பேச்சு:இலங்கை மீயுயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கையில் Supreme Court என்பதை "மீயுயர் நீதிமன்றம்" என்றுதான் அழைக்கப்படுகிறது. "உச்ச நீதிமன்றம்" என்று அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடுவதில்லை.--பாஹிம் (பேச்சு) 01:06, 11 திசம்பர் 2012 (UTC)

இலங்கை வழக்கு அதுவாகின், அவ்வாறே மாற்றி விடுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 00:41, 12 திசம்பர் 2012 (UTC)
supreme court உச்ச நீதிமன்றம் என்றும், high court உயர் நீதிமன்றம் என்றும் அரசுப் பத்திரிகை தினகரன் உட்பட ஊடகங்களில் எழுதப்படுகிறது.--Kanags \உரையாடுக 07:42, 12 திசம்பர் 2012 (UTC)
கனகேசின் கருத்தை ஏற்கிறேன். கூகிலில் "உச்ச நீதிமன்றம்" என தேடினால் 1,230,000 தேடல்விடைகள் கிடைக்கின்றன. "மீயுயர் நீதிமன்றம்" என தேடினால் வெறும் 510 விடைகளே கிடைக்கின்றன. மேலும் "மீ" எனும் முன்னொட்டு மீயுரை போன்ற கணனிசார் சொற்களாக வழங்கப்படுவதால், அது "supreme" என்பதன் பொருளை சரியாக உணர்த்துவதாகவும் இல்லை. இராம.கி ஐயா போன்ற மொழியியலாளர்களே சொற்பொருள் குறித்து விளக்க வல்லவர்கள். எனவே இலங்கை அரச ஆவணங்களில் இருந்தாலும் கூட நாம் அதனை ஏற்கவேண்டும் என்பதோ அதுவே சரியானது என்றோ கொள்ளவேண்டியதில்லை. (இலங்கை அரச ஆவணங்கள், பதிவேடுகள், பதாதைகள் என பல்வேறு கட்டங்களிலும் தமிழை சிதைத்தும் சீர்குழைத்துமே எழுதிவருவதையும் ஆங்காங்கே காணவும் கிடைக்கின்றன.) தவிர இலங்கை தமிழர் பேச்சுப் புழக்கத்திலும், செய்தி தாள்களிலும் "உச்ச நீதிமன்றம்" எனும் சொல்லே பரவலாக உள்ளது.--HK Arun (பேச்சு) 09:23, 12 திசம்பர் 2012 (UTC)
உச்ச நீதிமன்றம் என்ற பதமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அதுவே இலகுவாகவும் உள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:07, 12 திசம்பர் 2012 (UTC)

இலங்கையின் Supreme Court Complex இன் நுழைவாயிலில் மீயுயர் நீதிமன்றம் என்ற நற்றமிழ்ச் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. மீயுயர் என்பது நல்ல தமிழ்ச் சொல். அது ஒன்றும் தமிழைச் சீர் குலைப்பதன்று. இந்நிலையில் அதன் பெயரை மாற்றியுரைப்பது சரியா?--பாஹிம் (பேச்சு) 11:52, 18 திசம்பர் 2012 (UTC)

உச்சம், உச்சி, உச்ச போன்ற இலங்கையில் பெரும்பான்மையோரால் புழங்கும் சொற்களும் நல்ல தமிழ்ச் சொற்கள் தான். அதுவே இலங்கைத் தமிழரின் பெருவழக்காகவும், பொதுவழக்காகவும் இருக்கிறது. "உச்ச நீதிமன்றம்" எனும் சொல்லை "மீயுயர் நீதிமன்றம்" என நக்கீரன் மாற்றியதே //இலங்கையில் Supreme Court என்பதை "மீயுயர் நீதிமன்றம்" என்றுதான் அழைக்கப்படுகிறது.// எனும் உங்களின் அழுத்தமான கூற்றை நம்பித்தான். ஆனால் நான் உட்பட Kanags, சஞ்சீவி சிவகுமார் உட்பட மூவரும் இலங்கையின் பொதுவழக்கு எது என்பதை தெளிவாக எடுத்துரைத்ததன் பின்னரே கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் //நுழைவாயிலில் மீயுயர் நீதிமன்றம் என்ற நற்றமிழ்ச் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.// என்ற உங்கள் கூற்றும் எந்த ஆதாரமும் அற்றது. மூவரின் கருத்துக்களுக்கு எவ்வித பதிலோ, உங்கள் கூற்றுக்கான எந்தோ சான்றோ அளிக்காமல், ஏனைய பயனர்களின் கருத்துக்களையும் மதிக்காமல் மீண்டும் தன்னிச்சையாக மாற்றியது வரவேற்கத்தக்க விடயமல்ல. --HK Arun (பேச்சு) 02:27, 20 திசம்பர் 2012 (UTC)

