பேச்சு:இளையர் (குடி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள தென்காசியாருக்கு வணக்கம்.
தங்களின் பேருழைப்பை மதித்து, அரிய தொண்டை மனத்தில் கொண்டு கட்டுரையில் விரிவாக்கம் செய்துள்ளேன்.
This is much ado about nothing.
We beat about the bush.
இந்தக் கட்டுரையைப் பொருத்தமட்டில் வேலையற்ற வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:12, 1 மே 2013 (UTC)[பதிலளி]

உங்களது பேருழைப்பைக் கொண்டு விரிவாக்கியது கண்டு மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:09, 1 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையில் உள்ள முரண்பாடுகளைக் களையுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 07:19, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

வரலாற்றுக் கட்டுரை என்றாலே முரண் இருக்கத்தான் செய்யும். நான் மூலத்தில் கொடுத்திருக்கும் நூலில் இருந்து எடுத்தது தான் இது. நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை இட்டு குழப்ப வேண்டாம். நீங்கள் ஆய்வாளர் என்பதால் இரண்டாம் நிலை மூலங்களில் உங்கள் கருத்துக்களை பதிந்து விட்டு பிறகு அதை இங்கே மேற்கோளோக கொடுங்கள். ஒருவர் சோழரில் இளையர் ஒரு பிரிவினர் என்கிறார் என்பதற்கு என் தரப்பில் இரண்டாம் நிலை சான்றாக கட்டுரையில் உள்ள மூல நூல் உள்ளது. அவர்கள் வாள் வீரர்கள் தான் என்பதற்கு நீங்கள் இரண்டாம் நிலை சான்றுகளை தாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:02, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

இளையர், என்போர் இளமைத் தன்மை உடையவர் என்பதைக் காட்டும் 50-க்கு சங்ககாலச் சொலலாட்சிகள் உள்ளன. அவற்றைக் காட்டி வாதாடுவது என் நோக்கம் அன்று. இத்துடன் விட்டுவிடுவது நட்பிற்கு அழகு. --Sengai Podhuvan (பேச்சு) 11:42, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியராக இருக்கும் நாம் நட்பிற்கு அழகா என்று பார்ப்பதை விட கட்டுரைக்கு அழகா என தான் பார்க்க வேண்டும். ஒருவர் தன் நூலில் (இரண்டாம் நிலை மூலம்) எழுதியதை மாற்றி/மறுத்து விக்கியில் எழுத முடியாது. அந்த நூலில் அவர் இளையர் என்று எழுதியதை வேறொருவர் தன் நூலில் மறுத்திருந்தார் என்றால் அதையும் சேர்க்கலாம். இளையர் என்னும் பெயருக்கு வாள் வீரர்கள் என்றும் இளையவர் என்றும் பொருள் வரும். இளையராயினும் (இளைய வயதிலும்) செருமான் கடியும் தென்னர் குலம் என்ற சிலம்பின் வரிகளை நான் மனதில் பதிந்திருக்கிறேன். ஆனாலும் ஒருவர் நூலில் எழுதியதை தவறென மறுக்க விக்கிப்பீடியா தொல்லியல்/வரலாற்று ஆய்வு கழகம் அல்ல.

கயவாகு காலம்காட்டி, தமிழகத் தாழிகளின் காலம் போன்றவற்றை தமிழ் ஆய்வாளர்கள் கணித்த முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றை மறுக்க என்னிடம் சான்றுகள் இருந்தாலும் ஆய்வாளர்கள் கருத்துகளை இரண்டாம் நிலை மூலங்களில் இவ்வாய்வாளர் கூறியது தவறு எனப் பதியாமல் விக்கிப்பீடியாவில் பதிய முடியாது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் செய்யுளுக்கு விளக்கம் கொடுத்ததை வைத்து உங்களைப் போல் வரலாற்று முடிவை எடுத்தால் அதுவும் இரண்டாம் நிலை முடிவே. அதை முறையான மூலங்களில் பதியாமல் நாம் இங்கு பதியக் கூடாது. மேலும் ஒருவர் கருத்தை மறுத்தால் அது நட்பிற்கு அழகல்ல என்று நினைப்பதும் என்னளவில் தவறான எண்ணமே. நெடுநாட்களுக்கு முன்னர் நான் ஒருவரின் கருத்தை மறுத்தேன். அதில் இருந்து அவர் என்னை எதிரியாகவே பார்க்கிறார். இதை போன்ற போக்கு தவிர்க்கப்பட்டால் விக்கிப்பீடியாவுக்கு நன்று. கட்டுரையில் ஏதும் முரண் இருப்பதாக தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:20, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

ஏற்கிறேன். மகிழ்கிறேன். தமிழ் நம்முடையது. விக்கி உலகப் பொது. வாழ்க வளமுடன். --Sengai Podhuvan (பேச்சு) 11:39, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இளையர்_(குடி)&oldid=1460650" இலிருந்து மீள்விக்கப்பட்டது