உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா.உ என்றால் பெயரின் initial என்று குழப்பிக் கொண்டேன். இது போன்ற தலைப்புகளை தவிர்க்கலாமே? ரவிராஜ் படுகொலை என்ற சுருக்கமான தலைப்பு பொருந்தாதா? இங்கு வழிமாற்றி விடப்பட வேண்டுமா?--Ravidreams 17:39, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

பா.உ என்ற சுருக்கம் தமிழில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. நாடுளுமன்றம் என்று கட்டுரையின் பயன்படுத்தியுள்ளார்கள். ஆமாம் அது பெயரின் முன்னெழுத்து போல வருகின்றது..

சுருக்கமான தலைப்பு பொருந்தாது. Specific ஆக இருப்பதே பொருந்தும் என்று தோன்றுகின்றது. த.வி தமிழ்நாடு, மற்றப் நாட்டு மக்களுக்கு பொதுவானதே எனவே, நாடும் குறிக்கப்படவேண்டும்.

பொதுமக்கள் மலிவாக கொல்லப்படும் பூமியில் ஒவ்வொரு கொலையும் செய்தியில் வருவதில்லை. மக்கள் தொகையாக கொல்லப்பட்டாலும் இப்பொழுது அதுவும் தொடர்கதையாகிவிட்டது. நா.உ இது கதியென்றால் சாதரணப் பொதுமக்கள் கதையை சொல்லவா வேண்டும்.

--Natkeeran 17:44, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]


இப்போதுள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை என்ற தலைப்புப் பொருத்தமாக உள்ளது. --கோபி 18:00, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டில் நா.உ, பா.உ இரண்டுமே MP என்ற சுருக்கம் அளவுக்குப் பிரபலமில்லை. அதனால் தான் நான் குழம்பினேன். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் (MLA = ச.உ!) என்று விரித்து எழுதும் வழக்கம் உண்டு. ராஜீவ் காந்தி படுகொலை என்று கட்டுரைத் தலைப்பு இருப்பது போல் ரவிராஜா படுகொலை என்றிருக்கட்டும் என்று நினைத்தேன். தற்போதைய தலைப்புக்கு ஆட்சேபணையில்லை.--Ravidreams 18:20, 10 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

ஆயுததாரி, மோட்டார் சைக்கிள்

[தொகு]

ஆயுததாரி, மோட்டார் சைக்கிள் - தமிழ்ச்சொற்கள் என்ன? மோட்டார் சைக்கிள் - பொறி வண்டி? உந்துருளி?--Ravidreams 14:17, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

உந்துருளி ஈழத்தில் பாவனையில் உள்ளது.--Kanags 20:28, 12 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
உந்துருளி இலங்கையில் பாவனையில் இருப்பினும் உந்துவது Push என்றவாறு ஆங்கிலத்தில் வருவதால் மீள ஆங்கிலமாக்கினால் Push Bike என்றவாறு வருவதை அவதானிக்கலாம். எனவே மோட்டார் சைக்கிள் என்றவாறே பயன்படுத்துவது கூடுதல் பொருத்தமாக இருக்கலாம் அல்லது ஆகக்குறைந்தது அடைப்புக்குறிக்குளாவது மோட்டார் சைக்கிள் என்பதைத்தரலாம் இது கூடுதல் விளக்கத்தைப் பயனர்களுக்கு ஏற்படுத்தும். --Umapathy 04:30, 13 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]