பேச்சு:உதயம் என்.எச்4 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் உதயம் என்.எச்4 (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமிழில் எழுதுகையில் ஆங்கில சொற்களை கலந்து எழுதுதல் சரியல்ல, புழக்கத்திற்கும் மொழி வளத்திற்கும் ஏற்றதல்ல. ஆங்கிலேயர்கள் ஜப்பானியப் பெயர்களை ரோமானிய எழுத்துக்களில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். (ரோமானிய/லத்தீன் எழுத்துக்களையே ஆங்கில மொழி பயன்படுத்துகிறது.). சீனப் பெயர்களை பின்யின் என்ற முறையில் எழுதுகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, சிங்கப்பூரை சீன மொழியில் சிஞ்சியாபோ என்கிறார்கள். இதை லத்தீன் எழுத்துக்களில் எழுதினால் xinjiapo என்றாகும். ஆக, வேற்று மொழிப் பெயரை அடைப்புக்குறிக்குள் அம்மொழியிலேயே எழுதலாம் தமிழில் எழுத வேண்டுமென்றால் எழுத்துப் பெயர்ப்பு செய்தே எழுத வேண்டும். s.p.balasubamaniam என்பதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று எழுதுகிறோம். s.p.பாலசுப்பிரமணியம் என்பது தவறு. அதே போல், இக்கட்டுரையின் தலைப்பை உதயம் என்.ஹெச்.4 என்றோ, உதயம் எனெச்4 என்றோ எழுதலாம். (aழgappan, ஞாnasundaram என்று திரைப்படங்கள் வந்தாலும், ஆங்கிலேயர்கள் அவர்கள் மொழி எழுத்துக்களிலேயே எழுதுவார்கள், aழgappan என்று எழுதமாட்டார்கள்.) மொழியின் விதிகளுக்கு எழுதுதலே சிறப்பு. நன்றி! -14:24, 7 மார்ச் 2013 (UTC)


தோழர் நீங்கள் கூறியவாறு பெயர் மாற்றப்பட்டுள்ளது சரிய என்பதை கவனிக்கவும் பிழை இருந்தால் திருத்தவும் நன்றி!−முன்நிற்கும் கருத்து Thaya1991 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி தோழரே! கட்டுரையின் உள்ளே படத்தின் ஆங்கிலப் பெயரை udhayam nh4 என்று குறிப்பிடலாம். தலைப்பில் NH4 என்பது தேவையில்லை. இது போன்ற பேச்சுப் பக்கங்களில் கருத்திடும்போது ~~~~ என்று எழுதினால் கையெழுத்துப் பதிவாகிவிடும்.. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:11, 7 மார்ச் 2013 (UTC)