பேச்சு:ஈலமைட்டு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

David McAlpin என்பார் தமிழுடன் மொழியினத்தொடர்புடைய மொழி என்று ஒரு ஆய்வுநூல் எழுதியுள்ளார். 80 க்கும் மேலான அடிப்படை சொற்களின் உறவு அடிப்படையைக் காட்டியுள்ளார். (David McAlpin, Proto-Elamo-Dravidian, Philadelphia 1981) இது பெரிய அளவில் மறுக்கப்படாவிட்டாலும், அதிகம் யாரும் முன்னெடுத்துச் செல்லவில்லை. இதே போல சுசுமோ ஓனோ அவர்கள் நிப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை இலக்கனக் கூறுகள் முதற்கொண்டு பயிர்த்தொழில் க்லைச்சொற்கள் வரை பலவும் எடுத்துக்காட்டினார், ஆனால் பல எதிர்க்கருத்துக்கள் கூறப்பட்டன. எலாமைட் மொழி-தமிழ்மொழி பற்றி அவ்வளவு எதிர்ப்புகள் இல்லை. ஆனால் அதிக வளர்ச்சியும் அடையவில்லை. --செல்வா 17:58, 28 ஆகஸ்ட் 2008 (UTC)

நான் இது பற்றிப் பல நூல்களிலும் வாசித்து உள்ளேனேயன்றி மக் அல்ப்பைனுடைய மூல நூலை வாசித்ததில்லை. இது பற்றிய தகவல்கள் இருந்தால் கட்டுரையில் சேர்த்து விடுங்களேன். மயூரநாதன் 18:10, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
நான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மல் ஆல்ப்பின் அவர்களின் மூல நூலைப் படித்திருக்கின்றேன். பின்னரும் இரண்டொரு முறை சில பகுதிகளைப் படித்திருக்கின்றேன். எங்கள் பல்கலை நூலகத்தில் இந்நூல் உள்ளது. அதிலிருந்து ஒரு சில கருத்துக்களையாவது சேர்க்கிறேன். நன்றி. செல்வா 18:19, 28 ஆகஸ்ட் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈலமைட்டு_மொழி&oldid=282416" இருந்து மீள்விக்கப்பட்டது