பேச்சு:உலர்தாவரகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரும்பாலான சொற்களை ஒலிபெயர்க்கும் போது, தவறாக வர வாய்ப்புண்டு. தமிழில் ஒலிபெயர்ப்பு மாற்றம் செய்யப்பட்ட பெயர்களைக் கொண்டு இணையத்தில் தேடிப்படிப்பவர்க்கு, உரிய பலன் கிடைக்காது என்பதால் இப்பெயர்களை முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்து விட்டு, உரிய கட்டுரைகளுடன் இணைத்து விட்டு, ஒலிபெயர்க்க வேண்டிய சொற்களை விட்டு விடவா? இங்கு ஒலிபெயர்ப்புச் சொற்கள் என்பதற்கு பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் காட்டவிரும்புகிறேன்.(எ.கா.)H.G.W.J. Schweickerdt Herbarium என்பதில், Herbarium என்பதற்கு உலர்தாவரகம் என்று பொருள். இச்சொல்லுக்கு முன் உள்ள H.G.W.J. Schweickerdt என்பதனை அப்படியே விட்டுவிடவா? அல்லது எச்.சீ.டபள்யூ.சே. செவைக்கர்டு என ஒலிபெயர்க்கவா? கிரந்தத்தை, என் வாழ்நாளில் பயன்படுத்தக்கூடாது என்று உறுதியாயிருப்பதால், கிரந்த பழக்கம் உள்ளவருக்கு, நகைச்சுவையாகத்தான் இந்த ஒலிபெயர்ப்பு இருக்கும். அதோடு இந்த தமிழ் படுத்திய ஒலிபெயர்ப்புகளை (கிரந்தம் எழுத்துக்கள் இருந்தாலும் கூட) வைத்து, இணையத்தில் தேடி பலன் பெற முடியாது. ஆங்கில எழுத்துக்களில் இணையத்தில் தேடுவதால் பலன் கிடைக்கும். இதுவே எனது எண்ணங்கள். இனி பிற கண்டத்தின் பெயர்களை, எப்படி நான் ஆள வேண்டும். பிறரின் கருத்து தேவை.--≈ உழவன் ( கூறுக ) 17:28, 13 சூலை 2013 (UTC)

மொழிபெயர்க்கப்படாதவற்றை நீக்கியுள்ளேன். தேவைப்படுபவர்கள் அவற்றை ஆங்கில விக்கியில் இருந்து மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்.--Kanags \உரையாடுக 22:29, 26 சூலை 2014 (UTC)