பேச்சு:இலத்தீன் கிரேக்க அறிவியற்பெயர்ப் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வா, வழக்கம் போல் நல்ல தமிழில் பெயர்த்துள்ளீர்கள். விக்கியர் பலரின் ஒத்துழைப்போடு இச்செயல் கைகூடும் என நம்புகிறேன். பட்டியலை நானும் சரிபார்க்க முன்வருகிறேன்.--பவுல்-Paul 18:37, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி பவுல். --செல்வா 19:39, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி சுந்தர்! இன்னும் பயனுடையதாக இப்பட்டியலை வளர்க்க இயலும். எடுத்துக்காட்டுகளிலும், உள்ளிணைப்புகள் தந்தும், தேவையான துணைக் கட்டுரைகள் எழுதியும், இப்பட்டியல் இன்னும் பயன் தருவதாகச் செய்ய இயலும். வரும் நாள்களில் செய்ய முயல்வோம்.--செல்வா 19:45, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

+2 தாவரவியல் பாடத்தில் இது போல் பல அறிவியற்பெயர்கள் வரும். பொருள் விளக்கிச் சொல்ல ஆள் இல்லாமல் மொட்டை மனப்பாடம் அடித்துப் படித்தோம். இப்போது பொருள் அறிந்து படித்துப் பார்க்க அருமையாக உள்ளது. நல்ல பணி. பாராட்டுகள், செல்வா--இரவி 23:12, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி இரவி. இன்னும் பல எடுத்துக்காட்டுகள் தந்து வளர்க்க வேண்டும்.--செல்வா 23:23, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]