பேச்சு:உபநயனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபநயனம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உபநயனம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உபநயனம் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
உபநயனம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விளக்கம் தேவை[தொகு]

இருபிறப்பு கொண்ட சாதி என்றால் என்ன? இந்து சமயம் என்பது ஒரு பலக்கிய சமயம் என்பதால் இது எந்தப்பிரிவு நம்பிக்கை என்பதையும் குறிப்பிட்டால் நல்லது. மனுநூலின் படியா அல்லது வேறு மறை நூல்களின்படியா? -- சுந்தர் \பேச்சு 10:34, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

இருபிறப்பு கொண்டவர்கள் பிராமண,சத்திரிய மற்றும் வைசிய சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

Manu (whom Adi Sankar is pleased to quote frequently in his writings) says (Manu Smriti x.4): The Brahmin, the Ksatriya, and the Vaisya castes are the twice-born ones(dvijas). But the fourth, the Sudra, has one birth only. There is no fifth caste.

It is of course well known that added to their first birth in the mother's womb, the Brahmins, Ksatriyas, and Vaisyas are supposed to have a second birth derived from the upanayana or inititation ritual. The Aitareya Brahmana (i.3) gives a vivid description of this mimatic rebirth. As explained in the Aitareya Brahmana, the upanayana or initiation ritual is intended to introduce the individual to the full status of the priviliged class of people to whom is permitted this ceremony, the general descriptive epithet of which is accordingly the dvija or twice-born. The initiation rite or upanayana being forbidden for the sudra, he has only one birth and is hence without the rights and priviliges of the dvija. வலைப்பதிவு rashmun.sulekha.com/blog/post/2007/07/adi-sankar-on-dvijas.htm

மேற்கண்ட பதிவின்படி மனுநூலில் குறிப்பிட்டுள்ளது.தவிர ஐத்திரேய பிரமண விலும் விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆங்கிலவிக்கியை ஒட்டியே எழுதியுள்ளேன். −முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மத்வரின் வேதாந்தம் http://books.google.com/books?id=D9PyAUF9UD0C&pg=PA81&lpg=PA81&dq=dvijas&source=bl&ots=Ug42pqrmzv&sig=Whm71TuVSLjGQFwAtjWxu0nJ_Cw&hl=en&ei=4lR4SvOjD8z-kAXsoeGsBg&sa=X&oi=book_result&ct=result&resnum=5#v=onepage&q=dvijas&f=false

மணியன் 16:03, 4 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றி. இந்த விளக்கத்தைக் கட்டுரையில் தந்தால் சரியான புரிதலைத் தருவதாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 03:32, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

கருத்து[தொகு]

  • மணியன், முதற்கண் இக்கட்டுரையை இட்டமைக்கு நன்றி.
  • இக் கட்டுரையில் உள்ள கருத்துகளை இடும் முறையைப் பற்றியும், இது தொடர்பான வேறு சில கட்டுரைகள் பற்றியும் சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன். இவற்றை நடுநிலை கருதி கூற வேண்டும் என நினைக்கின்றேன். அருள்கூர்ந்து பொறுமையாக எண்ணிப்பார்த்து, என் கூற்றுகள் சரியில்லை, நடுநிலை இல்லை என்றால் தயங்காது மறுத்துக் கூறுங்கள். சமசுக்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நால்வருண பாகுபாடு பற்றிக் கூறும்பொழுது இவை யாருக்காக யாருடைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது என்பதைக் கட்டுரையில் குறிக்க வேண்டும். கட்டுரையில் நீங்கள் பொதுவாக பிராமணர்கள் ஐந்தாவது வயது முதலும், சத்திரியர்கள் பதிமூன்றாம் வயது முதலும் வைசியர்கள் பதினேழாம் வயது முதலும் இச்சடங்கை மேற்கொள்கின்றனர். என்று எழுதியுள்ளீர்கள். என் வேண்டுகோள் என்னவென்றால், இன்ன நூலில் இப்படி எழுதியுள்ளார்கள். இவை இன்னாருக்கென இன்னின்னார் கருதுகிறார்கள்/கருதினார்கள் என்று கூறுதல் வேண்டும். இப்படி ஏற்றத்தாழ்வுகளை ஒருசிலர் தாங்களாகவே எழுதிக்கொண்டு அதுதான் "பொது" என்பதுபோல எழுதலாகாது அல்லவா? அங்கு சத்திரியர், வைசியர், பிராமணர் என்பதெல்லாம் ஒருசிலர் தங்களுடைய பார்வையில் அவர்களாகவே கூறிக்கொள்ளும் கருத்துகள்தானே? தங்களை ஆரியர்கள் என்று கூறிக்கொளும் சிலர் ஆரியர்களுக்குள் பிராமணர், சத்திரியர், வைசியர் என பிரிவுகள் வைத்துக்கொண்டனர் என்று கூறிக்கொள்கிறார்கள். யார் ஆரியர் யார் ஆரியருக்கு அப்பாற்பட்டவர் என்பதெல்லாம் மிகுந்த சிக்கலான கேள்விகள். நீங்கள் கட்டுரையில் கூறும் "வருணத்தார்" அந்தந்த அகவையில் (வயதில்) இந்தச் சடங்கை செய்வதற்கான சான்றுகள் யாவை? எந்த இசுமிரிதியில் (smriti) இப்படி அகவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன? இசுமிரிதிகள் பலவாயிற்றே, அவற்றுள் எல்லாம் ஒரே மாதிரியாக இப்படியா சொல்கிறார்கள்? இந்த இசுமிரிதிகள் யாருக்காக? இவற்றை கட்டுரையில் குறிப்பிட்டு எழுதுதல் வேண்டும். அதாவது இன்ன இசுமிரிதி இப்படிக் கூறுகின்றது, இதனை ஏற்பவர்களும் ஏற்காதவர்களும் உள்ளனர் என்பதெல்லாம் குறிப்பிடல் வேண்டும். தமிழர்களில் எத்தனை விகிதம் இப்படி இந்த விதிகளை ஏற்று இச் சடங்கை அந்தந்த அகவையில் செய்கிறார்கள்/செய்தார்கள்? உபநயனத்தைப் பற்றி எழுதுவது மிகவும் பயனுடையது, ஆவணப்படுத்த வேண்டிய ஒன்றுதான், இங்கு இருக்கவேண்டிய கட்டுரை. ஆனால் கட்டுரையின் கருத்துகள் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதில் சில மாற்றுக்கருத்துகள் உள்ளன. நான் ஏதும் திருத்தும் முன் என் கருத்துகளை முன்வைக்கின்றேன்.

