பேச்சு:இழான் பவுல் வீரப்பிள்ளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jean என்பது 'ழான்' என்பதற்குப் பதிலாக 'இயீன்' அல்லது'யீன்' அல்லது 'ஜீன்' என்று எழுதப்படுவது பொருத்தமென நினைக்கிறேன். --Anton (பேச்சு) 10:22, 24 சூன் 2012 (UTC)[பதிலளி]

பிரெஞ்சுத் தமிழர்கள் பலர் இப்பெயரை ழான் என்றே எழுதுகின்றனர். பிரெஞ்சு மொழியில் zhahn எனப் பலுக்கப்படும்.--Kanags \உரையாடுக 10:25, 24 சூன் 2012 (UTC)[பதிலளி]

Paul என்பதைப் பவுல் என்றுதான் தமிழ்ப் படுத்துவது வழக்கம். அவ்வாறிருக்க, பால் எனத் தமிழ்ப் படுத்தியிருப்பது பொருத்தமாகப் படவில்லை.--பாஹிம் (பேச்சு) 12:05, 24 சூன் 2012 (UTC)[பதிலளி]

ழகரத்தில் தமிழ்ச் சொல் தொடங்குவது வழமையில்லையே. --மதனாகரன் (பேச்சு) 14:38, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் tamil: ழான் பால் வீரபிள்ளை என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் இப்பெயரிட்டேன். இது வழமையில்லையெனில், பக்கத்திற்கு ஏற்ற பெயரிட தாங்கள் ஓர் ஆலோசனை கூறவும்.−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இழான் பவுல் வீரப்பிள்ளை என்று கூறலாம். இழான் இழாக்கு உரூசோ (Jean-Jacques Rousseau) என்னும் பக்கத்தையும் பாருங்கள். --செல்வா (பேச்சு) 15:08, 11 சூலை 2012 (UTC)[பதிலளி]

சான்றுகள்[தொகு]

பிரெஞ்சு மொழி தெரிந்தோர் சான்றுகளை சேர்த்து உதவுங்கள். ஆங்கிலத்தில் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. முன்னர் இந்த கட்டுரையை எழுதிய போது, கிடைத்த சான்றுகளை பல முறை தானியக்க மொழிபெயர்ப்புகளில் இட்டு படித்துப் பார்த்தே தகவல்களைச் சேர்த்தேன். அதனால் தகவலில் பிழையிருக்க வாய்ப்பில்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து, மொழிபெயர்ப்பை மேம்படுத்தி உதவுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:59, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]