பேச்சு:உடல்நல இயற்பியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடல்நலம் அல்லது உடற்நலம் என்றே பள்ளிப் பாடங்களிலும் நூல்களிலும் இதுவரை படித்திருக்கிறேன். உடநல என்பதோ அல்லது உடனல என்பதோ சரிதானா? தெரிந்து கொள்ள ஆசை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:07, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

உடல்நலம்/உடல் நலம் என்பதே சிறந்தது[தொகு]

கால்+நடை என்பது கால்நடை என்றாவது உண்டு, காநடை என்றோ கானடை என்றோ ஆவதில்லை. அதுபோலவே சொல்+நயம் என்பது சொல்நயம் என்றாகும்; சொனயம் என்றோ சொநயம் என்றோ ஆவதில்லை. கடல்+நண்டு = கடல்நண்டு (கடநண்டு, கடனண்டு என்பவை கடம்+நண்டு, கடன்+அண்டு என்றாகிவிடும்). மேலும், சொற்களை எளிமையாகக் கொண்டு பொருள் காணும் முறை பரவலாகும் இந்நாள்களில் "உடல்நலம்" என்று எழுதுவதே சிறப்பு என்பது எனது கருத்து.--பவுல்-Paul (பேச்சு) 03:25, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நன்றி பவுல். உடல்நல இயற்பியல் எனவே மாற்றலாம். ஆனாலும் செல்வசிவகுருநாதன் கூறுவது போல உடற்நலம், தொழிற்நுட்பம் போன்ற சொற்கள் சரியல்ல என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:29, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  • உடன்படுகிறேன், கனக்சு. "ல்+ந" "ற்ந" என்றோ, "ல்+நு" "ற்நு" என்றோ புணர்வதில்லை. லகரத்தை அடுத்து வல்லெழுத்து வரும்போது றகரம் இடலாம். எடுத்துக்காட்டு: உடல்+பயிற்சி = உடற்பயிற்சி; நெல்+பயிர் = நெற்பயிர்; கல்+குவியல் = கற்குவியல்.--பவுல்-Paul (பேச்சு) 10:57, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
புணர்ச்சி விதிகளுடன் தமிழிலக்கணத்தை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:07, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உடல்நல_இயற்பியல்&oldid=1480483" இலிருந்து மீள்விக்கப்பட்டது