நீங்கள் முதலில் தன்னிச்சையாக மாற்றியது தவறுதானே. இலங்கை அரச ஆவணங்களில் இருந்தாலும் கூட என்னும் கூற்றே, வேண்டுமென்றே அரசாங்கப் பயன்பாட்டை எதிர்ப்பதாகத்தானே உள்ளது. முன்னர் அரச ஆவணங்கள் என்று குறிப்பிட்டதும் பின்னர் நுழைவாயிலில் என்று குறிப்பிட்டதும் உண்மை. அவை முரண்பாடல்லவே. எந்த ஆதாரம் கேட்கிறீர்கள்? நானே நேரில் பார்த்துள்ளதை நீங்கள் இல்லையென்கிறீர்கள். கொழும்பில் கற்ற காலத்தில் நான் அந்த நீதிமன்றத்துக்கு மிக அருகிலேயே சில காலம் தங்கியிருந்தேன். அதன் பெயர் மீயுயர் நீதிமன்றம் என்றுதான் உள்ளது.--பாஹிம் (பேச்சு) 02:49, 20 திசம்பர் 2012 (UTC)

//நீங்கள் முதலில் தன்னிச்சையாக மாற்றியது தவறுதானே.// தவறான கருத்து இதில் எனது எந்த தன்னிச்சையான செயற்பாடும் இல்லை. மூவரின் கருத்துக்கும் எடுத்துக்காட்டல்களுக்கும் பின்னரே என்னால் மாற்றப்பட்டது. //இலங்கை அரச ஆவணங்களில் இருந்தாலும் கூட என்னும் கூற்றே, வேண்டுமென்றே அரசாங்கப் பயன்பாட்டை எதிர்ப்பதாகத்தானே உள்ளது.// தமிழ் விக்கி தமிழரின் சொத்து. இதில் இலங்கை அரசாங்கப் பயன்பாட்டை நாம் ஏற்கவேண்டிய தேவை இல்லை. தமிழரின் பொது வழக்கிற்கே முக்கியம் கொடுக்கப்படவேண்டும். //முன்னர் அரச ஆவணங்கள் என்று குறிப்பிட்டதும் பின்னர் நுழைவாயிலில் என்று குறிப்பிட்டதும் உண்மை.// உண்மை என்பது உங்கள் அளவில் இருக்கலாம் சிலவேளை நீங்கள் பார்த்தும் இருக்கலாம் இல்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு கருத்து தொடர்பில் கேள்வி எழும் போது அதற்கான ஆதாரம் கொடுப்பது கருத்திட்டவரின் கடமையாகும். //கொழும்பில் கற்ற காலத்தில் நான் அந்த நீதிமன்றத்துக்கு மிக அருகிலேயே சில காலம் தங்கியிருந்தேன்.// போன்ற சுய வாழ்க்கைக் குறிப்புகள் தேவையற்றது, அவை ஆதாரமாகவும் கொள்ளப்படுவதில்லை. இணையத்தில் என்றாலும் நுழைவாயில் படமிருந்து அதனை நீங்கள் சுட்டினால் அப்போது ஆதாரமாகக் கொள்ளலாம். --HK Arun (பேச்சு) 03:03, 20 திசம்பர் 2012 (UTC)

