பேச்சு:உரிமம் பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பை தற்போதைக்கு சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்வு என்று மாற்றி உள்ளேன். எனினும், இத்தலைப்பை இன்னும் மேம்படுத்தலாம் என்று தோன்றுகிறது. இந்நூல் தமிழ் மார்க்சியப் பதிப்புக்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்று அறிவது அவசியம். right என்பதற்கு சரியானது என்பதை விட சிறந்த மொழிபெயர்ப்பு ஏதேனும் உள்ளதா?--ரவி 15:48, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி இதன் தமிழ் பெயர்ப்பை டாட்டர் மா.பா.குருசாமி என்பவரின் பேரியல் பொருளாதாரம் எனும் நூலில் இருந்தே நான் பெற்றுக்கொண்டேன்.எனினும் வேறு விடயங்கள் நானறியேன்.கலாநிதி 16:32, 2 செப்டெம்பர் 2006 (UTC)kalanithe

தலைப்பை உரிமம் பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்வு" என மாற்றலாமா? இல்லையெனில் ஹெகலின் உரிமம் என்பது போன்ற தவறான பொருள் தரக்கூடும். -- Sundar \பேச்சு 11:26, 13 ஜூன் 2007 (UTC)

ஆமாம் சுந்தர், அப்படியே மாற்றி விடலாம். அடைப்புகளுக்குள் நூல் என்பது தேவை தானா?--Kanags 11:44, 13 ஜூன் 2007 (UTC)

தலைப்பு இப்படி இருக்கவேண்டும் என்று எனக்குத்தோன்றுகிறது:

ஹெகலின் 'உரிமம் பற்றிய தத்துவம்': நூற்திறனாய்வு

--Profvk 17:22, 13 ஜூன் 2007 (UTC)

Prof VK அவர்களுக்கு, தங்கள் பரிந்துரை நன்று. ஆனாலும், விக்கியில் தலைப்புகளில் பொதுவாக ', ", மற்றும் : போன்றவையைத் தவிர்ப்பது நல்லது. ஆனாலும் இத்தலைப்பை மாற்றுத் தலைப்பாக இடலாம் என்பது என் கருத்து. நன்றி.--Kanags 23:52, 15 ஜூன் 2007 (UTC)