பேச்சு:உயிரிய உயிர்வளித் தேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உயிரிவேதிகள் என்பதை விட உயிர்வேதிகள் எனலாமா? உயிர்வேதிப் பொருள்கள் என்பதன் சுருக்கமாக உயிர்வேதிகள். --செல்வா 14:04, 3 ஏப்ரல் 2009 (UTC)[பதில் அளி]

உயிர்வேதிகள் என்று அழைக்கலாம் செல்வா. எனக்கு இன்னொரு யோசனை இதை Biological Oxygen Demandயை "உயிர் உயிர்வளித் தேவை" என்றும் Chemical Oxygen Demandயை ரசாயன உயிர்வளித் தேவை என்றும் அழைக்கலாமா?--கார்த்திக் 15:38, 3 ஏப்ரல் 2009 (UTC)[பதில் அளி]
Biological Oxygen Demand = உயிரிய ஆக்சிசத் தேவை அல்லது உயிரிய உயிர்வளித் தேவை. Biochemical Oxygen Demand = உயிர்வேதிகள் ஆக்சிசத் தேவை அல்லது உயிர்வேதிகள் உயிர்வளித் தேவை. --செல்வா 15:47, 3 ஏப்ரல் 2009 (UTC)[பதில் அளி]
உயிரிய உயிர்வளித் தேவை என்றே இட்டுக்கொள்ளலாம் செல்வா:) இத்தலைப்பை மாற்றிவிடுகிறேன்--கார்த்திக் 04:45, 4 ஏப்ரல் 2009 (UTC)[பதில் அளி]

biological=உயிரினவியல், உயிரியல் என்று தான் வரும். உயிரியிய எச்சத்துடன் கூடிய சொல் வராது.bio= உயிர், logus= to study,(கிரேக்க இலத்தின்)= (கல்வி, இயல்) என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். biochemical=bio+chemical, உயிரினவியல்+வேதியல், உயிரினவேதியியல் ...... தேவை, உயிர்வேதியியல் ...... தேவை. உயிரிய வராது. (உயிர்=bio) (இய=மேலே செல், கட= top) ஆக்சிஜன் 2(O2) =உயிர் வளி சரி, O1 மனோ ஆக்சைடு அ மனோஆக்சிஜன் மரண வளியா? பெயர் வைப்பது பேரு வைப்பது பெரிய விசயமில்லை அதற்கு சோறு வைக்கவேண்டும் அப்பொழுதான் அந்தப் பெயர் வாழும் பிறர் கண்களில் படும்.--123.236.90.235 00:38, 20 மே 2009 (UTC)[பதில் அளி]

biology என்றால் உயிரியல். biological என்றால் உயிரிய. "எச்சத்துடன் கூடிய சொல்"தான்! இய என்பது "மேலே செல்" என்று பொருளில்லை. இய என்பது இயல், இயம் என்பதன் குறுகிய வடிவம். ஆக்சிசன் என்பதை உயிர்வளி என்று எழுதியுள்ளார். உயிர்வளி என்பது ஆக்சிசனின் பெயர். உயிர்வளி ஈரணு மூலக்கூறு ஆயின் அதனை ஈரணு ஊயிர்வளி எனலாம். மூவணு உயிர்வளி ஓசோன் எனப்படும். உரையாடும் பொழுது "மரண வளியா" போன்ற போக்கில் உரையாடுவது வளர்முக உரையாடலுக்கு நல்லதல்ல. உயிர்வளி என்பது பொருந்தாது என நீங்கள் கருதினால், அதனைத் தயங்காது எடுத்துக்கூறுங்கள். தனியணு ஆக்சிசன் (atomic ozygen) என உண்டு, ஆனால் இதனை மனோ ஆக்சிசன் என்பார்களா? உயிர்வளி, ஈரணு உயிர்வளி (oxygen molecule), மூவணு உயிர்வளி (ஓசோன்) எனப் பல வடிவங்கள் உண்டு.--செல்வா 04:12, 20 மே 2009 (UTC)[பதில் அளி]