"மீ" எனும் முன்னொட்டு மீயுரை போன்ற கணனிசார் சொற்களாக வழங்கப்படுவதால், அது "supreme" என்பதன் பொருளை சரியாக உணர்த்துவதாகவும் இல்லை என்ற கூற்றுக்கு அடிப்படை இல்லை. மீ என்னும் முன்னொட்டு கணனிப் பயன்பாட்டுக்கு முன்னிருந்தே பயன்படுத்தப்படுவதே. அது வெறுமனே கணனி சார் சொற்களுக்காகவே என்று கூறுவது தவறு. இலங்கைப் பாராளுமன்றத்தின் (நாடாளுமன்றம் என்று உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுவதில்லை) உத்தியோகபூர்வ வலைத்தளம் மீயுயர் நீதிமன்றம் என்றே குறிப்பிடுகிறது.--பாஹிம் (பேச்சு) 03:24, 20 திசம்பர் 2012 (UTC)

மீயுயர்வு = Supremacy என்று EUdict அகராதி கூறுகிறது. "மீ" எனும் முன்னொட்டு மீயுரை போன்ற கணனிசார் சொற்களாக வழங்கப்படுவதால், அது "supreme" என்பதன் பொருளை சரியாக உணர்த்துவதாகவும் இல்லை எனும் கூற்று பிழை என்பது புரிகிறதல்லவா?--பாஹிம் (பேச்சு) 03:33, 20 திசம்பர் 2012 (UTC)
அந்த தளங்களில் இடப்பட்டுள்ளதை நான் அறிவேன். அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட 500 இடங்களில் "மீயுரை" என்றிருப்பதை நான் ஏற்கெனவே எனது உரையாடலில் சுட்டியுள்ளேன். அவை இலங்கைத் தமிழரின் பெருவழக்குமல்ல; பொதுவழக்குமல்ல. நீங்கள் சான்றாக முன்வைக்கும் அதே இலங்கைப் பாராளுமன்றத் வலைத்தளத்தில் உள்ள பல சொல்லாட்சிகள் தமிழுமல்ல. நீங்கள் கூறும் நுழைவாயிலில் மீயுயர் நீதிமன்றம் என்றே இடப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எங்கே? இலங்கைத் தமிழரின் பெருவழக்காகவும், பொதுவழக்காகவும் பயன்பாட்டில் இருப்பதற்கான ஆதாரம் எங்கே? அவற்றை வழங்குங்கள்; அதுவே இந்த பெயர் மாற்றத்திற்கு அவசியமானது.

--HK Arun (பேச்சு) 03:41, 20 திசம்பர் 2012 (UTC)

நீங்கள் ஏன் பேச்சைத் திசை திருப்புகிறீர்கள்? நான் முதலிலேயே குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எப்படிக் கூறுகின்றனவோ அவையே உத்தியோகபூர்வப் பெயர்களாகும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலிருந்து உத்தியோகபூர்வப் பெயருக்கு ஆதாரம் வழங்கினால், இங்கே பொதுப் பயன்பாடு பற்றிப் பேசுகிறீர்கள். ஒரு நிறுவனத்தின் அமைப்பு அதன் உத்தியோகபூர்வப் பெயரில் அழைக்கப்படக் கூடாதா? அதன் உத்தியோகபூர்வப் பெயரில் தலைப்பிடுவது தவறா?--பாஹிம் (பேச்சு) 03:48, 20 திசம்பர் 2012 (UTC)

