பேச்சு:உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கட்டுரையில், 

"ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் இடம்பெற்றன." என்று உள்ளது.

ஆனால், ஏழாம் மாநாடு மொரீசியசு நாட்டில், மோக்காவில் 1989 டிசம்பர் 4 முதல் 7 வரை நடைபெற்றது என்றும்,எட்டாவதுமாநாடு தமிழ்நாடு, தஞ்சாவூரில் 1995 சனவரி 2 முதல் 5 வரை நடைபெற்றது என்றும் வேறொருநூலில் (பார்க்க: மா.இராமையா,மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம். சென்னை:நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்(பி)லிட்,2008. ப.53) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு சரி, ஆனால் நடைபெற்ற நாட்களில்தான் வேறுபாடு?. யாராவது உதவுங்களேன்!--Meykandan (பேச்சு) 09:53, 8 மார்ச் 2012 (UTC)

மெய்கண்டான், கட்டுரையில் தரப்பட்ட தகவல்கள் பொதுவாக செம்மொழி மாநாட்டையொட்டி அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட நூலை ஆதாரமாகக் காட்டி கட்டுரையில் வேண்டிய திருத்தங்களைச் செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 11:00, 8 மார்ச் 2012 (UTC)