அப்படியானால் அவகாட்ராவில் உயிர்வளி மூவணு என்றும் ஈரணு என்றும் ஒதுக்கப்படுமா ஒரு வேதி பொருளுக்கு இருபெயர் இருக்கமுடியுமா? ஆக்சிஜன் நச்சுக்கும் பயன்படுகின்றது சுவாசிக்கவும் பயன் படுகின்றது. இதன்பொருட்டே அதை மாற்றாமல் அறிவியல் களஞ்சியங்களில் வெளியிட்டுள்ளனர். அதை உயிர் வளி என்று மட்டும் பெயரிடுவது எப்படி பொருந்தும். அதை அழுத்தத்தினால் திரவமாகவும் மாற்றுகின்றனர். அப்பொழுது திரவ உயிர் வளி என்ப்படுமா? அதுவே கார்பனாடு சேர்ந்தால் உயிர் கொல்லியாகவும் மாறுகின்றது. உயிர் வளி என்பது பொதுப்பெயர் அல்லவா? அதை எப்படி வேதிப்பெயரோடு ஒப்பிடமுடியும். வளி என்பது காற்று அதில் ஆக்சிஜனும் இருக்கும், கரியமில வாயு இருக்கும் ஏன் இன்னும் எல்லா வகை வாயுக்களும்தான் இருக்கும். உயிர் வளி என்பதை தெரிவிக்க கூட ஆக்சிஜன் என்ற வார்த்தை தேவைப்படுகின்றது. பகலில் கர்பன்டை ஆக்சைடு தாவரங்களுக்கு உயிர் வளி, இரவில் ஆக்சிஜன் உயிர் வளி. விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்பு என்பது முடிவுறா ஒன்று. அந்தப் பெயர்களில் பொதுவான வேதியல் பெயரை குறிப்பிட வேண்டுமேத் தவிர அதன் பண்பு பெயரை குறிப்பிடக்கூடாது. உயிர் வளி இருந்தால் உயிர் போகின்ற வளி இருக்கவேண்டும் இது இரண்டையும் ஒரே வேதிப் பெயர் கொண்ட வேதிப்பொருள் செய்யும் பொழுது அதன் ஒரு பண்பை மட்டும் குறிப்பிட்டு பெயரிடமுடியாது.--123.236.90.235 04:49, 20 மே 2009 (UTC)[பதில் அளி]

நல்ல கேள்விகள். ஆக்சிசன் என்பதில் எனக்கு ஓர் எதிர்ப்பும் இல்லை. ஆனால் பெயர் இடுவதன் முறைமை புரிந்து கொள்வது தேவை. கரி என்றால், கருப்பாய் இருப்பதால் அடுப்புக் கரிக்கு கரி என்று பெயர். அதே கரி யானைக்கும், எலிக்கும் கூடப் பெயராக வழங்கும். கருப்பான ஏதொன்றுக்கும் உடனே கரி எனலாகாது, ஆனால் அப்படி சுட்டு தந்து வழங்கும் முறைமை இருந்தால் அச்சூழலில் ஏற்பு பெறும். எனவே அது போல உயிர்வளி என்பது சிறப்பு கருதி ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு வழங்கும் பெயர். அது அறை வெப்பநிலையில், கடல் மட்ட அழுத்தத்தில் வளியாக இருக்கும். வெப்பநிலை, அழுத்தம் மாறினால் நீர்மமாக மாறும். அப்பொழுது அதனை உயிர்வளி நீர்மம் (அதாவது நீர்மமான உயிர்வளி; ஆங்கிலத்திலும் கூட liquified gas, liquid nitrogen என்னும் சொல்வழக்கு உண்டு) என்று கூறலாம். உயிர்வளி என்பது ஒரு சொல் (அதனை உயிர் வளி என்று பிரித்து எழுதுதல் கூடாது) அது ஒரு சுட்டுப்பெயர். உயிர்வளித் திண்மம் (திண்மமான உயிர்வளி, solid oxygen, solidified oxygen) என்றும்கூட சொலலாம். கார்பன்-டை-ஆக்சைடு என்பதுதான் நான் பரிந்துரைப்பது. கரிம ஈராக்சைடு என்றோ கரிம ஈருயிர்வளி என்றோ எழுதவேண்டும் என சொல்லவில்லை. ஏதோ சில இடங்களில் ஆக்சிசன் என்பதை உயிர்வளி என்பதால் தவறில்லை; ஐதரசன் என்பதை நீரகம் என்பதால் தவறில்லை. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆக்சிசன், ஐதரசன் என்று எழுதுவதே நல்லது. ஆங்கிலத்தில் ஆக்சிசன் என்பதே தவறான பொருளில் சூட்டப்பட்ட ஒன்று. --செல்வா 05:19, 20 மே 2009 (UTC)[பதில் அளி]