பேச்சு:இலங்கை வரலாற்றுக் காலக்கோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை ஆட்சியாளர்கள் பட்டியல் ஏற்கனவே உள்ளது ஆனாலும் ஆட்சியாளர்கள் அல்லாத பிற முக்கிய சம்பவங்கள் அனைத்தினையும் தொகுத்து நீளமான காலக்கோடாக எழுத உத்தேசம்.--நிரோஜன் சக்திவேல் 21:38, 6 பெப்ரவரி 2007 (UTC)

இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் ஏனெனில் சில புத்தகங்களின் மூலம் முழுமையாக நம்பிவிட இயலாது.--நிரோஜன் சக்திவேல் 23:04, 7 பெப்ரவரி 2007 (UTC)


காலக்கோடுகள் ஆண்டுகள் முன்னிலைப்படுத்தித்தான் இருத்தல் அவசியமா அல்லது தலையங்கத்தினை முன்னிலைப்படுத்தி இக்கட்டுரையில் உள்ளது போலவும் எழுதலாமா தெரிந்தவர் விளக்குக.--நிரோஜன் சக்திவேல் 15:26, 10 மே 2008 (UTC)[பதிலளி]

காலத்தையொட்டியே இருத்தல் நலமென்று நினைக்கிறேன். மேலும் இங்குள்ளது போன்ற வரைபடமும் தரலாம். -- சுந்தர் \பேச்சு 16:17, 10 மே 2008 (UTC)[பதிலளி]


உசாத்துணையா உச்சாந்துணையா சிறந்தது உச்சாந்துணை என இளமையில் கற்றதன் ஞாபகம்.--நிரோஜன் சக்திவேல் 16:36, 10 மே 2008 (UTC)[பதிலளி]

உசாத்துணை சரியானது.--Kanags \பேச்சு 21:19, 10 மே 2008 (UTC)[பதிலளி]

இக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சில, முக்கியமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்பானவை, பெரும்பாலும் ஊகங்களே. எடுத்துக் காட்டாக, இராவணன் காலம், கடற்கோள்களின் காலம், கோணேசர் ஆலயத்தின் காலம், அநுராதபுரக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இன்னொரு அரசு இருந்தமை பற்றிய கூற்று என்பன சரியான சான்றுகளால் நிறுவப்படாதவை. சிங்கை நகரும், நல்லூரும் வேறு வேறானவை என்பதும், பல ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படாததும் விவாதத்துக்கு உரியதும் ஆகும். எனவே இவை பற்றிக் குறிப்பிடும்போது நிறுவப்பட்ட உண்மைகளைக் குறிப்பிடுவதுபோல் குறிப்பிடக்கூடாது. மயூரநாதன் 19:03, 11 மே 2008 (UTC)[பதிலளி]

அனைத்தும் திருத்தி எழுத முயன்று கொண்டிருக்கின்றேன். மயூரநாதன் குறிப்பிட்டதையும் ஏற்றுக்கொள்கின்றேன். திருத்தி எழுதுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 21:53, 11 மே 2008 (UTC)[பதிலளி]