்து மறையும். அதாவது, மாலை 6:00 மணிக்கு மிதி வண்டி வாங்கிய உடனேயே அவர் உள்நோக்கம் மறைந்து விடுகின்றது. அதாவது, அவர் உள்நோக்கமானது, அவர் மனதில், காலை 6:00 மணிக்குத் தொடங்கி மாலை 6:00 மணிவரை இருந்து, பின் மறைந்துள்ளது. உள்நோக்கம் என்று மனதில் தோன்றிய உடனேயே மனம் பலவற்றைப் பற்றி எண்ண தொடங்கிவிடுகின்றது. மனதில் உள்நோக்கம் இருக்கும் வரை அந்த எண்ணங்களை மனம் அசை போட்டுக் கொண்டே இருக்கும். உள்நோக்கம் திடுமென மறையுமாயின், அது தொடர்பான எண்ணங்களும் உடனேயே பொருளற்றுப் போகும்.
இனி, மிதி வண்டி வாங்க வேண்டும் என்ற உள்நோக்கம் வருவதாலேயே, ஒருவர் மிதிவண்டி கட்டாயம் வங்கி விடுவார் என்று சொல்ல முடியாது. காலை 6:00 மணிக்கு அந்த உள்நோக்கம் மனதில் தோன்றலாம்; பின், பகல் 12:00 மணிக்கு, பணம் கிடைக்காது என்று தெரிந்த உடனேயே, மனதில் இருந்து மறைந்தும் போகலாம். ஆனால், உள்நோக்கம் வந்த பிறகு, அது தொடர்பான மற்ற எண்ணங்கள் மனதில் தோன்றும், தோன்ற வேண்டும்; அதற்கு வேண்டிய செயல்களும் நடை பெற வேண்டும். எனவே, உள்நோக்கம் தோன்றிய பிறகு, ஒருவர் வாளா இருத்தல் சரியாகாது (வாளா - ஒன்றும் செய்யாமல் இருத்தல்); ஒன்றுமே செய்யாமல் கடைசி வரை வாளா இருந்தால், உள்நோக்கம் என்ற சொல்லுக்கே பொருளில்லாமல் போகும். மிதி வண்டி வாங்க வேண்டும் என்றால் அதற்கான செயல்களைக் கட்டாயம் செய்து தான் ஆக வேண்டும்; அதாவது, அதற்கான செயல்களை நான் கட்டாயம் செய்வேன் என்று அவர் தன்னை ஒப்புவித்துக் கொள்ள வேண்டும் (ஒப்புவி - commit). ஆக, உள்நோக்கம் என்று ஒன்று ஒருவர் மனதில் தோன்றிய உடனேயே, அவர் அது தொடர்பான செயல்களைச் செய்வேன் எனத் தன்னைக் கட்டாயம் ஒப்புவித்துக் கொள்ள வேண்டும். இந்தச் செயல்கள் உடனே நடக்கலாம்; அல்லது, கொஞ்சம் நேரம் கழித்தும் நடக்கலாம். ஆனால், எது நடந்தாலும் அது உள்நோக்கத்துக்குப் புறம்பாக நடத்தல் கூடாது. இன்று மாலை 6:00 மணிக்குள் மிதிவண்டி வாங்க வேண்டும் என்ற உள்நோக்கம் உள்ள ஒருவர் ஒரு மாத காலம் நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்கிறேன் என்று தன் கப்பலை எடுத்துக் கொண்டு உடனேயே சென்றுவிடக் கூடாது; அவ்வாறு அவர் செய்வாராயின், அன்று மாலை 6:00 மணிக்குள் மிதிவண்டி வாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துக்குப் புறம்பாகப் போய்விடும். அப்படி அவர் ஒரு மாத காலம் நடுக்கடலில் மீன் பிடிக்க உடனே செல்லத்தான் செய்வேன் என்று அடம் பிடித்தால், இன்று மாலை 6:00 மணிக்குள் மிதிவண்டி வாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்தை மனதில் இருந்து களைந்து விட்டுப் போக வேண்டும்.
சொல் விளக்கம்
[தொகு]- perception - புலனுணர்வு;
- representation - முறையீடு;
- cognition - அறியும் ஆற்றல்;
- hypothesis - கருதுகோள்;
- behavior - போக்கு, நடை முறை;
- gesture - சைகை;
- perspective - கண்ணோட்டம், நோக்குநிலை;
- embodiment - உள்ளடக்க நிலை
- goal - குறிக்கோள்;
- purpose - நோக்கம்;
- plan - திட்டம்;
- intention - உள்நோக்கம், செயல் நோக்கம்;
- intend - உள்நோக்கு, உள்நோக்கம் கொள்;
- commit - ஒப்புவி;
- commitment - ஒப்புவுமை, ஒப்படைப்பு, பொறுப்பு;
- responsibility - கடமை.