--செல்வா 04:39, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

செல்வா அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன். சமயம், பண்பாடு தொடர்பான எல்லா கட்டுரைகளிலும் இந்த தெளிவான விவரணை தேவை.

//இந்து சமயத்தில் விளையாட்டுச் சிறுவர்கள் கட்டுப்பாடு மிகுந்த மாணவப்பருவத்தை அடைந்ததை குறிக்கும் விதமாக அவர்களுக்கு பூணூல் அணிவிக்கப்படும் விழா உபநயனம் என அழைக்கப்படுகிறது.//

//இந்த சமயத்தில் வாழ்வின் இரகசியம் என கூறப்படும் காயத்திரி மந்திரத்தை அவனது தந்தை, தாயின் முன்னிலையில், ஓதி கற்றுக்கொடுக்கிறார். இது பிரம்மோபதேசம் என வழங்கப்படுகிறது.//

போன்ற வரிகள் பிறப்பால் இந்துவாக கருதப்படும் பெரும்பான்மையருக்கு பொருந்தாது. இப்படி பொத்தாம் பொதுவாக சொல்வதால் தான் "எல்லா இந்துக்களும் விலங்குக் கறி சாப்பிட மாட்டர்கள்" போன்ற தவறான கருத்துகள் அயலகத்தில் பரவியுள்ளன.--ரவி 08:06, 5 ஆகஸ்ட் 2009 (UTC)

முதற்கண் இக்கட்டுரை அரசியல் நடுநிலை தவறியதற்கும் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டதிற்கும் வருந்துகிறேன். சமயவியலில் ஆழ்ந்த ஆய்வு செய்ய எனக்கு ஆர்வமும் நேரமும் இருந்ததில்லை. மற்ற கட்டுரைகளைப்போலவே இதுவும் ஆங்கில விக்கியிலிருந்து மொழியாக்கமே. எனது அறிவுபூர்வ பங்களிப்பு எதுவும் இல்லை. ஆகையால் இதனை நீக்கவோ வேண்டிய மாற்றங்களை செய்யவோ எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இங்கு நிலவும் திறந்த மனப்பாங்கு மிகவும் போற்றற்குறியது. வாழ்த்துகள்! ----மணியன் 15:40, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
புரிதலுக்கு நன்றி, மணியன். நிச்சயம் உங்கள் தனிப்பட்ட நடுநிலையை யாரும் ஐயுறவில்லை. ஆனால், ஆங்கில விக்கிப்பீடியாவின் சில கட்டுரைகளில் (குறிப்பாக இனம், சமயம், வரலாறு, மொழி, பண்பாடு குறித்த கட்டுரைகளில்) மிக நுணுக்கமான நுண்ணரசியல் உண்டு. தமிழாக்கும் போது இதைக் கவனிப்பது நன்று.--ரவி 16:54, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
மணியன், உங்கள் மறுமொழிக்கு நன்றி. என் உணர்வுகள் பாதிக்கப்படவில்லை, அருள்கூர்ந்து புரிந்துகொள்ள வேண்டுகிறேன். உங்கள் நல்லுணர்வுகளுக்கும் என் நன்றி. நாம் கூறும் கருத்துகளை யாரும் மறுக்கொணாத வகையில் தக்க சான்றுகோள்களுடன் தருதல் வேண்டும் என்றும், தாம் படிக்கும் செய்திகள்/கருத்துகளில் சாய்வுகள் எதுவும் இல்லாததாக படிப்பவர் உணரவேண்டும் என்பதற்காகவே கூறினேன். பூணூல் அணியும் நிகழ்வின் படம் ஏதும் இணைத்தாலும் நன்றாக இருக்கும். --செல்வா 17:47, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உபநயனம்&oldid=3797276" இலிருந்து மீள்விக்கப்பட்டது