பேச்சு:உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தக் கட்டுரையில் இரண்டாவதாக வரும் சட்டவரைபடத்தை எப்படி சரியாக்குவதெனத் தெரியவில்லை. யாராவது உதவுங்கள்.--கலை (பேச்சு) 09:18, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

மாற்றங்களுக்கு நன்றி மணியன். தமிழாக்கம் செய்ததும் சரியாகி விட்டதா என்ன? எப்படி இதனைச் சரிப்படுத்தினீர்கள் என்று புரியவில்லையே :(.--கலை (பேச்சு) 10:25, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
தேவையான வார்ப்புரு:Bar chart/bar உருவாக்கிய பின்னர் சரியானது. இனி சிவப்பு வண்ண உள்ளிணைப்புக் கட்டுரைகளை ஆக்க வேண்டும்.--மணியன் (பேச்சு) 10:28, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஆனால் இப்படி ஒரு வார்ப்புரு உருவாக்க வேண்டும் என்பதை எப்படி அறிவது? நான் அந்த சட்ட வரைபடத்திற்குரிய வார்ப்புருவை ஆங்கிலக் கட்டுரையிலிருந்து வெட்டி ஒட்டினேன். ஆனால் நீங்கள் சொல்லும் வார்ப்புரு:Bar chart/bar இருக்க வேண்டிய இடத்தில் ஏதோ இணைப்பு தேவைப்படுவதுபோலவே வார்ப்புரு அமைந்திருந்தது. அதாவது [[ ]] அடையாளங்களே காணப்பட்டன. அதற்கு வார்ப்புரு தேவை என்பது அங்கே பார்க்கும்போது புரியவில்லை. ஆனால் கட்டுரையில் வார்ப்புருக்கள் தேவை என்பது சிவப்பு நிற எழுத்துக்களில் தரப்பட்டிருந்தது. அவற்றை எங்கிருந்து பெறுவது என்பதுதான் புரியவில்லை. அவற்றை எப்படி கண்டு பிடிப்பது? நீங்கள் எப்படி அவற்றைப் பெற்றீர்கள்? எல்லாம் அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கின்றேன். மேலும் உள்ளிணைப்புக் கட்டுரைகளை ஆக்க எண்ணியுள்ளேன். அதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால், அனைத்து உலக பாரம்பரியக் களங்களுக்கும் தமிழ் தெரியவில்லை :(.--கலை (பேச்சு) 11:37, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

உங்கள் தொகுத்தல் பெட்டிக்கு கீழே சென்றால் எந்தெந்த வார்ப்புருக்கள் தேவை என்று தெரியும். (இங்கு குறிப்பிட்டப் பகுதியில் உள்ள அனைத்து வார்ப்புருக்களுமே பட்டியலிடப்பட்டிருக்கும்..இவற்றில் சிவப்பிணைப்புகள் உள்ளவை தமிழ் விக்கியில் இல்லாதவை) இவற்றை ஆங்கில விக்கியிலிருந்து வெட்டி ஒட்ட வேண்டியதுதான்.
உலக பாரம்பரியக் களங்களுக்கானத் தமிழ் தெரியவில்லை என்றால் என்ன, விக்கியில் நீங்கள் ஒலிபெயர்த்து எழுதினால் அவற்றை சரிபடுத்த பலரும் உள்ளனரே..அதுதானே விக்கி கூட்டிணைவு பங்களிப்பு. எனவே தயங்காது பணியில் இறங்குங்கள். இந்தப் படை போதுமா என்று அனைவரும் பிழை திருத்த வருவர் ;) --மணியன் (பேச்சு) 13:19, 9 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]