உங்கள் வாதம் தன் கூற்றை நியாயப் படுத்தும் வகையிலான வாதம் மட்டுமே! //நீங்கள் ஏன் பேச்சைத் திசை திருப்புகிறீர்கள்?// இங்கு இடம்பெறும் உரையாடல் பொதுவெளியில் எழுத்தாவணங்களாக எல்லோரும் பார்க்கும் படியே உள்ளது. எனவே பேச்சைத் திசை திருப்பும் உரையாடலாக என்னுரையாடல் அமைந்துள்ளதா என்பதை வாசிக்கும் பயனர்கள் எளிதாக புரிந்துக்கொள்ளலாம். //அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எப்படிக் கூறுகின்றனவோ அவையே உத்தியோகபூர்வப் பெயர்களாகும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலிருந்து உத்தியோகபூர்வப் பெயருக்கு ஆதாரம் வழங்கினால்...// எந்த அரசாங்கமும் எவரது மொழியிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஒரு மொழி என்பது குறிப்பிட்ட மொழியினரின் உரிமை. மேலும் நீங்கள் சுட்டிய அதே தளத்தில்: "தேசிய", "தேசம்", "சபை" சேவை" "பொலிஸ்" "சமுர்த்தி" போன்ற தமிழல்லாத சொற்கள் இருப்பதையும் கவனிக்கவும். இவற்றையெல்லாம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இருப்பதற்காக நாம் ஏற்கவேண்டும் என்பதும் இல்லை. விக்கியில் பயன்படுத்த வேண்டும் எனும் கட்டாயமும் இல்லை. அவ்வாறான கூற்றுக்களை முன்வைக்காதீர்கள். இங்கே இந்த உரையாடல் இலங்கைத் தமிழரின் பொதுவழக்கு எது என்பதே. இங்கு பங்களிக்கும் இலங்கைப் பயனர் பலர் உள்ளனர். ஏற்கெனவே மூன்று இலங்கைத் தமிழர் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஏனையப் பயனர்களின் முடிவுக்காக எனது உரையாடலை இத்துடன் நிறைவு செய்கிறேன். --HK Arun (பேச்சு) 04:01, 20 திசம்பர் 2012 (UTC)
இந்த உரையாடல் தேவையற்று நீண்டு வருகிறது. மீயுயர் என்ற சொல் நல்ல தமிழ்ச்சொல்லே. நுழைவாயிலிலும் அவ்வாறே இருந்தால் அவ்வாறே இனிக் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடே. தனிக் கட்டுரையும் எழுதலாம். நுழைவாயிலை நாம் படம் பிடித்தோமானால், சந்தேகத்தில் உள்ளே தள்ளி விடுவார்கள்:).--Kanags \உரையாடுக 07:48, 20 திசம்பர் 2012 (UTC)

வணக்கம் கணம் பஹீம் அவர்களே. நீங்கள் தமிழை சற்று கொல்ல வெளிக்கிடுகிரீர்கள் போல் இருக்கிறது!!! "மீயுயர்" என்பது சுத்த தமிழ் என்றீகளே ஆனால் இது தமிழ் சொல்லே அல்ல!! இது எந்த மொழி என்று சற்று கூற முடியுமா?? காரணம் : நீங்கள் ஒரு பன்னாட்டு மொழியியலார் என்பதனால் கேக்கின்றேன்! "உச்ச நீதிமன்றம்" எனபது சரியானது. இதை ஒரு மாத காலத்துக்கு முன் இலங்கை நீதிபதி ஒருவரிடம் கேட்டு இருந்தேன் இப்போதான் அதை அவர் விளக்கமாக கூறி இருந்தார்!! நீதிபதி: யாழ்ப்பாணம் சிறுவர் சீர்திருத்த நீதிபதி திரு. சி. சிவகுமார் மல்லாகம் நீதிமன்றம்.

Notes to my edits[தொகு]

The term used in the constitution of Sri Lanka, by the Supreme Court itself and in every usage is "உயர் நீதிமன்றம்" not "மீயுயர் நீதிமன்றம்". I have never heard this term being used. The Supreme Court was not abolished in 1833, what was abolished; the 1802 proclamation was repealed and replaced by the 1833 Colebrooke constitution. The Supreme court website refers to fact of appeal to the Privy Council being abolished and the SC becoming the final court of appeal in Sri Lanka.--−முன்நிற்கும் கருத்து 113.59.210.217 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கொழும்பு புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தின் பெயர்ப்பலகையில் மீயுயர் நீதிமன்றம் என எழுதியுள்ளதாகத் தெரிவித்தே இக்கட்டுரையில் மீயுயர் நிதிமன்றம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் High Courts உள்ளனவா? அவற்றைத் தமிழில் எவ்வாறு அழைக்கிறார்கள்?--Kanags \உரையாடுக 23:32, 29 சூலை 2016 (UTC)